முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்கள் லைஃப் பார்ட்னரை தேர்வு செய்வது ரொம்ப கஷ்டமா இருக்கா..? உங்களுக்கான சில டிப்ஸ்

உங்கள் லைஃப் பார்ட்னரை தேர்வு செய்வது ரொம்ப கஷ்டமா இருக்கா..? உங்களுக்கான சில டிப்ஸ்

மாதிரி படம்

மாதிரி படம்

ஒருவருடன் நீங்கள் வாழ்க்கை பயணத்தில் அடியெடுத்து வைக்க விரும்பினால், சில முயற்சிகளை எடுக்க வேண்டும்.

  • Last Updated :

காதலி என்பவர் உங்களில் பாதி என்பதால், தடைகள் மற்றும் துன்பங்கள் எத்தனை வந்தாலும் உங்களுடன் இருக்க விரும்புவார். வெளிப்படையாக காதலை சொல்லிக்கொள்ளாவிட்டாலும், உங்களுடனேயே இருக்கும் ஒரு தூய்மையான உள்ளம். அவருக்கும், உங்களுக்கும் இடையிலான கனெக்டிவிட்டி என்பது நொடிப்பொழுதில் பற்றிக்கொள்ளும் தீப்பொறி போன்றதாக இருக்கும்.

அப்படியான ஒருவருடன் நீங்கள் வாழ்க்கை பயணத்தில் அடியெடுத்து வைக்க விரும்பினால், சில முயற்சிகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் காதல் தோல்வியில் முடிவடைய வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முன்பு அவர் தான் உங்கள் வாழ்க்கை பயணத்துக்கு ஏற்ற சரியான நபர் என்பதை ஒரு சில அணுகுமுறைகளை வைத்து உணரலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மன அமைதி

நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் இருந்தால், உங்களின் மனநிலை நிசப்தமாக இருக்கும். அவர்களுடன் அதிகப்படியான நேரத்தை செலவிட்டாலும், நேரம் போதாமையை உணர்வீர்கள். முதலில் தயக்கமும், ஒருவிதமான பதட்டமும் ஏற்படுவது இயல்பானது என்றாலும் இருவரும் வெளிப்பைடயாக ஒப்புக்கொள்ளும் வரை அவை நீடிக்கும். உள்ளார்ந்த மகிழ்ச்சியையும், மன அமையும் உங்களுக்குள் ஏற்படும்.

உணர்ச்சியில் ஒரே நிலை

உங்களுடைய மனது அவர்களுடன் மிகவும் ஒன்றிபோய் இருக்கும். அவர்களுடைய சோகத்தையும், ஏக்கத்தையும் உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது. உங்களுடைய மகிழ்ச்சியே அவருடைய மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவர்களும் அதேமனநிலையிலேயே இருப்பார்கள். நீங்கள் சாதிக்கும்போது, பார்ட்னரைத் தவிர வேறெவரும் உங்களை அந்தளவுக்கு பெருமை கொள்ள மாட்டார்கள்.

பரஸ்பரம் மதித்தல்

உங்களுக்கு இடையே வேறுபாடு இருந்தாலும், அணுகுமுறைகளில் வித்தியாசம் இருந்தாலும், ஒருவரின் புரிதலுக்கு மற்றொருவர் செவிசாய்த்து, மதித்து நடந்தால், நல்ல புரிதல் கொண்டவர்கள் என்று அர்த்தம். உங்களால் சேர்ந்து வாழ முடியும். அன்பு மட்டுமே உங்களின் இணைக்கும் புள்ளியாக இருக்கும்பட்சத்தில், இடையில் வேறுஎந்த பார்வைகளுக்கும் இடமில்லை.

லைஃப் பார்ட்னர் உங்களை கன்ட்ரோல் செய்ய நினைக்கிறாரா?- கண்டுபிடிக்கும் வழிகள்!

நீங்களாக இருத்தல்

நீங்கள், நீங்களாக இருப்பதை அவர் ரசிக்கிறார் என்றால், அது அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் அவரே உங்களுடைய காதலி. அவருக்காக நீங்கள் எந்த இடத்திலும் மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது. பொய்யாக நடிக்கத் தேவையில்லை. நீங்கள் யார் என்பதை விரும்புகிறாரோ, அதுவே உங்கள் இருவருக்கும் இருக்கும் புரிதலுக்கான மையப்புள்ளி. நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என அவர் விரும்பமாட்டார். மாறாக, எப்படி இருக்கிறீர்களோ அதனை விரும்புவார்.

போராட்டம்

உங்களுக்கு பிடித்தவர்களை அடைய வேண்டும் என்றால், காதலியாக இருந்தாலும்கூட போராடியாக வேண்டும். உங்களுக்கு இடையிலான காதலை வளர்த்தெடுக்க சில தியாகங்களையும், சமரசங்களையும் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். வெளிப்படையாக பேச வேண்டும். அவர் உங்களை விரும்புகிறார் என்றாலும், வெளிப்படையாக பேசாதவரை முடிவு கிடைக்காது.

நம்பிக்கை

உங்கள் பார்ட்னர் மீது நீங்கள் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். வேறொருவர் உங்களுக்கு இடையில் ஒருபோதும் நுழைமுடியாது என்ற தீர்க்கமான நம்பிக்கையே இருவருக்கும் இடையில் இருக்கும் உறவுக்கான அஸ்திவாரம். பார்டி, திரைப்படம் ஆகிய இடங்களுக்கு நண்பர்களுடன் செல்ல அனுமதிக்க வேண்டும். அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது. நீங்கள் போகமுடியவில்லை அல்லது அழைப்பு இல்லையென்றாலும், காதலிக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சைகை மொழிகள்

top videos

    வார்த்தைகளில் வெளிப்படையாக காதலை கூறிவிட முடியும் என்றாலும், சைகை மொழிகளே உள்ளார்ந்த அன்பை வெளிப்படுத்தும். நீங்கள் எங்கு இருந்தாலும், சைகை மொழிகள் மூலம் பேச முடியும். சொல்ல வந்ததை தெளிவாக சைகை மூலமாகவே கூறிவிட முடியும். இருவருக்கும் இடையில் இருக்கும் wave length அத்தகைய பவர்புல்லானது.

    First published:

    Tags: Love life, Marriage, Relationship