Home /News /lifestyle /

காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக்கொண்டால் இல்லற வாழ்க்கை நன்றாக இருக்குமாம்.. சொல்கிறது ஆய்வு..!

காலை 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக்கொண்டால் இல்லற வாழ்க்கை நன்றாக இருக்குமாம்.. சொல்கிறது ஆய்வு..!

செக்ஸ்

செக்ஸ்

வெளிநாட்டில் பலர் காலை எழுந்ததும், பல் துலக்குவது , உடற்பயிற்சி செய்வது போல் உடலுறவு கொள்வதையும் தினசரி கடமையாக செய்கின்றனராம்.

  • News18
  • Last Updated :
காலையில் செக்ஸ் வைத்துக்கொள்வது நல்லது என்பது மருத்துவர்களின் பொதுவான அறிவுரை. அது உடலுக்கும் நல்லது என்பதாலேயே அவ்வாறு கூறப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் ஃபோர்ஸா சப்ளிமெண்ட் வெளியிட்டுள்ள ஆய்வு காலையில் 7.30 மணிக்கு உடலுறவு வைத்துக் கொள்வது மிகவும் நல்லது என்று குறிப்பிட்டுள்ளது. ஏன் என்றும் சில காரணங்களை முன் வைக்கிறது.

அதாவது காலை நன்கு தூங்கி எழுந்து 45 நிமிடங்கள் ஓய்வு எடுத்தப் பின் சரியாக 7.30 மணிக்கு உடலுறவு மேற்கொண்டால் அதிக அளவிலான ஆற்றல் கிடைக்கும் என்று கூறுகிறது. அதோடு அந்த குறிப்பிட்ட மணி அன்றைய நாளையே உற்சாகமானதாக மாற்றும் என்கிறது. மன அழுத்தமும் குறையும் என்கிறது.



குறிப்பான அந்த 7.30 மணிக்கு உடலுறவு கொள்ளும்போது ஆண்களுக்கு testosterone என்கிற ஹார்மோன் சுரக்கிறது. அது ஆண்களுக்கான செக்ஸ் ஹார்மோன். அதனால் நீண்ட நேரம் செக்ஸ் மூட் நீடிக்குமாம். அதோடு அவர்களின் தசைகள், எலும்புகளை உறுதியாகிறது. அவர்களின் முடி வளர்ச்சிக்கும் உதவுமாம் அந்த ஹார்மோன்.

ஆய்வாளர்கள் 1000 ஜோடிகளிடம் இந்த ஆய்வை நடத்தி கேள்விகளை முன் வைத்துள்ளனர். அவர்களில் பலர் காலை எழுந்ததும், பல் துலக்குவது , உடற்பயிற்சி செய்வது போல் உடலுறவு கொள்வதையும் தினசரி கடமையாக செய்கின்றனராம். இதனாலேயே அவர்கள் நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை வாழ்வதாக தெரிவித்துள்ளனர். அவர்களுள் பலரும் அந்த 7.30 மணிக்கு தான உடலுறவு கொள்கின்றனராம்.

எனவே எந்தவேலையானாலும் இதையும் ஒரு வேலையாக செய்தால் உடற்பயிற்சியில் குறைப்பதைக் காட்டிலும் கூடுதல் உடல் எடையைக் குறைக்கலாம் என்று பரிந்துரைக்கிறது ஆய்வு.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Published by:Sivaranjani E
First published:

Tags: Lifestyle

அடுத்த செய்தி