இன்றைய நவீன யுகத்தில் ஆணும் பெண்ணும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுகின்றனர். இதனால் இருவருமே பொருளாதாரத்திலும் மனதளவிலும் நல்லதொரு காலர்ச்சியை பெற்றுள்ளனர். ஆனால் திருமணம் என்று வரும் பொழுது அன்றைய காலங்களை விட தற்போதைய மாடர்ன் யுகத்தில் விவாகரத்து கேட்டு நீதிமன்றங்களை நாடும் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தம்பதிகள் இடையே புரிதல் இல்லாமல் இருப்பது ஆகும்.
அவ்வாறு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடிய ஜோடிகள் பலவும் விவாகரத்து பெற்று முடித்து அதன் பிறகான வாழ்க்கையை வாழும் போது தான், நாம் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்பதை உணர துவங்குகின்றனர். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்று சொல்வார்களே கிட்டத்தட்ட அதே நிலை தான். அந்த வகையில் “குடிப்பதினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி சொல்வதற்கு ஒரு குடிகாரனைத் தவிர தகுதியான நபர் யாரும் இல்லை” என்று ஒரு வாக்கியம் உண்டு. அதுபோலவே விவாகரத்து பெற்ற ஆண்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்காமல் எப்படி சந்தோஷமாக வாழ்வது என்பதை பற்றி சில டிப்ஸ்களை கொடுத்துள்ளார்கள்.
உங்கள் துணையோடு நேரத்தை செலவழியுங்கள்:
நீங்கள் வேலையிலோ அல்லது நண்பர்களுடனோ எவ்வளவு பிஸியாக இருந்தாலும் உங்கள் பார்ட்னருடன் நேரத்தை செலவழிப்பது மிகவும் முக்கியம். நீங்கள் அவ்வாறு செலவழிக்கும் நேரம் தான் உங்கள் காதல் வாழ்க்கையை ஆழமானதாகவும் வலிமையானதாகவும் மாற்றுவதோடு ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும். மேலும் நீங்கள் அவருக்காக நேரம் செலவழிக்கிறீர்கள் என்பதே உங்கள் பார்ட்னருக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை கொடுப்பதோடு அவர் தனக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைப்பதாக மனதளவில் திருப்தி அடைவார்.
டேட்டிங் செய்யும் போதும் பாலின சமத்துவம் ஏன் அவசியம்..? தெரிந்துகொள்ளுங்கள்
எல்லாருக்கும் எல்லாமும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை :
உங்கள் பார்ட்னருக்கு நீங்கள் நினைப்பது அனைத்தும் தெரியும் என்றோ அல்லது அவரைப் பற்றி உங்களுக்கு அனைத்துமே தெரியும் என்று நினைப்பது இருவருக்கும் இடையில் மன வருத்தத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக நீங்கள் அவர் மீது வைத்துள்ள அன்பை அவருக்கு பேசிய புரிய வைக்க வேண்டும் அல்லது உங்கள் செயல்களின் மூலம் அதை உணர வைக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் வேறு பல விஷயங்களிலும் உங்கள் துணையை பற்றி சில எதிர்பார்ப்புகள் இருந்திருக்க கூடும். ஆனால் அதன்படி அவர் நடந்து கொள்ளாமல் இருந்தால் அவருக்கு அதை பேசி புரிய வைக்க வேண்டும். உங்கள் பார்ட்னருக்கு தெரியாத சில விஷயங்களை நீங்கள் அவருக்கு கற்றுக் கொடுக்கலாம். அதுபோலவே நீங்களும் அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் இதனால் ஒருவர் மேல் ஒருவருக்கு மதிப்பு கூடும்.
கோபத்தை கட்டுப்படுத்துங்கள் :
எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும். எப்பொழுதுமே பொறுமையை கையாள்வது நல்லது நீங்கள் உச்சகட்ட கோபத்தில் சொல்லும் ஏதேனும் வார்த்தையோ அல்லது செய்யும் ஏதேனும் ஒரு செயலோ உங்கள் வாழ்க்கையில் முக்கியமான திருத்தவே முடியாத தவறு செய்வதற்கு வழி வகுத்து விடும். உச்சகட்ட கோபத்தில் நீங்கள் கூறும் ஒரு வார்த்தை அவரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு அவரது மனதில் ஆறாத ஒரு வடுவை ஏற்படுத்தலாம். அதன் பிறகு நீங்கள் எவ்வளவு சமாதானம் செய்தாலும் அது காலம் உள்ளவரை அப்படியே தான் இருக்கும். இதற்கு நீங்கள் சில நிமிடங்கள் பொறுமையாக இருந்து கோபத்தை கட்டுப்படுத்தி, கோபம் அடங்கியவுடன் பேசுவது எவ்வளோவோ சிறந்தது.
எல்லாம் முடிந்தது... இனி இருவரும் பிரிந்து போவதுதான் சரியான முடிவு என உணர்த்தும் அறிகுறிகள்..!
“ரொமான்டிக் டேட்ஸ்” செல்லுங்கள்
உங்கள் பார்ட்னர் உடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்காவது ரொமான்டிக்கான இடங்களுக்கு பார்ட்னரை அழைத்துச் சொல்லுங்கள். சிறிய சிறிய பார்ட்டிகள் நல்லது தனிமையான மலை பிரதேசங்கள் ஆகியவற்றிற்கு அவரை அழைத்துச் செல்வதன் மூலம் இருவருக்கும் இடையில் உள்ள உறவை பலப்படுத்தலாம்.
பார்ட்னர் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள் :
எப்போதும் நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் உங்கள் மனைவி அல்லது கணவரின் கருத்தையும் கேளுங்கள். இதனால் மனதளவில் ஒரு திருப்தி ஏற்படுவதோடு நீங்கள் பார்க்காத கோணத்தில் ஒரு பிரச்சனையை அவர் அணுகி அதற்கு உங்கள் பார்ட்னர் சொல்லும் தீர்வு, உங்கள் தீர்வைவிட சிறந்ததாக இருக்கலாம்.
அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஆணாக இருப்பது எப்படி..? எக்ச்ளூசிவ் டிப்ஸ்
சுதந்திரம் கொடுங்கள் :
யாரும் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எப்படி உங்களுடைய வாழ்க்கையை பற்றி முடிவு எடுக்க உரிமை இருக்கிறதோ, உங்களுக்கு விருப்பப்பட்ட செயல்களை செய்வதற்கு உரிமை இருக்கிறதோ, அதேபோல உங்களது துணைக்கும் எல்லாம் உரிமையும் உள்ளது சரியோ தவறோ அவரது வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவுகளை அவரிடமே விட்டுவிடுங்கள். அதில் ஏதாவது தவறு ஏற்பட்டாலும் அதனை இருவரும் சேர்ந்து சரி செய்வோம் என்று அவருக்கு உறுதுணையாக கூடவே இருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage Life, Marriage Problems