எந்த வேலை செய்தாலும் தெளிவுடன் இருக்க மாட்டார்கள்... குழப்பத்துடனே இருக்கும் இந்த ராசிக்காரகள் யார் தெரியுமா..? 

எந்த வேலை செய்தாலும் தெளிவுடன் இருக்க மாட்டார்கள்... குழப்பத்துடனே இருக்கும் இந்த ராசிக்காரகள் யார் தெரியுமா..? 

மாதிரி படம்

வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுவது எளிதானதுதான் ஆனால் அந்த குழப்பத்தை ஊதி பெரிதாக்காமல் அந்த குழப்பத்திற்கு நல்ல முடிவை காண்பது தான் சாமர்த்தியம்.

  • Share this:
அனைவரின் வாழ்க்கையிலும் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். குழப்பங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் சீரழிவு, தவறான புரிதல், வருத்தம் என அனைத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த குழப்பமான மனநிலைக்கு காரணம் அவர்களின் பிறந்த ராசி கூட ஒரு காரணமாக இருக்கலாம். குழப்பத்தால் ஏற்படும் நன்மை ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுவது எளிதானதுதான் ஆனால் அந்த குழப்பத்தை ஊதி பெரிதாக்காமல் அந்த குழப்பத்திற்கு நல்ல முடிவை காண்பது தான் சாமர்த்தியம்.

சரியான நேரத்தில் சரியான செயலை குழம்பாமல் மேற்கொண்டால் வாழ்வில் மிகப்பெரிய வெற்றி நம்மை தேடி வரும். நம் பள்ளியிலோ, கல்லூரியிலோ நம்முடன் படிக்கும் மாணவர்களில் பலர் குழப்பமான மனநிலை உடன் இருந்திருப்பார்கள், அவர்களின் இத்தகைய மன நிலைக்கு காரணம் பொறுப்பற்ற தன்மையும் புரிந்து கொள்ளாத தன்மை என்று நாமும் நம் பள்ளி/கல்லூரியில் உள்ள ஆசிரியர்களும் அவர்களை திட்டுவதை நாம் பார்த்திருப்போம் ஆனால் அவர்களின் இத்தகைய நிலைக்கு அவர்களின் ராசியும் ஒரு காரணம் என்றால் நீங்கள் ஆச்சரியப்பட்டுத்தான் போவீர்கள்...!

சிம்ம ராசி (Leo):-

பிடிவாதமான சிம்ம ராசிக்காரர்கள் தனக்கு என்ன வேண்டும், எப்போது வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள், அதன் பின்விளைவுகளைப் பற்றி இவர்கள் ஒருபோதும் கவலைப்படமாட்டார்கள். இவர்கள் செயல்களில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். இவர்கள் புத்திக்கூர்மையும், தனக்கென தனி வழியும் கொண்டவர்கள். கற்பனை உலகிற்கும், நிஜ உலகிற்கும் இருக்கும் வித்தியாசத்தை அறியாதவர்கள் இவர்கள்.



இவர்கள் தாங்கள் விரும்புவதை அடைய தங்களின் வழியில் அனைத்து விதமான முயற்சிகளையும் செய்து கொண்டே இருப்பார்கள், அதனால் கண்டிப்பாக குழப்பங்கள் ஏற்படும், அதனால் யார் பாதிக்கப்பட்டாலும் இவர்கள் அதை நினைத்து கவலைப்படமாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள், நெருப்பு ராசிக்காரர்கள். இவர்களின் குழப்பங்கள் பிறரின் உணர்வுகளை புண்படுத்தும், பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும், பிறரின் நிம்மதியை கெடுக்கும் ஆனால் அதைப்பற்றிய புரிதல் இவர்களுக்கு இருக்காது. தன்னுடைய பொழுதுபோக்கிற்காக குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.

மிதுன ராசி (Gemini):-

பொதுவாக குழப்பங்களின் மிகப்பெரிய ரசிகர் என்றால் அது மிதுன ராசிக்காரர்கள் தான். இவர்கள் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் குழப்பங்களை உருவாக்குகிறார்கள். இவர்கள் ஆரம்பிக்கும் குழப்பம் எப்படி மாறும், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள். குழப்பங்கள் தான் இவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இவர்களின் தவறான முடிவுகளால் இவர்கள் நொடியில் உறவுகளை இழந்து விடுவார்கள்.

இவர்களின் அக்கறையின்மைக்கு அளவே இல்லை. எந்த விஷயத்திலும் மகிழ்ச்சி இருந்தால் இவர்களுக்கு போதும். ஆனால் அதன் உண்மை என்னவென்றால் இவர்களின் செயல்கள் அனைத்தும் குழப்பமானவையாகும். இவர்கள் எப்பொழுதும் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மிதுன ராசிக்காரர்கள் காற்று ராசியில் பிறந்தவர்கள். சிறு விஷயங்களுக்கு எல்லாம் எளிதில் மனம் உடைந்துவிடுவார்கள். எனவே இந்த ராசிக்கார்கள் தங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுவதன் மூலம், மனவலிமை அதிகரிக்கும்.

இந்த ராசிக்காரங்க சோஷியல் மீடியாக்களில் இந்த கேரக்டரில் இருக்காங்களாம்.. இதில் நீங்களும் இருக்கீங்களா?

கன்னி ராசி (Virgo):-

கன்னி ராசிக்காரர்கள் குழப்பத்தை வெறுக்கிறார்கள், ஆனால் இவர்களின் தினசரி வாழ்வில் இவர்களே பல குழப்பங்களுக்கு காரணமாக இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் தாங்கள் சொல்வதுதான் சரி என்று எண்ணம் கொண்டவர்கள், அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி. இவர்களுடன் உடன்படாத எவரையும் இவர்கள் கடுமையாக புண்படுத்துவார்கள். தாங்கள் சொல்வதுதான் சரி என்று நிரூபிக்க இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள், அதற்கான முழுக்கதையையும் உருவாக்குவார்கள். இவர்களை ஒருபோதும் முழுமையாக நம்பிவிடாதீர்கள். சரியாக இருக்க வேண்டும் என்ற இவர்களின் எண்ணம் உண்மையாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தை விட வலிமையாக இருக்கும்.



விருச்சிக ராசி (Scorpio):-

விருச்சிக ராசிக்காரர்கள் குழப்பத்தை விரும்புபவர்களாக மட்டுமின்றி அவர்கள் அதை விரும்புகிறார்கள் என்று நீங்கள் அறிய வேண்டுமென்றும் நினைப்பார்கள். குழப்பத்தை நேசிப்பதும் அதனை மக்களிடம் கொண்டு வருவதையும் இவர்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்கலாம். இவர்கள் மிகவும் புத்திசாலிகள், அதிக அன்பானவர்கள் ஆனால் மற்றவர்களை கையாளுவதிலும், பொய்க்கூறுவதிலும், மயக்குவதிலும் பூமியில் இவர்களை மிஞ்ச யாரும் இல்லை. காதலில் மோசமான குழப்பத்தை இவர்கள் ஏற்படுத்துவார்கள், அதனை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. இவர்களிடம் அதீத காதலை எதிர்பார்த்து இறுதியில் குழப்பத்துடன் காதல் முறிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ரிஷப ராசி (Taurus):-

ரிஷப ராசிகாரர்கள் எப்பொழுதும் உற்சாகமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இந்த ராசிக்காரர்களை பொறுத்தவரை குழப்பங்கள்தான் மகிழ்ச்சியை வழங்குவதாக நினைப்பார்கள். இதனால் அவர்கள் குழப்பங்களை விரும்புவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. குழப்பம் கட்டுப்பாடின்மை, கட்டுப்பாடற்ற சூழ்நிலை, எதிர்பாராத முடிவுகள் ஆகியவற்றை குறிக்கிறது. வரவிருக்கும் விஷயங்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது என்ற எண்ணம் இது, இந்த கட்டுப்பாட்டு-குறும்பு உலகில், உண்மையில் என்ன வரப்போகிறது என்று தெரியாமல் இருப்பது புதிய காற்றின் சுவாசம் போன்றது. எங்கெல்லாம் குழப்பங்கள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் இவர்கள் இருப்பார்கள். எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்ற இவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள்.

குழப்பத்தை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியுமா என்றால் கண்டிப்பாக முடியும். சிலர் குழப்பங்கள் த்ரில்லை வழங்குவதாக நினைப்பார்கள், சிலர் குழப்பத்தை விரும்புவார்கள் ஏனெனில் குழப்பங்கள் சிலருக்கு சூதாட்டம் தரும் உற்சாகத்தை வழங்கும். நல்ல ஆலோசனையை வேண்டுமென்றே கேட்காதவர்கள் குழப்பத்தை விரும்புவார்கள். இப்படி ஏன் செய்கிறார்கள்? ஏனென்றால் அவர்கள் குழப்பத்தைப் பார்க்க விரும்புகிறார்கள், இது அவர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும். இவர்கள் சிக்கலை உருவாக்கி அதில் வேடிக்கையை எதிர்பார்ப்பார்கள். ஆக மேற்சொன்ன ராசிக்காரர்களிடம் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் அவர்களின் குழப்பம் நம் வாழ்க்கையையும் பாதித்துவிடும்.
Published by:Sivaranjani E
First published: