• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • யாரை பற்றியும் கவலையில்லை.. எப்போதும் உல்லாசமாக இருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்..

யாரை பற்றியும் கவலையில்லை.. எப்போதும் உல்லாசமாக இருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்..

மாதிரி படம்

மாதிரி படம்

ஒருசிலர் தன்னுடைய துணையை வெளியில் அழைத்து செல்ல அரும்பாடுபடுவார்கள். ஒரு சிலருக்கு ஊர் சுற்றுவதென்பது கைவந்த கலையாக இருக்கும்.

  • Share this:
தங்களுக்கு பிடித்தவர்களுடன் உல்லாச பயணம் மேற்கொள்ளும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஒருசிலர் தன்னுடைய தங்கள் துணையை வெளியில் அழைத்து செல்ல அரும்பாடுபடுவார்கள். ஒரு சிலருக்கு ஊர் சுற்றுவதென்பது கைவந்த கலையாக இருக்கும். அழகுடன், பேச்சுத் திறமையும் சேரும்போது எடுக்கும் முயற்சி நிச்சயமாக எட்டாக்கனியாக இருக்காது. அப்படியான சில குணாதிசயங்களை இயல்பாகவே ஜோதிடப்படி 5 ராசிக்காரர்களுக்கு அமைத்திருக்கிறது.

மேஷம் ( Aries)

காதலிப்பது என்பது ஒரு சிலருக்கு பிறவி குணம் என்பார்கள். அதில் முதன்மையான இடத்தில் இருப்பவர்கள் மேஷ ராஷிக்காரர்கள். இவர்களுடைய அழகு மற்றும் இயல்பான பேச்சுத் திறமைக்கு எளிதாக காதல் அமையும். மற்றவர்கள் கடினமாக எண்ணுவதை எளிதாக செய்துவிட்டு செல்லக்கூடியவர்கள். இதனால், ஊர்சுற்றுவதிலும் அதிகம் நாட்டம் உடைய இவர்கள். தன்னுடைய பேச்சின் மூலம் பாட்னரை கவிழ்த்து ஊர் சுற்ற அழைத்துச் சென்றுவிடுவார்கள். இவர்களின் ஆளுமையே பாட்ர்னர் மீது முழுமையாக இருக்கும்.

இந்த 5 ராசிக்காரர்களுக்கு கன்னாபின்னா கோபம் வருமாம்.. உங்களுக்கு பிடிச்சவங்களும் இதில் இருக்காங்களா..?

மிதுனம் (Gemini)

ஊர்வாசிகள் என்ற பட்டத்தை மிதுன ராசிக்காரர்களுக்கு கொடுக்கலாம். சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களை ஒரு இடத்தில் நிலையாக பார்ப்பது அரிது. அழகும், கவர்ச்சியும் ஒருசேர மிதுன ராசிக்காரர்களுக்கு அமைந்திருக்கும் என்பதால், கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் பார்ட்னருடன் ஊர்சுற்றிக்கொண்டே இருப்பார்கள். தன் மீது நல்ல அபிப்ராயத்தையும் எப்படி உருவாக்க வேண்டும், அதற்கு என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்பதில் கில்லாடியாக இருப்பார்கள்.



சிம்மம் (Leo)

தலைமைப் பண்புக்கான அத்தனை குணாதிசயங்களும் சிம்ம ராசிக்காரர்களிடம் இருக்கும். இதனால் மற்றவர்களிடம் எளிதில் நட்பு கொள்வார்கள். அப்போது, அவர்களை ஈர்க்கும் நபருடன் இயல்பாக நெருங்கிப் பழக தொடங்குவார்கள். கண்ணால் பேசி மயக்குவதில் கில்லாடியான சிம்ம ராசிக்காரர்கள், கெமிஸ்ட்ரி ஓர்க் ஆகிவிட்டது என தெரிந்து விட்டால் நேரத்தை சிறிதும் வீணடிக்காமல் அன்பான பயணத்தை மேற்கொள்வார்கள்

விருச்சிகம் ( Scorpio)

உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்திக் கொள்வதில் வல்லர்கள் விருச்சிக ராசிக்காரர்கள். கமுக்கமான குணாதிசயத்தைக் கொண்டிருக்கும் இவர்கள், தங்களின் புன்சிரிப்பால் எளிதில் மற்றவர்களை கவர்ந்துவிடுவார்கள். புன்சிரிப்புக்காகவும், இவர்களின் குணத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பலரும் விருச்சிக ராசிக்காரர்களுடன் நெருங்கிப் பழக விரும்புவார்கள். இதில் கிடைக்கும் வாய்ப்புகளை விருச்சிக ராசிக்காரர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள்.



தனுசு (Sagittarius)

அன்பான குணம் கொண்டிருந்தாலும், புதிதாக பழகுபவர்களுடன் எளிதில் சேரமாட்டார்கள். ஆனால் தங்களுக்கு ஒருவரை பிடித்தவிட்டது என்றால் அவர்களை இம்ப்ரஸ் (Impress) செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். இதற்காக அவர்கள் செய்யும் வேடிக்கையான, நகைச்சுவையான செயல்கள் பார்னரை கவர்திழுக்கும். இதனால் தனுசு ராசிக்காரர்கள் மீது நல்ல எண்ணம் உருவாகி அவர்களுடன் பழகத் தொடங்குவார்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: