ஆபத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்பார்கள். அதனடிப்படையில், ஜோதிட நம்பிக்கைப்படி 5 ராசிக்காரர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு உதவும் குணாதிசயம் படைத்தவர்கள் என நம்பப்படுகிறது. இருந்தபோதிலும், ’தனக்கு மிஞ்சினால் தான் தானமும் தர்மமும்’ என்ற கொள்கைப்பிடிப்போடும் இருப்பார்கள். மற்றவர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு கொடுக்கும் எண்ணமும், ஆபத்தில் இருக்கும் நண்பர்களுக்கு உடனடியாக உதவும் எண்ணம் படைத்த 5 ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
கடகம் (Cancer)
மற்றவர்கள் மீது இயல்பாகவே அதிக அக்கறை கொண்டவர்கள் கடக ராசிக்காரர்கள். நண்பர்களையும், சுற்றத்தாரையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய தயாராகவே இருப்பார்கள். குறிப்பாக, ஆபத்து காலத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு உதவி தேவைப்படுவதை அறிந்தவுடன், அந்த இடத்துக்கு உடனடியாக சென்று தேவையான உதவிகளை செய்வார்கள். அன்பும், உதவும் குணமும் நிறைந்தவர்கள் கடக ராசிக்காரர்கள்.
ரிஷபம் (Taurus)
ரிஷப ராசிக்காரர்களும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர்கள். குறிப்பாக, எந்தவொரு பிரச்சனை என்றாலும் களத்தில் நின்று உதவக்கூடியவர்கள். பிரச்சனைகளை உணர்ச்சிப்பூர்வமாக அணுகாமல், தர்க்க ரீதியாக மட்டுமே அணுகுவார்கள். பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொண்டுவருவதோடு, எதிர்காலத்தில் பயணிப்பதற்கான நல்வழியையும் காட்டுவார்கள். ரிஷப ராசிக்காரர்களுடன் இருக்கும்போது, எத்தகைய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கலாம்.
துலாம் (Libra)
துலாம் ராசிக்காரர்களை நண்பர்களாக பெற்றவர்கள் அவர்களின் வாழ்வில் கிடைத்த பாக்கியம் என்றுகூட கூறலாம். உங்களுக்கான எந்தவொரு பிரச்சனைக்கும் துணை நின்று, அதில் இருந்து மீட்டு வரக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள். சரி மற்றும் தவறுகளை ஒரே நேர்கோட்டில் வைத்து, எது தேவையோ அதனை செய்ய வைப்பார்கள். குறிப்பாக, நம் வாழ்க்கை மிக நன்றாக இருக்க வேண்டும் என்பதில் துலாம் ராசிக்காரர்கள் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு சரி, தவறை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளும் பக்குவம் அவர்களிடத்தில் இருப்பதால், நிதானமாக பிரச்சனைகளை எதிர்கொள்ள கற்றுக்கொடுப்பார்கள்.
உங்களை சுற்றி இருப்பவர்களே நம்பிக்கை துரோகம் செய்கிறார்களா..? அதை கடந்து செல்லும் பாதை இதோ...
கும்பம் (Aquarius)
பிறருக்கு உபகாரம் செய்வதில் கெட்டிக்காரர்கள். பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் கும்ப ராசிக்காரர்களை நிச்சயம் காணலாம். ஒரு பிரச்சனையில் சரி எது என்பதையும், தவறு எது என்பதையும் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், பிரச்சனைகள் எதனால் ஏற்பட்டது என்பதையும் எடுத்துரைப்பார்கள். மேலும், என்ன செய்திருந்தால் பிரச்சனை வராமல் தடுத்திருக்கலாம் என்று கூறும் அவர்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய செயல்களையும் தயக்கமின்றி கூறுவார்கள். தனக்கு வேண்டியவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவர்களால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள்.
கன்னி (Virgo)
பிரச்சனைகளுக்கு சிறந்த அறிவுரை கூறுபவர்களின் முதன்மையானவர்கள் கன்னி ராசிக்காரர்கள். முகத்துக்கு நேராக எதையும் சொல்லி விடக்கூடிய ஆற்றல் படைத்த அவர்கள், பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவதற்கான சரியான வழிகளையும் கூறுவார்கள். யாரும் முகம் சுழிக்காத வண்ணம், தங்களின் கருத்துகளை சொல்லிவிடுவார்கள். அலுவலகத்திலோ, வீட்டிலோ ஏதேனும் பிரச்சனை இருந்தால், கன்னி ராசிக்காரர்களின் ஆலோசனைகளை பெற்று தைரியமாக அதன்படி நடக்கலாம். நிச்சயம் நன்மை பயக்கும் வகையிலான அறிவுரைகள் அவர்கள் வழங்குவார்கள்.