உங்க லவ்வருக்கோ, வாழ்க்கைத்துணைக்கோ, இப்படி ஒரு லைஃப்டைம் சர்ப்ரைஸ் கொடுத்துப் பாருங்க.. மறக்கவே மாட்டாங்க..

உங்க லவ்வருக்கோ, வாழ்க்கைத்துணைக்கோ, இப்படி ஒரு லைஃப்டைம் சர்ப்ரைஸ் கொடுத்துப் பாருங்க.. மறக்கவே மாட்டாங்க..

காதல்

வைரஸ் தொற்று காரணமாக பண்டிகை கால பர்ச்சேஸ் என்பது குறைந்துள்ளது. இருந்தாலும் மக்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் கிறித்துமஸ் பண்டிகையை நன்றாக கொண்டாடலாம்.

  • Share this:
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் உலக நாடுகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டிருக்கும். காரணம் கிறிஸ்துமஸ் பண்டிகை (Christmas) மற்றும் புத்தாண்டின் (New Year) வருகை ஆகியவை தான். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வீடு, பொது இடங்கள் அனைத்தும் வண்ண விளக்குககளால் ஜொலிக்கும். மேலும், கிறித்துமஸ் மரம், கேக், சாக்லேட், பரிசு பொருட்கள் என பண்டிகை நாள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பண்டிகை அந்த அளவுக்கு விமரிசையாக நடக்குமா என்பது சந்தேகமே.

மேலும் வைரஸ் தொற்று காரணமாக பண்டிகை கால பர்ச்சேஸ் என்பது குறைந்துள்ளது. இருந்தாலும் மக்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் கிறித்துமஸ் பண்டிகையை நன்றாக கொண்டாடலாம். மேலும், இந்த காலகட்டத்தில் உங்கள் அன்புக்குரிய துணைக்கு ஆடம்பர பொருளைதான் பரிசாக வழங்க வேண்டும் என்பது அவசியமில்லை. உங்களின் சில சைகைகள் மற்றும் வாக்குறுதிகள் மூலமும் கூட அவர்களின் மனதை நீங்கள் கவரலாம். அதன்படி, இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையில் உங்கள் அன்பான துணைக்கு நீங்கள் வழங்க வேண்டிய சில விஷயங்களை குறித்து காண்போம்.1. எந்த ஒரு விஷயத்தையும் மூடி மறைக்காமல் உங்கள் துணையிடம் வெளிப்படையாக சொல்வேன் என்று வாக்குறுதி கொடுங்கள். ஏனென்றால் கணவன் மனைவி இடையே வெளிப்படை தன்மை குறையும் போது இருவருக்கிடையே விரிசல் ஏற்படுகிறது. இதனால் சில தம்பதிகள் பிரியும் சூழல் ஏற்படலாம். எனவே, விஷயங்களை மூடி மறைக்கலாம் உங்கள் துணையுடன் பேசி பிரச்சனைகளை தீர்த்து கொள்ளுங்கள்.

2. பெரும்பாலும் இல்லற வாழ்க்கையில் பெண்கள் சற்று சுயநலத்துடனே இருப்பர். எப்போதும் அவர்கள் செய்யும் வேலைகளை அவர்களது கணவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் உங்களின் சுயநலத்தை கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு உங்களது கணவரின் நிலையில் இருந்து சற்று யோசித்து பாருங்கள். அவரின் மனதில் என்ன இருக்கிறது எனபது உங்களுக்கு புரியும். சில விஷயங்களை நீங்கள் செய்யும் போது உங்கள் கணவருக்கு பிடித்தார் போல் செய்தால் வாழக்கை மகிழ்ச்சியில் நிறையும்.

3. உங்கள் துணையை தவிர்த்து வேறு ஒருவரை எப்போதும் மனதில் நினைக்க வேண்டாம். அது உங்கள் இல்லற வாழ்வை பாழாக்கிவிடும். நீங்கள் உங்கள் பழைய காதலர் அல்லது காதலியுடன் பேசுவது, அதனை உங்கள் கணவர் அல்லது மனைவியிடம் இருந்து மறைப்பது போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். தாம்பத்ய உறவில் கணவன் மனைவி தவிர்த்து வேறு எந்த நபரும் உள்ளே நுழைந்தால் வாழ்க்கை சரியற்றதாகி விடும்.4. முடிந்து போன விஷயங்களை ஒருவர் மீண்டும் மீண்டும் பேசுவதால் கணவன் மனைவி இடையே விரிசல் ஏற்படுகிறது. உதாரணத்திற்கு எப்போதோ நடந்த ஒரு தவறால் ஏற்படும் பிரச்சனைக்கு பிறகு அந்த தவறை மன்னித்து நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். ஆனால் அவற்றால் ஏற்பட்ட காயங்கள் உங்கள் மனதை விட்டு என்றும் நீங்காது. எதிர்காலத்தில் ஏதேனும் சண்டை வரும்போது அந்த தவறை சுட்டிக்காட்டி பேசுவீர்கள். அது இல்லற வாழக்கையில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தும். எனவே, ஒரு பிரச்சனை தீர்ந்து விட்டால் மீண்டும் அதை பற்றி பேச மாட்டேன் என உங்கள் துணைக்கு வாக்குறுதி கொடுங்கள்.

இந்த ராசிக்காரர்களை காதலித்தால் உங்க காதல் ஃபெயிலியரே ஆகாது..! ஏன் தெரியுமா..? 

5. எந்தவொரு உறவிலும் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு விஷயம் ஏற்றுக்கொள்வது. உங்கள் துணையை உங்களுக்கு ஏற்றவாறு மாறும்படி கேட்காமல் அவர் எப்படி இருக்கிறாரோ அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள். அதேபோல, சில சமயங்களில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை வரும் போது, உண்மையில் யார் மீது தவறு இருக்கிறது என்பதை அறிந்து அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.இந்த சிறு சிறு விஷயங்களை நீங்கள் கடைபிடிப்பதன் மூலம், கணவன் மனைவி இடையே உள்ள உறவு பண்டிகை காலம் போல மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த பொருட்களை நீங்கள் உங்கள் துணைக்கு பரிசளிப்பதை விட சிறு சிறு விஷயங்களில் ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்வதே உங்கள் துணைக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய வாழ்நாள் பரிசு
Published by:Sivaranjani E
First published: