Home /News /lifestyle /

குழந்தை இப்போது வேண்டாம் என்று தள்ளிப்போடும் வாழ்க்கை துணையை மாற்றுவதற்கான வழிகள்.!

குழந்தை இப்போது வேண்டாம் என்று தள்ளிப்போடும் வாழ்க்கை துணையை மாற்றுவதற்கான வழிகள்.!

மாற்றிக்கொள்ளாமை : வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக பயணிக்காது. ஏற்ற இறக்கங்கள் மற்றும் சூழ்நிலைகள் மாறும். அதற்கேற்ப நீங்களும் மாற்றிக்கொள்ள வேண்டும். இருவரும் சேர்ந்து பயணிக்கும்போது மட்டுமே அந்த வாழ்க்கை பயணம் மிகவும் இனிமையானதாக இருக்கும். ஒருவரை ஒரு குற்றம் சாட்டிக்கொண்டு வாழ்தல் என்பது கசப்பான அனுபங்களையே தொடரச் செய்யும். அமைதியான வாழ்க்கைகாக உங்களை மாற்றிக்கொள்வதில் தவறில்லை.

மாற்றிக்கொள்ளாமை : வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக பயணிக்காது. ஏற்ற இறக்கங்கள் மற்றும் சூழ்நிலைகள் மாறும். அதற்கேற்ப நீங்களும் மாற்றிக்கொள்ள வேண்டும். இருவரும் சேர்ந்து பயணிக்கும்போது மட்டுமே அந்த வாழ்க்கை பயணம் மிகவும் இனிமையானதாக இருக்கும். ஒருவரை ஒரு குற்றம் சாட்டிக்கொண்டு வாழ்தல் என்பது கசப்பான அனுபங்களையே தொடரச் செய்யும். அமைதியான வாழ்க்கைகாக உங்களை மாற்றிக்கொள்வதில் தவறில்லை.

சில நாட்கள் ஜோடியாக என்ஜாய் செய்யலாம் என்று எண்ணி அல்லது ஒரு குழந்தையை வளர்க்கும் அளவிற்கு வருமானத்தை உயர்த்தி பொருளாதார சூழலை நிலையாக்கி விட்டு பெற்று கொள்ளலாம் என்றோ நினைத்து விடுகின்றனர்.

குழந்தை என்று சொன்னாலே அனைவரது முகத்திலும் ஒரு பிரகாசம் ஏற்படும். எவ்வளவு வேலை பளு, டென்ஷன் இருந்தாலும் பிஞ்சு குழந்தையின் மழலை என்பது நம்மை கட்டி போடும் ஒரு மந்திரம். பெரும்பாலும் இன்றைய இளம் தலைமுறையினர் சரியான நேரத்தில் திருமணம் செய்து கொள்வது அரிதாகவே உள்ளது. அப்படியே ஒரு சிலர் சரியான வயதில் திருமணம் செய்து கொண்டு விட்டாலும் வாழ்க்கையை இன்னும் சில நாட்கள் ஜோடியாக என்ஜாய் செய்யலாம் என்று எண்ணி அல்லது ஒரு குழந்தையை வளர்க்கும் அளவிற்கு வருமானத்தை உயர்த்தி பொருளாதார சூழலை நிலையாக்கி விட்டு பெற்று கொள்ளலாம் என்றோ நினைத்து விடுகின்றனர்.


இது ஆண் அல்லது பெண் என திருமணமான யார் வேண்டுமானாலும் இது போன்ற முடிவை எளிதாக எடுத்துவிட்டு குழந்தை பேறை சில வருடங்களுக்கு தள்ளி போடுகின்றனர். தம்பதியரில் இருவருமே கருத்தொருமித்து இந்த முடிவை எடுத்தால் அது பிரச்சனையாக இருக்காது. ஆனால் இருவரில் ஒருவருக்கு குழந்தை பெற்று கொள்ளும் முடிவை தாமதப்படுத்துவதில் விருப்பம் இல்லை என்றால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட நேரத்தில் குழந்தை பெற்று கொள்வதை தள்ளி போட நினைக்கும் தங்களது துணையை மழலை செல்வம் வேண்டும் என்று நினைக்கும் ஒருவர், எவ்வாறு மாற்ற முடியும். இது போன்ற சிக்கல் எழுவதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.


வெளிப்படையாக பேசுங்கள்: குழந்தை இப்போது வேண்டாம் என்று வாழக்கை துணை சொல்லும் போது, திருமண வாழ்வில் நுழைந்தவுடன் நீங்கள் ஏன் ஒரு குழந்தை பெற்று கொள்ள விரும்புகிறீர்கள், உங்கள் வாழக்கை திட்டம் என்ன என்பது பற்றி மிகவும் வெளிப்படையாக உங்கள் துணையிடம் ஷேர் செய்து விடுங்கள். அதே போல குழந்தையை அவர் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணத்தை கேட்டு, அதை அலசி ஆராய்ந்து அவருக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்க்க குழந்தையையும் பெற்று கொண்டு உங்களால் எப்படி உதவ முடியும் என்பதை எடுத்து கூறுங்கள். இறுதியாக எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன் ஒருவருக்கொருவர் தங்களது எதிர்பார்ப்புகள் என்ன என்பதை பகுப்பாய்வு செய்யுங்கள்.


மற்றவர்களிடமிருந்து வரும் அழுத்தத்தை உதறி தள்ளுங்கள்.! திருமணம் ஆகி இவ்வளவு மாதங்கள் இவ்வளவு ஆண்டுகளை ஆகி விட்டதே. இன்னும் நீங்கள் குழந்தை பெற்று கொள்ளவில்லையா என இந்த சமூகம் கொடுக்கும் அழுத்தத்தை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் உங்கள் எதிர்காலத்திற்கு எது நல்லது என்பதை நீங்கள் இருவரும் மட்டுமே தீர்மானிக்க முடியும். எனவே உங்கள் முடிவுகள் பிறரது கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இருக்க வேண்டிய அவசியமில்லை.


ஆலோசகரின் உதவி.. தம்பதியரில் ஆண், பெண் இருவருமே பாலியல் ரீதியாக விரும்பத்தகாத நிகழ்வுகளை தங்கள் வாழக்கையில் சந்தித்திருக்க கூடும். அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் குழந்தை இப்போது வேண்டாம் என்ற காரணத்தையே முன் வைத்து இல்லற வாழ்வை தவிர்க்கலாம். இந்த சூழலில் ஒரு தொழில்முறை ஆலோசகரின் உதவி உங்கள் துணைக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கலை அடையாளம் கண்டு தீர்க்க உதவும்.


குழந்தை இப்போது பெற்று கொள்ளலாம் அல்லது வேண்டாம் என்று எடுக்கப்படும் முடிவு கணவன் - மனைவி இருவருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். துணைக்கு தெரியாமல் உறவின் போது கருத்தடை மருந்துகளை பயன்படுத்துவது அல்லது உண்டாகி இருக்கும் கருவுக்கு ஆபத்து நேரும் வகையில் மகப்பேறு மருத்துவரை அணுகுவது போன்ற முடிவுகளை ஒரு போதும் எடுக்க கூடாது. துணையின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் செயல்படுவதை விட, இருவரும் பேசி ஒருமித்த கருத்திற்கு வருவதே நன்மை அளிக்கும்.


 
Published by:Sivaranjani E
First published:

Tags: Baby, Children, Healthy sex Life, Husband Wife, Relationship

அடுத்த செய்தி