ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் கனவில் இதுவரை பார்க்காத நபர்களையெல்லாம் காண்கிறீர்களா..? இதற்கு என்ன காரணம் தெரியுமா?

உங்கள் கனவில் இதுவரை பார்க்காத நபர்களையெல்லாம் காண்கிறீர்களா..? இதற்கு என்ன காரணம் தெரியுமா?

கனவு

கனவு

ஏதேனும் ஒரு முறை அல்லது இரண்டு முறை, நீங்கள் இதுவரை அறிந்திராத நிகழ்வுகள்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கனவுகள் சில நேரங்களில் வினோதமாக இருக்கும். இதுவரை பார்க்காத இடங்கள், தெரியாத முகங்கள் மற்றும் புதுமையான சூழல்கள் ஆகியவை சிலருடைய கனவில் அடிக்கடி தோன்றும். நாம் வாழும் உலகில் இதுவரை கண்டிராத இடத்தையும், நபர்களையும் கனவில் பார்க்கும் சாத்தியம் உள்ளது. நம் உடலும் மனமும் கனவை எப்படி செயல்பட்டு கனவாக வெளிப்படுகிறது என்பதை பற்றிய துல்லியமான விவரங்கள் தற்போது வரை ஆராய்ச்சிக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. ஆனால் நீங்கள் உங்கள் கடந்த வாழ்க்கையை அதாவது முன்பிறவியைப் பற்றிய கனவுகளை காண்கிறீர்கள் தெரிந்து கொள்ள பின்வரும் அறிகுறிகள் உதவியாக இருக்கும்.

உங்கள் தோற்றமும் நடவடிக்கையும் வெவ்வேறாக இருக்கும் :

அதே உருவம், முகம் ஆனால் வேறு நபர்! பெரும்பாலான கனவுகளில் நீங்கள் நீங்களாகவே காட்சி அளிப்பீர்கள் அல்லது உங்கள் குழந்தைப்பருவத்தில் இருப்பதைப் போல கனவு வரும். ஆனால் உங்கள் முன் ஜென்மம் பற்றிய கனவுகள் பொறுத்தவரையில் தோற்றத்தில் மட்டுமே நீங்கள் அப்படியே இருப்பீர்கள். ஆனால் உங்களுடைய ஆளுமையும், குணமும், நடத்தையும், வேறு நபரைப் போல காட்சியளிக்கும்.

இதுவரை எங்குமே பார்க்காத முகங்கள் :

கனவுகளில் நாம் இதுவரை கண்டிராத முகங்களை காண்பதற்கு வாய்ப்பே கிடையாது என்று சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எங்கோ எப்பொழுதோ பார்த்த ஒரு முகம் தான், நமக்கே தெரியாமல் சப்-கான்சியஸ் மனதில் பதிந்து போன முகமும் தான் கனவில் மறுபடி தோன்றும் என்று பெரும்பாலும் கூறுவார்கள். அதாவது, உலகில் இல்லாத ஒன்றை, உங்களுக்குத் தெரியாத ஒன்றை நீங்கள் கனவில் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு முன்ஜென்மம் பற்றிய கனவுகள் பதிலாக இருக்கும். பரிச்சயமில்லாத சில முகங்கள் உங்களுக்கு கனவில் அடிக்கடி தோன்றினால் அது உங்கள் கடந்த பிறவியில் இருந்து வந்ததாக வந்திருக்கலாம். இத்தகைய முகங்கள் உங்களுக்கு அடிக்கடி கனவில் தோன்றலாம்.

உங்கள் மாமியாருடன் இணக்கமான உறவு ஏற்பட வேண்டுமா..? இந்த வழிகளைப் பின்பற்றுங்கள்!

நீங்கள் அறிந்திராத உங்களின் முன் ஜென்ம நிகழ்வுகள் :

ஏதேனும் ஒரு முறை அல்லது இரண்டு முறை, நீங்கள் இதுவரை அறிந்திராத நிகழ்வுகள் உங்களுடைய கனவில் தோன்றி இருக்கலாம். ஆனால், ஒரே மாதிரியான கனவுகள் அடிக்கடி உங்களுக்கு தோன்றினால் அந்த குறிப்பிட்ட சம்பவம் உங்கள் வாழ்வில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது என்பதைக் குறிக்கிறது.

காயங்களின் தழும்புகள் அல்லது விவரிக்க முடியாத பிறப்பு அடையாளங்கள் :

நீங்களே அறியாமல் சின்ன சின்ன காயங்கள் வழியே தழும்புகள் இருக்கக்கூடும். கடந்த காலத்தில் ஏற்பட்ட காயம் அது உங்களுடைய நிகழ்காலத்தில் அடையாளமாக வெளிப்படும்.

டேஜா வூ :

டேஜா வூ எல்லோருக்குமே தோன்றுவது தான். டேஜா வூ என்பது நீங்கள் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் இதேபோல் ஏற்கனவே நடந்துள்ளது என்பதை உணரும் அந்த நிமிடத்தில் தோன்றக் கூடிய ஒரு உணர்வாகும். உங்களுக்கு அடிக்கடி டேஜா வூ தோன்றினால் உங்களின் கடந்த காலத்தை, அதாவது முன் ஜென்மத்தில் நடந்த நிகழ்வுகள் உங்களுக்கு மீண்டும் இந்த ஜென்மத்தில் நிகழ்கிறது என்று அர்த்தமாகும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Dream