ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உங்கள் துணையிடம் எந்த சூழ்நிலையிலும் சொல்லக்கூடாத ரகசியங்கள்!

உங்கள் துணையிடம் எந்த சூழ்நிலையிலும் சொல்லக்கூடாத ரகசியங்கள்!

திருமண தம்பதிகள்

திருமண தம்பதிகள்

உண்மை நல்லது தான் செய்யும். ஆனால் திருமணமான ஆண்களோ அல்லது பெண்களோ தங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து உண்மைகளையும் கணவரிடமோ அல்லது மனைவியிடமோ கூறினால், அது வாழ்கைக்கு ஆபத்தாகிவிடும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

உங்களுக்குள் இருக்கும் சில முக்கியமான பழைய உண்மைகளை ரகசியமாக வைத்துக் கொள்வதுதான் நல்லது. மீறி உங்கள் பார்ட்னருக்கு தெரிந்தால் உங்கள் நிலை அதோகதி தான். கணவன்– மனைவிக்கு இடையே எந்த ரகசியமும் இருக்கக்கூடாது’ என்ற தார்மீக வரம்பினை திருமணத்திற்கு பின்புதான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். 

கணவர் அல்லது மனைவியிடம்  சொல்லக் கூடாத ரகசியங்கள் என்னென்ன? இளம் பருவ காதல் என்பது இப்போது சகஜமாகிவிட்டது. அது பல நேரங்களில் அறியாப் பருவத்து தவறுகளாகவும் மாறிவிடுகிறது. அவைகளால் ஏற்பட்ட விளைவுகள் எதுவும் நிகழ்காலத்தை பாதிக்காமல் இருக்க வேண்டும். பெண்கள், கணவரிடம் மனந்திறந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு கடந்த கால கசப்புகளை எல்லாம் சொல்லி விடக்கூடாது. அவற்றை சொல்லும்போது கணவர் மனதில் ‘இது மட்டும்தானா? இதுக்கு மேலும் இருக்குமா?’ என்ற கேள்விகள் மட்டுமல்ல, கற்பனைகள் நிறைந்த இன்னும் ஏராளமான கேள்விகளும் அவர் மனதில் முளைக்கத் தொடங்கிவிடும்.

நீங்களும் உங்கள் பார்ட்னரும் மிகச் சிறந்த நண்பர்களாக இருக்கலாம், ஆனால் நீங்கள் நிச்சயமாக சில விஷயத்தில் உடன்படாமல் போகலாம். எனவே, உங்கள் பார்ட்னர்ரிடம் நீங்கள் ஒருபோதும் சொல்லக் கூடாத சில பொதுவான ரகசியங்களை நாங்கள் உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். 

Ex. உடன் தொடர்பில் இருப்பது:

சில ஜோடிகளில் இருவருமே ரெமோ வகையை சார்ந்தவர்கள் தான், உங்கள் காதல் எப்படிப்பட்டது என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சினிமாவைப் பார்த்து அல்ல, அந்த வகையில் பின்வரும் உள்ளடக்கத்தில் எம்மாதிரியான அறிகுறிகள் இருந்தால் காதல் உறவில் விரிசல் ஏற்படும் என்பதை காண்போம்.

உங்கள் முன்னாள் காதலனோ/காதலியுடனோ ஒரு நல்ல உறவை ரீ ஸ்டார்ட் செய்ய நினைத்தால் அது உங்கள் பார்னருக்கு நிச்சயம் பிடிக்காது. உறவுகளில் எப்பொழுதும் உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுக்கு மட்டும்தான் என்று நீங்கள் நினைக்கலாம் அதே போலத்தான் உங்கள் வாழ்க்கைத் துணையும் அவர்களுக்கு நீங்கள் முக்கியம் என்று நினைப்பார்கள். அந்த வகையில் உங்கள் முன்னால் காதலன் அல்லது காதலியுடன் நீங்கள் தொடர்பில் இருப்பதை அவர்கள் தெரிந்து கொண்டால் நிச்சயம் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் ஏற்படும். தேவையற்ற வாதங்கள், சண்டை, சச்சரவுகள் என தொடங்கி கடைசியில் விவாகரத்து வரை போய் முடியும் அளவிற்கு மாறிவிடும். ஆகவே இந்த ரகசியத்தை பாதுகாப்பது முக்கியம்.

உடல் பண்புக்கூறு பிடிக்கவில்லை:

நம்மை சுற்றி இருப்பவர்களில் யாரும் 100% பர்பெக்ட் கிடையாது.  உங்கள் பார்னரிடமும் கூட நீங்கள் ஏற்றுக் கொள்ளும் சில குறைபாடுகள் இருக்கும். உங்கள் பார்ட்னருக்கு நீண்ட மூக்கு, குண்டான தோற்றம், ஒல்லியான தேகம் அல்லது சராசரி அளவை விட உயரமாக இருப்பது போன்ற ஏதேனும் உடல் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் இருந்தால் அதை அடிக்கடி சொல்லி அவர்களை வெறுப்பேத்த வேண்டாம். அப்படி செய்தீர்கள் என்றால் அதுவே ஒரு நாள் மிகப்பெரிய சிக்கலில் கொண்டுபோய் விடும். நீங்கள் கிண்டல் செய்யலாம், அந்த கிண்டலும் ஒரு வரம்பிற்கு தான் உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அதுவும் பொது வெளியில் செல்லும் பொழுது வரம்பை மீறினால் மிகவும் கஷ்டமாகி விடும்.

ஆபாச விருப்பத்தேர்வுகள்:

நம்மை சுற்றி இருக்கும் பலரும் ஆபாசத்தை மனதில் நினைத்திருப்பார்கள். இதில் தவறு ஏதும் இல்லை இது மனிதனின் இயல்பு தான். உங்களின் உயிராக உங்கள் பார்ட்னர் இருந்தாலும் சரி ஆபாசத்தை பற்றி பகிர கூடாது ஏனெனில் ஒவ்வொருவருக்கும் பிரைவசி என்று ஒன்று உள்ளது. அந்த வகையில் ஆபாசம் பற்றிய விஷயங்கள் அல்லது உங்களைப் பற்றிய ஆபாசங்கள் பொதுவெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். அது உங்கள் லைஃப் பார்ட்னர் ஆக இருந்தாலும் சரி.

உங்களுக்கு செக்ஸ் ஆசை இருந்தால் மட்டும் போதுமா:

வெளியில் கேள்விப்பட்டதை வைத்தோ அல்லது ஆபாச படங்களில் வருவதைப் போலவும் உங்கள் பார்ட்னரை நீங்கள் செக்ஸில் நடத்த விரும்பினால் அது நிச்சயம் உறவில் மிகப்பெரிய சிக்கலில் கொண்டுபோய் விடும். செக்ஸில் உங்கள் துணைக்கும் விருப்பம் இருக்கிறதா என்று தெரிந்த பின்னர்தான் செக்ஸில் ஈடுபடுவது சிறந்தது. இல்லையென்றால் உங்களின் ஆசை, நிராசை ஆவதுடன் உறவும் அதோடு முற்றுப் பெற்று விடும் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் லைப் பார்னருக்கு உடல்நிலை சரியில்லை அல்லது மனநிலை சரியில்லை என்றால் உங்கள் ஆசைகளை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்வது தான் சிறந்தது.  

மாமியார் மீதுள்ள கடுப்பு:

தோராயமாக 90க்கும் மேற்பட்ட திருமணம் ஆனவர்கள், தங்கள் மாமியாருடன் நெருக்கம் காட்டுவதில்லை. சில குடும்பங்களில் மாமியார்களும் சில குடும்பங்களில் மருமகள்களும் எலியும் பூனையுமாக இருப்பதே இதற்கு காரணம். எங்கோ ஒரு வீட்டில் மட்டும் தான் இவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் மனித உறவுகளில் விரிசல் என்பது சகஜம் தான் அதை பெரிதாகக் கூடாது.

உங்களுக்கு உங்கள் மாமியார் மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும் அதை உங்கள் பார்ட்னருடன் பகிர கூடாது. உதாரணமாக "உங்களுடைய பெற்றோரை கண்டாலே எனக்கு பிடிக்கவில்லை" என்று உங்கள் கணவரிடம் சொன்னீர்கள் என்றால் அவருக்கு உங்கள் மீது வருத்தம் ஏற்படும். உங்கள் மாமியார் உங்களிடம் செய்யும் விஷயங்களை உங்கள் கணவரே பார்த்து தெரிந்து கொள்ளும் வரை காத்திருப்பதுதான் சரியான தந்திரம்.

ஆரம்பத்தில் ஆண்கள்/பெண்கள் அனைவருமே தங்கள் பார்ட்னரிடத்தில் ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் மிக இனிமையானதாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கசப்பான ரகசியங்களை அப்போது சொன்னால், தனது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறிவிடும் என்று நினைப்பது தவறு. அதனால் இருவருக்கும் இடையே பிணைப்பு ஏற்படுவதற்கு பதில், நெருடல் உருவாகிவிடும்.

First published:

Tags: Marriage Bnefits, Relationship