இந்த 5 ராசிக்காரர்களுக்கு கன்னாபின்னா கோபம் வருமாம்.. உங்களுக்கு பிடிச்சவங்களும் இதில் இருக்காங்களா..?

இந்த 5 ராசிக்காரர்களுக்கு கன்னாபின்னா கோபம் வருமாம்.. உங்களுக்கு பிடிச்சவங்களும் இதில் இருக்காங்களா..?

மாதிரி படம்

சமூகத்தில் அவர்களின் மீதான மதிப்பை குறைக்கும் என்பதால், சூழ்நிலைகளை அறிந்து, அதற்கேற்றார்போல் முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்.

  • Share this:
சில ராசிக்காரர்கள் மற்றவர்களுடன் பழகும்போது மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள். ஆனால், அவர்களின் செயலுக்காக அரிதினும் அரிதாக மட்டுமே மன்னிப்பு கேட்பார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் சமூகத்தில் அவர்களின் மீதான மதிப்பை குறைக்கும் என்பதால், சூழ்நிலைகளை அறிந்து, அதற்கேற்றார்போல் முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். மற்றவர்களை காயப்படுத்தும் எந்தவொரு செயலையும் நாம் செய்யக்கூடாது. இருப்பினும், ஜோதிடத்தின்படி 5 ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே அந்த முரட்டுத்தனமான குணங்கள் இருக்கும்.

தனுசு (Sagittarius)

மற்றவர்களுடன் அன்பாக இருக்கும் அதேவேளையில் முரட்டுதனமாகவும் தனுசு ராசிக்காரர்கள் நடந்துகொள்வார்கள். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தங்களின் எண்ணத்தை வெளிப்படையாக காட்டும் சுபாவம் அவர்களுக்கு இருப்பதால், மற்றவர்களுக்கு அது முரட்டுத்தனமாக தெரியும். தங்களின் செயலுக்கா மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். அவர்களின் இந்த செயல் பிறருக்கு மனதளவில் கஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

emotional abuse

விருச்சிகம் (Scorpio)

தேள் எப்படி நொடிப்பொழுதில் மற்றவர்களை காயப்படுத்துகிறதோ அதைப்போல் தான் விருச்சிக ராசிக்காரர்களும் இருப்பார்கள். தாங்கள் இருக்கும் இடத்தில் மனதில் பட்டத்தை சொல்லிவிடுவார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். வார்த்தைகளும் கடுமையாக இருக்கும். சொல்லிய வார்த்தையை மறுபரிசீலனை செய்திருக்கலாமோ என்று ஒருபோதும் எண்ணமாட்டார்கள். நான் சொல்லியது சரி என்ற அளவிலேயே இருப்பார்கள் என்பதால், முரட்டுதனமானவர் என எளிதில் பெயர் பெற்றுவிடுவார்கள்.

நீங்கள் செய்யும் வேலை உங்கள் மனதை பாதிக்கிறதா? இந்த அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்

மிதுனம் (Gemini)

ராசிகளிலேயே மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் மிதுன ராசிக்காரர்கள் முதிர்ச்சியற்றவர்களாகவும் இருப்பார்கள். அவர்களால் தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது. சந்தர்ப்ப சூழல்களை முன்கூட்டியே அவர்களால் கணிக்க முடியாது. இதனால், விவரம் தெரியாமல் அவர்கள் பேசும் வார்த்தைகள், மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கும். எந்தநேரத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவும் மிதுன ராசிக்காரர்களிடம் குறைவாக இருக்கும்.மேஷம் (Aries)

ஆர்வமும், மன வலிமையும் மிகுந்து இருக்கும் மேஷ ராசிக்காரர்கள், தங்களுக்கு சௌகரியமான இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கான மதிப்பு, மரியாதை இல்லை என்று உணரும் அந்தநொடியில் வெடித்து எழுந்துவிடுவார்கள். முடிந்தளவு பொறுமையாக இருக்க நினைப்பார்கள், அது முடியாதபட்சத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களுக்கு தோன்றியதை செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

ரிஷபம் (Taurus)

தொழிலில் சிறந்தவர்களாக இருக்கும் ரிஷப ராசிக்காரர்கள், எந்தவொரு இடத்திலும் மிகவும் தன்னடக்கமாக இருப்பார்கள். மற்றவர்களைப் பற்றியும் யோசிக்க மாட்டார்கள். ஆனால், மற்றவர்கள் யாரேனும் அவர்களை தூண்டிவிட்டால் ரிஷப ராசிக்காரர்களின் குணம் மிகவும் முரட்டுத் தனமாக இருக்கும். அமைதியாக இருந்திருக்கலாம் என்று தூண்டியவர் எண்ணுமளவிற்கு அவர்களின் எதிர்வினை கடுமையாக இருக்கும். அதனால், சந்தர்ப்பசூல்நிலைகளை அறிந்து ரிஷப ராசிகாரர்களிடம் விளையாடுவது நல்லது.
Published by:Sivaranjani E
First published: