முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புதிதாக திருமணமான தம்பதிகள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள்..!

புதிதாக திருமணமான தம்பதிகள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள்..!

திருமணம்

திருமணம்

இங்கே எல்லைகள் என்று நாம் குறிப்பிடுவது திருமணதிற்கு பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பழகுவதற்கான கோடு ஆகும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

மனிதர்களாகிய நாம் பல தவறுகளை செய்கிறோம். இது சகஜம். ஆனால் சில தவறுகளை நீண்ட காலமாக செய்வது அல்லது தவறான புரிதல்கள் கொண்டிருப்பது உள்ளிட்டவை ஒரு உறவை வெகு சீக்கிரத்தில் ஆபத்தில் ஆழ்த்தி விடும் குறிப்பாக நீங்கள் திருமணமான தம்பதிகளாக இருந்தால் உங்கள் புதிய வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்படும்.

புதிதாக திருமணம் ஆனவர் அல்லது விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறவர் என்றால் நீங்கள் அல்லது உங்கள் மனைவி புதிய திருமண வாழ்வில் செய்ய கூடிய சில பொதுவான தவறுகளை பற்றி அறிந்து கொள்வது நலல்து. ஏனென்றால் அப்போது தான் அந்த தவறுகளை செய்யாமல் தவிர்த்து உங்கள் புதிய திருமண வாழ்க்கையை சிறப்பாக கொண்டு போக முடியும்.

புதுமணத் தம்பதிகளால் சிந்திக்கப்படாத மற்றும் அவர்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகளின் பட்டியல் இங்கே...

எல்லைகளை நிர்ணயித்தல்..

இங்கே எல்லைகள் என்று நாம் குறிப்பிடுவது திருமணதிற்கு பின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பழகுவதற்கான கோடு ஆகும். நீங்கள் புதிதாக திருமணமான பெண் என்றால் இதுநாள் வரை வார இறுதி நாட்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செலவழித்திருப்பீர்கள். ஆனால் திருமணத்திற்கு பின் கணவர் அல்லது கணவர் குடும்பத்தாருடன் வார இறுதி அல்லது விடுமுறை நாட்கள் நேரத்தை செலவழிப்பது அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் சேர்த்து தான். திருமணமான பிறகு மனைவியுடன் செலவழிக்க நேரம் ஒதுக்குவது ஒவ்வொவரு ஆணின் முக்கிய கடமை.

உங்கள் புதிய துணையும் தவறு செய்யலாம்..

திருமணத்திற்கு பின் உங்கள் புதிய வாழ்க்கை துணை எந்தத் தவறும் செய்ய கூடாது என்று நினைப்பதும், எதிர்பார்ப்பதும் தவறானது மற்றும் நியாயமற்றது. ஏனென்றால் அவரும் மனிதர் தான், நீங்களும் மனிதர் தான். எனவே இருவருமே தவறு செய்யும் சூழல் என்பது சகஜமானது. அதை பெரிது படுத்தாமல் கண்டிக்க வேண்டியதற்கு லேசாக கண்டித்து விட்டு அதை கடந்து செல்வதே புத்திசாலித்தனம். இதனால் காலப்போக்கில் ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் ஏற்பட்டு இருவருமே தவறுகளை குறைத்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பிடித்தவராக இருக்க இந்த குணங்களை நீங்கள் கடைபிடித்தாலே போதும்...

குடும்பத்தினர் & நண்பர்களை முற்றிலும் மறந்து விடாதீர்கள்.

நாம் முன்பே கூறிய படி, உங்கள் புதிய வாழ்க்கை துணைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தான். ஆனால் அதே சமயம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை முற்றிலும் மறந்து விட்டு குறுகிய எல்லையில் இருக்க வேண்டும் என்பது அர்த்தம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் மாதத்தில் ஒரு நாளாவது வெளியே சென்று வரும் பழக்கத்தை வைத்து கொள்ளலாம். உங்கள் துணையையும் அவரது நம்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வெளியே சென்று நேரத்தை செலவழிக்க ஊக்குவிப்பதன் மூலம் இருவருக்குள்ளும் நல்ல புரிதம் ஏற்படும். மாறாக நீங்கள் மட்டுமே இதை பின்பற்றினால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஷேரிங்..

ஒரே வீட்டில் இருப்பதால் டூத் பேஸ்ட்டை ஷேர் செய்து கொள்வதில் துவங்கி பல விஷயங்கள் உங்களுடன் ஒன்றாக வரும். இது நல்ல விஷயம் தான் என்றால் கூட இப்பழக்கத்தால் கூட பிரச்சனைகள் வரலாம். உதாரணமாக உங்களில் யாராவது ஒருவர் பேஸ்ட்டை பயன்படுத்திய பிறகு மூடி வைக்க மறந்து விட்டால் அது காய்ந்து அதன் பிறகு அதை பயன்படுத்த கடினமாக ஆகி விடும். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதங்கள் ஏற்படும். எனவே ஒன்றாக வாழ்ந்தாலும் கூட தனித்தனியான க்ரீம்கள் மற்றும் சீரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கொள்வது வீண் விவாதங்களை தவிர்க்க உதவும்.

வீட்டு அலங்காரம்..

நீங்கள் தனியாக இருக்கும் போது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டை அலங்கரிப்பது ஓகே. ஆனால் திருமண வாழ்வில் நுழைந்த பிறகு உங்கள் துணையின் ரசனைக்கு ஏற்பவும் வீட்டை அலங்கரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். இதன் மூலம் அவரது வீட்டில் அவர் இருப்பது போன்ற உணர்வை நீங்கள் அவருக்கு அளிக்கலாம். மாறாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே வீட்டை அலங்கரிப்பதன் மூலம் உங்கள் புதிய துணை வேறு இடத்தில இருக்கிறோம் என்று அசவுகரியமாக உணரலாம். இதனால் உங்களுடன் சரியாக பழக கூடிய மனநிலை அவருக்கு வராது.

First published:

Tags: Marriage Life, Relationship Tips