Home /News /lifestyle /

நேரம் கிடைக்கும்போது உங்கள் பார்ட்னரிடம் இந்த 25 கேள்விகளை கட்டாயம் கேளுங்கள் : துணையை புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு..!

நேரம் கிடைக்கும்போது உங்கள் பார்ட்னரிடம் இந்த 25 கேள்விகளை கட்டாயம் கேளுங்கள் : துணையை புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு..!

காதல்

காதல்

கணவன், மனைவி இருவருமே தங்களுக்குள் உள்ள புரிதலை அதிகரித்து, அன்பை மேம்படுத்த வேண்டும் என்றால், மனதில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வது அவசியமானது

கணவன், மனைவி இருவருமே தங்களுக்குள் உள்ள புரிதலை அதிகரித்து, அன்பை மேம்படுத்த வேண்டும் என்றால், மனதில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வது அவசியமானது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு இதுபோன்ற கேள்விகளை கேட்பதற்கு போதிய அவகாசம் கிடைப்பதில்லை. அப்படியே, ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் பேசுகின்ற சூழல் அமைந்தாலும், நாம் நினைத்ததை எல்லாம் மறந்து விடுவோம். மாறாக, பெர்சானிலிட்டி மற்றும் இதர சாதாரண விருப்பங்கள் குறித்த கேள்விகளோடு நாம் முடித்துக் கொள்கிறோம்.

ஆனால், நீங்கள் உங்களது வாழ்க்கைத் துணையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மிக சரியான கேள்விகளை ஒவ்வொன்றாக கேட்டு, தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் சரியான நேரம் எப்படி ஒதுக்குவது? எவ்வளவுதான் பரபரப்பான வாழ்க்கையில் நீங்கள் ஈடுபட்டிருந்தாலும், வாரத்திற்கு ஒன்றிரண்டு இரவுகளை, இனிமை காண வேண்டிய பொழுதுகளாக நீங்கள் நிச்சயம் செய்து வைத்திருப்பீர்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் இந்த கேள்விகளை நீங்கள் கேட்கலாம்.

* என்னை உங்களுக்கு நினைவுப்படுத்தும் உணவுகள் என்னென்ன?

* நான் உங்களுக்காக செய்யும் விஷயங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்ன?

* கடைசியாக என்னைப் பற்றி நீங்கள் எப்போது பாசிட்டிவ்வாக சிந்தனை செய்தீர்கள்?

* நம் உறவை நினைவுபடுத்தும் வகையில் உங்களுக்கு பிடித்தமான திரைப்படங்கள் என்ன?

* நாம் இணை சேர வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் நாளில், உங்களுக்கு மிகவும் பிடித்தமான நேரம் எது?



* செக்ஸ் அல்லாத விஷயங்களில் உங்களுக்கு என்னிடம் பிடித்தது எது?

* என்னிடம் மிகுந்த அன்போடு முயற்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செக்ஸ் விளையாட்டு ஏதேனும் யோசித்து வைத்துள்ளீர்களா?

* நம் இருவருக்கும் இடையேயான பந்தத்தில் எந்த விஷயம் இன்னும் வலுப்பட வேண்டும்?

* என்னை பற்றி நீங்கள் நினைத்த முதல் விஷயம் என்ன?

* ஏதேனும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்கிறீர்களா?

* உங்களுக்கு பிடித்தமான மியூஸிக் எது? பிடித்த பாடல் எது?

* நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்களுக்கு பிடித்த படம் எது?

* உங்கள் வேலை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

* கல்லூரி அல்லது பள்ளி வாழ்க்கை மகிழ்ச்சிக்குரியதாக இருந்ததா?



* உங்களுக்கு பிடித்தமான ஆசிரியர் யார்?

* உங்கள் பெற்றோர் குறித்து உங்கள் மனதில் நீங்கா நினைவுகளுடன் இருக்கும் விஷயம் என்ன?

* நீங்கள் வளரும் வயதில் வார விடுமுறை என்பது எப்படி இருந்தது?

* உங்கள் குடும்பத்துடன் நீங்கள் இணைந்திருக்க விரும்பும் நேரம் எது?

* இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை இல்லை என வைத்துக் கொள்வோம். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றால், எதை விரும்புவீர்கள்?

ஆண், பெண் உறவில் நிலவும் அதிகார துஷ்பிரயோகம் : இதை தவிர்ப்பது எப்படி..?

*நீங்கள் எப்போதும் பயணிக்க விரும்பும் இடம் எது?

* உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

* அதிகாரம் பொருந்திய ஒருவரை சந்தித்தால், முதல் கேள்வியாக என்ன கேட்பீர்கள்?

* உங்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்திய விஷயம் எது?

* உங்கள் வாழ்வின் மகிழ்ச்சிக்கு உரிய விஷயம் எது?

* நீங்கள் குழந்தையாக இருந்தபோது ஸ்டாம்ப், காசுகள் அல்லது பேனாக்கள் போன்ற ஏதேனும் ஒன்றை சேகரித்துள்ளீர்களா?

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Love, Relationship

அடுத்த செய்தி