முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உங்கள் செக்ஸ் வாழ்க்கை செம்ம கிக்காக இருக்க இதை முயற்சி செஞ்சு பாருங்க..!

உங்கள் செக்ஸ் வாழ்க்கை செம்ம கிக்காக இருக்க இதை முயற்சி செஞ்சு பாருங்க..!

செக்ஸ் வாழ்க்கை

செக்ஸ் வாழ்க்கை

செக்ஸ் வாழ்க்கைக்கு ஒரு பூஸ்ட் அளிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள் என்றால், வழக்கமான பொசிஷன்களை கடந்து இந்த முயற்சியை செயல்படுத்தலாம்.

  • Last Updated :

உடலுக்கு பேரின்பம் கிடைக்கவும், மனதிற்கு ரிலாக்ஸ் கிடைக்கவும் வழிவகை செய்வதாக செக்ஸ் உறவு இருக்கிறது. செக்ஸ் என்றாலே குதூகலமான விஷயம் தான் என்றாலும் கூட, வெவ்வேறு நிலைகளில் (பொசிஷன்) இதை நீங்கள் இதை முயற்சி செய்யும் போது இன்னும் குதூகலமாக இருக்கும். ரெகுலராக ஒரே பொசிஷனில் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் நாளடைவில் போர் அடிக்கும். செக்ஸ் உறவு மீதான நாட்டம் குறைந்து விடும்.

பாலியல் ரீதியான பேரின்ப வாழ்விற்கு வழிகாட்டுவதற்காகவே படைக்கப்பட்ட ‘காமசூத்ரா’ புத்தகத்தில், ஏராளமான செக்ஸ் பொசிஷன் குறித்து கூறப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று தான், ஆணும், பெண்ணும் நின்று கொண்டே உறவு (ஸ்டாண்டிங் பொசிஷன்) வைத்துக் கொள்வது. இதன் மூலம் இருவருக்குமான பிணைப்பு அதிகரிக்கும். இன்பம் மேலோங்கும். அது ஏன், எப்படி என்பதை இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் உடலுக்கு நல்லது :

நீங்கள் வொர்க் ஃபிரம் ஹோம் முறையில் பணி செய்து கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நாள் முழுவதும் நீங்கள் கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். இத்தகைய சூழலில், ஸ்டாண்டிங் பொசிஷனில் நீங்கள் செக்ஸ் உறவு கொள்ள முயற்சிக்கும்போது உங்கள் உடலுக்கு அது ரிலாக்ஸ் தருகிறது. நாள் முழுவதும் அமர்ந்து கொண்டு, ஒரே கோணத்தில் ஸ்கிரீனைப் பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் கழுத்தில் வலி இருக்கக் கூடும்.

இத்தகைய சூழலில், வழக்கமான பொசிஷனில் நீங்களே கீழே படுத்துக் கொண்டு செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முயற்சித்தால் உங்கள் முதுகெலும்பு மற்றும் முழு உடலுக்கு கூடுதல் பலம் தேவைப்படும். ஆனால், நீங்கள் நின்று கொண்டே இதை முயற்சி செய்தீர்கள் என்றால், அதிக சிரமம் இருக்காது என்பதுடன் உங்கள் ஸ்டாமினா அதிகரிக்கக் கூடும். கொஞ்சம் சப்போர்ட் தேவைப்பட்டது என்றால் தூண் அல்லது சேரை பிடித்தபடி இந்த பொசிஷனை முயற்சிக்கலாம்.

முதல் உடலுறவுக்குப் பின் பெண்களின் உடலில் ஏற்படக்கூடிய 7 மாற்றங்கள் : கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!

பெட்ரூம் தான் வேண்டும் என்பதில்லை :

பொதுவாக மற்ற பொசிஷன்களை நீங்கள் முயற்சி செய்யும்போது கண்டிப்பாக அதற்கு பெட் தேவைப்படும். ஆனால், ஸ்டாண்டிங் பொசிஷன் என்பது கட்டாயத் தேவையை உடைத்து உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறது. ஆகவே, நீங்கள் வீட்டின் எந்தப் பகுதியிலும் இதை முயற்சிக்கலாம். குறிப்பாக, உறவுக்குப் பின்னர் பெட் ஷீட் வாஷ் செய்ய வேண்டும் என்ற தேவை இருக்காது.

உங்கள் பிணைப்பை அதிகப்படுத்தும் :

ஸ்டாண்டிங் பொசிஷனில் கிடைக்கும் அனுபவங்கள் குறித்து அனைத்து ஜோடிகளுக்கும் அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், செக்ஸ் வாழ்க்கைக்கு ஒரு பூஸ்ட் அளிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினீர்கள் என்றால், வழக்கமான பொசிஷன்களை கடந்து இந்த முயற்சியை செயல்படுத்தலாம்.

top videos

    குறிப்பாக, முழு நீள கண்ணாடிக்கு முன் நின்று கொண்டு இதை நீங்கள் முயற்சி செய்கையில், இருவருக்கும் இடையிலான பிணைப்பு மேலும் அதிகரிக்கும். ஆகவே, பார்டனருடன் கலந்து பேசி, புது முயற்சியுடன் இல்லற வாழ்க்கையை குதூகலப்படுத்தலாம்.

    First published:

    Tags: Sex Positions, Sex tips