காதலிக்க துணை வேண்டுமா... அப்போ உடனே ஃப்ளைட் புக் பண்ணுங்க!

news18
Updated: July 2, 2019, 7:42 PM IST
காதலிக்க துணை வேண்டுமா... அப்போ உடனே ஃப்ளைட் புக் பண்ணுங்க!
காதல்
news18
Updated: July 2, 2019, 7:42 PM IST
மேட்ரிமோனி, டேட்டிங் ஆப் என பணத்தை செலவு செய்தும் நீங்கள் எதிர்பார்க்கும் , பொருத்தமான துணை கிடைக்கவில்லையா ? கவலையே வேண்டாம் உடனே வெளி நாட்டிற்கு ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணுங்க.

ஃபிளைட் டிக்கெட் புக் பன்னா எப்படி துணை கிடைக்கும் என்று கேட்கிறீர்களா ?

சமீபத்தில் HSBC நடத்திய ஆய்வில் விமான நிலையத்தில் பயணிக்கும் ஐம்பது நபர்களில் ஒருவர் விமானத்தில்தான் தன்னக்கு பொருத்தமான துணையைத் தேர்வு செய்து திருமணம் செய்து கொள்கின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்ற 49 பேர் மொழி பிரச்னையாலும் ஜன்னல் இருக்கைப் பிரச்னையாலும் சண்டை சலசலப்புடன் இருக்கின்றனர் என்று கூறியுள்ளது.


மொத்தம்141 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் உங்கள் துணையை எவ்வாறு தேர்வு செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பியதில் 30,000 அடி உயரத்தில்தான் எங்கள் காதல் மலர்ந்தது என்று கூறியுள்ளனர். ஹாங்காங், அரபு நாடுகள், ஐக்கிய நாடுகள், பிரட்டன் ஆகிய நாடுகளில் மட்டும் 6000 பேரிடம் அவர்களின் விமனப் பயணங்கள் குறித்து கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 50 % பயணிகள் உடன் பயணிக்கும் நபருடன் நல்ல உரையாடலை உருவாக்குகின்றனர். அதில் ஏழில் ஒருவர் நீண்ட நாளுக்கு நல்ல நட்பில் நீடிக்கின்றனர். இதில் நல்ல விஷயம் என்னவெனில் 16 சதவீதத்தினர் தங்களுடைய வேலையில் பணி அமர்த்தி தொழில் ரீதியாக தங்கள் நட்புக்கு நன்றி பாராட்டியுள்ளர்.

கருத்துக் கணிப்பில் இன்னும் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில் 48 சதவீதம் பேர் உடன் அமர்ந்திருக்கும் பயணி தங்களுடைய ஷூவைக் கழட்டுவதை விரும்பவில்லை என்று கூறியுள்ளனர். 30 சதவீதத்தினர் அருகில் அமர்ந்திருப்பவரின் தோளில் சாய்ந்து தூங்குகின்றனர் , 26 சதவீதத்தினர் கொட்டாவி விடுகின்றனர் அது தொந்தரவாக இருக்கிறது என்று கூறியுள்ளனர்.
First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...