முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முகப்பரு உண்டாக இப்படியெல்லாம் கூட காரணம் இருக்கா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

முகப்பரு உண்டாக இப்படியெல்லாம் கூட காரணம் இருக்கா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

முகப்பரு உருவாக காரணங்கள்

முகப்பரு உருவாக காரணங்கள்

நம்முடைய தினசரி வாழ்வில் செய்யும் இந்த காரியங்கள் முகப்பரு உருவாகக் காரணமாக அமைகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முகத்தின் அழகையே பாழாக்கும் முகப்பரு என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் எதிர்கொள்ளும் பொதுவான சரும பிரச்சனையாக உள்ளது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, போதிய சரும பராமரிப்பு இன்மை, தரமற்ற மற்றும் கெமிக்கல் கலந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவது ஆகியவை முகப்பரு உருவாகக் காரணம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம், ஆனால் அதற்குப் பின்னால் பல மறைக்கப்பட்ட காரணங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம், பிரபல தோல் மருத்துவரான கீதிகா மிட்டல் குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகப்பரு உருவாகக் காரணமான சில ரகசிய காரணங்களைப் பகிர்ந்துள்ளார்.

மருத்துவர் கீதிகா கருத்துப்படி, "உங்களுக்கு முகப்பரு வருவதற்கு வெளிப்படையாகத் தெரியாத சில மறைமுக காரணங்கள் உள்ளன. எனவே தான் முகப்பரு மற்றும் போர்ஸ்கள் உருவாகக் காரணம் தெரியாமல் போகிறது. அப்படி யாருக்குத் தெரியாத காரணங்களில் சிலவற்றை அறிந்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

1. ஹேர் ஸ்டைலிஷ் ப்ராடக்ட்:

ஹேர் ஸ்டைலிஷ் ப்ராடக்ட்

தலைமுடியைப் பராமரிப்பதற்காகப் பயன்படுத்தும் ஷாம்பூ, சீரம், கன்டிஷ்னர், ஆயில் போன்ற பொருட்கள் கூந்தலை மட்டுமல்ல சருமத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது. அதாவது கூந்தல் பராமரிப்பு பொருட்களில் அடங்கியுள்ள எண்ணெய்யானது, சரும துளைகளை அடைத்துக்கொள்வதால் முகப்பரு உருவாக வாய்ப்புள்ளது.

2. ஹெவி சன்ஸ்கிரீன் பயன்பாடு:

ஹெவி சன்ஸ்கிரீன் பயன்பாடு

சூரியனின் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து, சருமத்தைப் பராமரிக்க சன்ஸ்கிரீன் தடவ வேண்டியது கட்டாயமானது தான் என்றாலும், இதுவும் முகப்பருவை உண்டாக்கக்கூடிய முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. சன்ஸ்கிரீன் கிரீம்களில் உள்ள பொருட்கள் முகப்பருவை அதிகரிக்கக்கூடும் என்பதால், முகப்பரு பாதிப்புள்ள சருமத்திற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சன்ஸ்கிரீன் லோஷன் அல்லது க்ரீம்களை பயன்படுத்த வேண்டும்.

3. மாத்திரைகள், பிறப்பு கட்டுப்பாடு முறைகள்:

மாத்திரைகள், பிறப்பு கட்டுப்பாடு முறைகள்

நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் மற்றும் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவதற்காக செய்யப்படும் சிகிச்சைகளும் கூட முகப்பரு உருவாகக் காரணமாக அமையலாம் என மருத்துவர் கீதிகா தெரிவித்துள்ளார். குறிப்பாக ஹார்மோன் செறிவூட்டப்பட்ட கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தும் போது முகப்பரு உருவாக வாய்ப்புள்ளது.

4. பேஷியல் ஷேர் ரிமூவல்:

பேஷியல் ஷேர் ரிமூவல்

முகத்தில் உள்ள முடியை வேக்சிங் அல்லது சேவிங் செய்து அகற்றுவதும் முகப்பரு உருவாக காரணமாக அமைகிறது. முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடியை அகற்றும் போது துளைகள் ஓபன் ஆவதால், பரு உருவாவதற்கான அபாயம் அதிகமுள்ளது. மேலும் முகத்தில் உள்ள முடியை அகற்ற நாம் பயன்படுத்தும் சோப்பு மற்றும் க்ரீம்களில் உள்ள கெமிக்கல் மூலமாக அலர்ஜி ஏற்பட்டும் பருக்கள் உருவாகலாம்.

Also Read : ஆயில் ஸ்கின் முகத்தை எப்போதும் டல்லாவே காட்டுதா..? பிரைட்டாக்கும் 3 இயற்கை ஃபேஸ் பேக்குகள் இதோ...

5. செல்போன் உபயோகிப்பது:

செல்போன் உபயோகிப்பது

top videos

    ‘இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே...’ செல்போன் மூலமாக முகப்பரு வருமா? என நீங்கள் ஆச்சர்யப்படலாம். ஆம், செல்போன் மீது ஏராளமான கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் படித்திருக்க வாய்ப்புண்டு. அதனைக் காதில் வைத்துப் பேசும் போது முகத்துடன் தொடர்பு உருவாகிறது, இதனால் தொற்று ஏற்பட்டு முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்கத் தினமும் ஒருமுறையாவது சானிடைசர் கொண்டு செல்போனை சுத்தப்படுத்துவது நல்லது. தற்போது செல்போனை சுத்தப்படுத்துவதற்கான ஸ்பெஷல் சானிடைசர்களும் கடைகளில் கிடைக்கின்றன.

    First published:

    Tags: Makeup, Pimple, Skincare