வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவிட்ட நிலையில், ஏசி கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது. ஏசி வாங்குவது, சாதாரண விஷயம் இல்லை. வாங்குவதற்கு முன் பலவற்றையும் ஆராய வேண்டும்.
அதிலும் குறிப்பாக உங்கள் தேவைகள், கண்டிஷன் மற்றும் இடவசதிக்கு ஏற்ற பல்வேறு வகையான ஏசிகள் உள்ளன. ஏசிகள் ஒரு ஆடம்பரமாகக் கருதப்பட்ட காலம் மாறி தற்போது அனைத்து தரப்பினரும் வாங்கும் ஒரு வீட்டு உபயோக பொருளாக மாறிவிட்டது. மேலும் அவை பணத்திற்கு நல்ல மதிப்பை வழங்கும் அம்சங்களுடன் நிறைந்துள்ளன. எனவே, நீங்கள் புதிய ஏசி வாங்கத் திட்டமிட்டால், அதனை வாங்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விலை மலிவான விண்டோ ஏசி:
ஸ்ப்ளிட் ஏசியை விட விண்டோ ஏசியின் விலை மலிவாக இருக்கும். விண்டோ ஏசி ஒரே வடிவில் எல்லாம் அடங்கியதாக இருக்கும். ஸ்ப்ளிட் ஏசி இரண்டு பகுதிகளாக ஒன்று உள்ளும் மற்றொன்று வெளியேயும் வைக்கப்படும். இதன் விலை குறைவாக இருந்தாலும், இதில் இருந்து வரும் சத்தம் மிகப்பெரிய பிரச்சனையாகும். ஜன்னலில் 1,1.5 மற்றும் 2-டன் மாடல்களை வைத்திருக்க போதுமான உறுதியான இட வசதி இருக்க வேண்டும். இது பெரியதாக இருந்தாலும் மலிவானதாக இருக்கும். விண்டோ ஏசியை நிறுவுவது எளிது என்றாலும் இதன் சத்தத்திற்காகவே குறைவான விலைக்கு விற்கப்படுகிறது.
ஸ்ப்ளிட் ஏசி:
படுக்கை அறை, வரவேற்பு அறை என ஒரு வீட்டில் உள்ள ரூம்கள் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் ஸ்ப்ளிட் ஏசிக்கள் தேவையான குளிர்ச்சியை வழங்குகின்றன. இந்த ஏசி உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டு பிரிவுகளாக பொருத்தக்கூடியது. எனவே வெளிப்புறத்தில் உள்ள பெட்டியானது சத்தம் மற்றும் வெப்பச் சிதறல்களை கவனித்து கொள்வதால், உள்ளே இருக்கும் குளிர்ந்த காற்றை வெளியேற்றும் பகுதி டபுள் மடங்கு பாதுகாப்பாக இருக்கும்.
விண்டோ ஏசியைப் போலன்றி, ஸ்ப்ளிட் ஏசி அமைப்பது சற்று கடினமாக இருக்கும். ஸ்பிலிட் ஏசிகள் சத்தமில்லாதவை, அவற்றை பொருத்துவதற்காக தனியே ஒரு இடத்தை தயார் செய்ய வேண்டியதில்லை. ஆனால் அவை விலை உயர்ந்தவை, எனவே பட்ஜெட் அனுமதித்தால் மட்டுமே வாங்க முடியும்.
வாடகை வீட்டு எந்த ஏசி ஏற்றது:
இப்போது, ஸ்பிளிட் அல்லது விண்டோ ஏசி மாடலை தீர்மானிக்கும் போது, குறிப்பாக நீங்கள் வாடகை குடியிருப்பில் அல்லது சொந்த வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால் அதற்கு ஏற்றார் போல் சில காரணிகளையும் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் உங்கள் வீட்டை மாற்ற வேண்டும் என்றால், விண்டோ ஏசி வாங்குவது நல்லது. ஏனென்றால், அதனை கழட்டுவது மற்றும் மீண்டும் புதிய இடத்தில் பொருத்துவது என்பது எளிதானது.
also read : உங்கள் வீட்டை வாடகைக்கு விடப்போறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்..
ஸ்ப்ளிட் ஏசி மாடல்களுடன் ஒப்பிடும்போது விண்டோ ஏசி மாடல்களை எளிதாக இடமாற்றலாம். மேலும், ஒவ்வொரு முறையும் உங்கள் வீட்டை மாற்றும் போது ஸ்ப்ளிட் ஏசியை பிரித்தெடுக்கும் போது, கூலன்ட் கேஸ் வெளியேறும், மேலும் ஸ்ப்ளிட் ஏசியை பொருந்திய பிறகு கூலன்ட் கேஸை டாப்-அப் செய்ய வேண்டியிருக்கும், இது கூடுதல் செலவு பிடிக்கும் வேலையாகும்.
1 டன் அல்லது 1.5-டன் எந்த ஏசி சிறந்தது?
நீங்கள் வாங்கக்கூடிய ஏசியின் திறனைப் பார்க்க வேண்டிய நேரம் இது. ஏசியின் சரியான அளவுக்கான முக்கிய காரணிகள் அறையின் அளவு, அறை தரைத்தளத்தில் உள்ளதா அல்லது மாடியில் உள்ளதா போன்ற காரணிகளை பார்க்க வேண்டும் . ஏனெனில் குளிரூட்டும் நிலை ஒரு அறையில் எவ்வளவு சூரிய ஒளியில் உள்ளது என்பதைப் பொறுத்தது. பொதுவாக, தரை தளத்தில் உள்ள வீடு/அறைக்கு அதிக திறன் கொண்ட ஏசி தேவையில்லை. 1-டன், 1.5-டன் மற்றும் 2-டன் திறன்களில் வரும் ஏசிக்களே போதுமானவை.
ஏசி மின்சார செலவு:
ஏசி-க்கள் நம்மை குளிர்ச்சியாக வைத்திருக்க சிறப்பானவை தான் என்றாலும், அதன் அதிக மின் கட்டணம் தலைசுற்ற வைக்கலாம். எனவே ஒரு ஏசியை வாங்குவதற்கு முன்னால் அதன் ஸ்டார் ரேட்டிங்கை பார்ப்பது அவசியம். இந்த ஸ்டார் ரேட்டிங் ஒரு ஏர் கண்டிஷனர் எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்துகிறது என்பதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. 1 முதல் பைவ் ஸ்டார் ரேட்டிங் வரை ஏசிக்கள் கிடைக்கின்றன. இதில் 3 முதல் 5 வரை உள்ள ரேட்டிங் ஏசிக்கள் சிறப்பானது. ஆனால் உயர் தரவரிசை ஏசிக்கு செல்வது என்பது அதிக விலை உள்ளதாகும். எனவே, த்ரீ ஸ்டார் அல்லது ஃபைவ் ஸ்டார் ஏசி எடுப்பதற்கு முன், உங்கள் ஏசி பயன்பாடு, அறையின் அளவு குறித்து எப்போதும் கவனமாக இருங்கள்.
இன்வெர்ட்டர் அல்லது இன்வெர்ட்டர் அல்லாத ஏசி: எது சிறந்தது?
ஏசி வாங்க திட்டமிடும் போது நீங்கள் பார்க்கும் அல்லது கேட்கும் பெரும்பாலான வார்த்தைகள் இன்வெர்ட்டர் என்பதாக இருக்கும். பொதுவாக இன்வெர்ட்டர் மாடல் வாங்கினால், ஏசி மாடல் பயனர்களுக்கு தேவையான குளிரூட்டும் திறனை மாற்ற அனுமதிக்கிறது மற்றும் மின்சார கட்டணத்தை சேமிக்க உதவுகிறது. இன்வெர்ட்டர் ஏசி என்பது பெரும்பாலும் மின் சேமிப்பு அம்சமாகும். ஆனால் இன்வெர்ட்டர் ஏசி மாடல்கள் விலை உயர்ந்தவை மற்றும் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீசிங் செலவுகள் இன்வெர்ட்டர் அல்லாத ஏசிகளை விட அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும்.
இன்வெர்ட்டரின் குறிச்சொல்லைச் சுமந்து செல்லும் ஏசிகளில் இன்று நிறையப் பார்த்திருப்பீர்கள். இப்போது, எடுத்துக்காட்டாக, நீங்கள் 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி வாங்கினால், இந்த மாடல் வெளியில் இருக்கும் வெப்பநிலையைப் பொறுத்து 0.5 டன் மற்றும் 1.5 டன் குளிரூட்டும் திறன் வரை செயல்படும். நீங்கள் 1.5 டன் இன்வெர்ட்டர் அல்லாத மாடலை வாங்கினால், இந்த ஏசி மாடல் எப்போதும் 1.5 டன் குளிரூட்டும் திறனில் செயல்படும். இன்வெர்ட்டர் ஏசி என்பது பெரும்பாலும் மின் சேமிப்பு அம்சமாகும். ஆனால் இன்வெர்ட்டர் ஏசி மாடல்கள் விலை உயர்ந்தவை மற்றும் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீசிங் செலவுகள் இன்வெர்ட்டர் ஏசிகளை விட அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும்.
also read : பாத்ரூமில் துர்நாற்றம் வீசுகிறதா ? இந்த குளியலறை செடிகளை வளர்க்கலாம்..
இந்த அம்சத்தை சேர்ப்பது உங்கள் நிலைமைகளுக்கு ஏற்ற வெப்பநிலையில் திறமையான குளிர்ச்சியை உறுதியளிக்கிறது. இது தயாரிப்பை விலையுயர்ந்ததாக ஆக்குகிறது, எனவே இது உங்கள் வீட்டில் குளிரூட்டலில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டுவருவதாக நீங்கள் நினைக்கும் வரை, இன்வெர்ட்டர் அல்லாத பதிப்பிற்குச் செல்லுமாறு பரிந்துரைக்கிறோம்.
ஆன்லைனில் ஏசி வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் ஏசி வாங்கும் போது, என்ன செய்ய வேண்டும் மற்றும் செய்யக்கூடாது என்பது பற்றியும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆன்லைனில் ஒரு பொருளை வாங்குவதற்கான விருப்பம் முற்றிலும் சிறப்பு சலுகைகள், தள்ளுபடி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் எந்த தொந்தரவும் இல்லாமல் டெலிவரி செய்யும் வசதி ஆகியவை ஆகும். இவற்றை எல்லாம் நன்றாக பரிசோதித்த பிறகே ஒரு ஏசியை நீங்கள் ஆன்லைனில் வாங்குவது பயனுள்ளதாக இருக்கும்.
ஏசி பிராண்டின் இணையதளத்தை நோட்டமிடுங்கள்:
ஒரு குறிப்பிட்ட பிராண்டின் ஏசி மாடலை தேர்வு செய்கிறீர்கள் என்றால், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று நீங்கள் தேர்வு செய்துள்ள ஏசியின் சிறப்பம்சங்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். ஏனெனில் ஆன்லைன் ஸ்டோர் உங்களுக்கு பழைய மாடலைக் கொடுக்கலாம், அதே நேரத்தில் நிறுவனத்தின் இணையதளத்தில் அப்டேட்டான புது மாடல்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். மேலும் அதிகாரப்பூர்வ விலையை விட அதிகமாக நீங்கள் செலவழிக்காமல் இருக்கவும் இது உதவும்.
ஏசி டெலிவரி மற்றும் பொருத்துதல் பற்றி அறிந்துகொள்ளுங்கள்:
டோர் டெலிவரி மற்றும் பிட்டிங் போன்ற வசதியின் காரணமாக ஆன்லைனில் ஏசி வாங்க அதிகமானோர் விரும்புகின்றனர். தயாரிப்பு டெலிவரி செய்யப்படுவதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அது சரியான நேரத்தில் இலவசமாக பொருத்தப்படுமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AC, Air conditioner