Home /News /lifestyle /

ரவையை வைத்து உப்புமா மட்டுமில்லை இப்படியொரு சூப்பரான டிபனும் பண்ணலாம் தெரியுமா?

ரவையை வைத்து உப்புமா மட்டுமில்லை இப்படியொரு சூப்பரான டிபனும் பண்ணலாம் தெரியுமா?

ரவை அடை

ரவை அடை

இந்த ரவை அடை ரெசிபியை ஆண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    காலை உணவு உப்புமா என்றவுடன் தெறித்து ஓடாத கணவன்மார்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு உப்புமா மீது ஆண்களுக்கு வெறுப்பு. அதற்கு என்ன காரணம் என்பது இதுவரை பலருக்கும் தெரியாது. பெண்கள் பெரும்பாலும் உப்புமா, கிச்சடியை விரும்பி சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் ஆண்கள் மற்றும் குழந்தைகளிடம் உப்புமா என்றால் பசி எடுக்கவில்லை வேண்டாம் என்ற பதில் தான் வரும். இட்லி உப்புமா கூட சாப்பிடுவார்கள் ஆனால் ரவை உப்பு என்றால் சுத்தம்.

    ரவையை வைத்து வெறும் உப்புமா மட்டும் தான் செய்ய முடியுமா என்றால் இல்லை. ரவையை வைத்து ரவா தோசை, ரவா இட்லி என ஏகப்பட்ட வெரைட்டிகளை செய்யலாம். ஆனால் ரொம்ப ஈஸி என்றால் அது உப்புமா தான். அதனால் தான் பெண்கள் காலையில் சீக்கிரமாக செய்யக்கூடிய காலை உணவு ரெசிபி லிஸ்டில் உப்புமாவை சேர்த்துள்ளனர். ஆனால் பலரும் அதை விரும்பி சாப்பிடுவதில்லை. ஒருவேளை ரவை வீட்டில் இருக்கு, அதை வைத்து வித்யாசமான காலை உணவை தயார் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால் கண்டிப்பாக இந்த ரெசிபியை முயற்சி செய்யுங்கள்.

    இதையும் படிங்க.. ஒருமுறை இந்த மாதிரி மீன் குழம்பு வச்சி பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க!

    டேஸ்டியாகவும் ஈசியாகவும் இருக்க கூடைய இந்த ரவை அடை ரெசிபியை ஆண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை இந்தியன் ரெசிபீஸ் தமிழ் சேனல் மூலம் அபி சமைத்துக் காட்டியுள்ளார். இந்த சேனலில் இடம்பெறும் சமையல் வீடியோக்கள் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதில் ஒன்று தான் இந்த ரவை அடை.

    தேவையான பொருட்கள்;

    ரவை, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள், கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி

    இதையும் படிங்க.. யூடியூபில் கலக்கும் சைவ மீன் வறுவல்.. நீங்களும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!

    செய்முறை:

    1. முதலில் ரவையுடன் அதே அளவு கோதுமை மாவை சேர்க்க வேண்டும்.

    2. இப்போது அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும்.

    3. அடுத்தது, உப்பு, துருவிய கேரட், மஞ்சள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொண்ட வேண்டும்.

    4. பின்பு இந்த கலவையை தண்ணீர் சேர்த்து அடை மாவு பக்குவத்துக்கு பிசைந்து கொள்ள வேண்டும்.



    5. இப்போது அடையையை தட்டி தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சூப்பரான ரவை அடை தயார்.

    இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் கேரட்டுடன் கூடுதலாக மற்ற காய்கறிகளையும் துருவி சேர்த்து சுட்டு எடுத்தால் ஆரோக்கியமான காலை உணவாக இது கட்டாயம் இருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Breakfast, Cooking tips, Food recipes

    அடுத்த செய்தி