• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • 'வீட்டில் இருந்தாலே என்னுடைய பொழுதுபோக்கு இதுமட்டும்தான்..' - பல ரகசியங்களை உடைத்த ராஷ்மிகா மந்தனா..

'வீட்டில் இருந்தாலே என்னுடைய பொழுதுபோக்கு இதுமட்டும்தான்..' - பல ரகசியங்களை உடைத்த ராஷ்மிகா மந்தனா..

ராஷ்மிகா

ராஷ்மிகா

உங்களை நம்பி படம் எடுக்கிறார்கள். பாலிவுட்டிலாவது கொஞ்சம் அமைதியாக இருக்க முயற்சிக்கவும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.

  • Share this:
தமிழ், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). நடிக்க ஆரம்பித்து 4 வருட காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்ட ராஷ்மிகாவின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட பொக்கலூரு கிராமம். தனது கிறங்கடிக்கும் வார்த்தைகளால் ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் நடிகை ராஷ்மிகா படங்களில் மட்டுமல்ல இயல்பிலும் துறுதுறுவென்று நேர்மையான பதில்களை மட்டுமே பலருக்கும் அளிப்பார்.

அந்தவகையில் சமீபத்தில் தனது ரசிகர்களுக்கான ட்விட்டர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் அவரின் பதில் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

கன்னட பேரழகியான ராஷ்மிகா (Rashmika) கருத்து கூறுகையில், "இப்போது ஊர்வன, இருண்ட இடங்கள் மற்றும் எல்லாவற்றையும் பற்றி நான் பயப்படுகிறேன் ..." ஒரு நபரின் உண்மையான குணத்தையும் விசுவாசத்தையும் மிக முக்கியமான குணங்களாகக் கூறிய, ரஷ்மிகா காதல்-நகைச்சுவைகளை தனக்கு பிடித்த வகையாகவும், விடுமுறை நாட்களில் தனது பொழுதுபோக்காக தூங்குவதையே தான் விரும்புவதாக குறிப்பிட்டார். அவரது மயக்கும் புன்னகையின் பின்னால் உள்ள ரகசியத்திற்கு பதிலளித்த அவர், "இது உண்மையானது" என்றார்.

அண்மையில், 24 வயதான ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில்  சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து 'மிஷன் மஜ்னு'  படத்தில் பர்வீஸ் ஷேக், அசீம் அரோரா மற்றும் சுமித் பதேஜா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தை விளம்பர படத் தயாரிப்பாளர் சாந்தனு பாகி இயக்கியுள்ளார்.

விகாஸ் பஹ்ல்  தலைமையில் அமிதாப் பச்சன் நடிக்கும் 'டெட்லி'  படத்தில் ராஷ்மிகாவும் இடம் பெறலாம் என்ற யூகங்களும் பரவி வருகின்றன. மரேடுமில்லியின் (Maredumilli) அடர்ந்த காட்டில் ‘புஷ்பா’  படப்பிடிப்பிற்காக அல்லு அர்ஜுனுடன் (Allu Arjun) சேரத் தயாராகும் ராஷ்மிகா ஏற்கனவே தனது கன்னடப் படமான ‘போகாரு’ (Pogaru) மற்றும் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார் ரஷ்மிகா.

படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே ரஷ்மிகா சமூக வலைதளங்களில் உளறிவிட்டார். இதனால் படக்குழு அவர் மீது செம கடுப்பில் இருந்ததாக கூறப்பட்டது. கிஷோர் திருமலை  இயக்கிய ஷர்வானந்தின் வரவிருக்கும் “ஆதல்லு மீகு ஜோஹர்லு” (“Aadallu Meeku Joharlu”) படத்திலும் அவர் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருப்பதியில் தசரா (Dussehra in Tirupati) நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் எடுக்கப்படுகிறது.

ராஸ்மிகாவின் குறும்புத்தனம் அனைவருக்கும் தெரியும். கார்த்திக்கு செய்தது மாதிரி சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் செய்துவிடாதீர்கள். உங்களை நம்பி படம் எடுக்கிறார்கள். பாலிவுட்டிலாவது கொஞ்சம் அமைதியாக இருக்க முயற்சிக்கவும் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில், திரைப்படங்கள், போட்டோ-ஷூட்கள் மற்றும் பிராண்ட் ஒப்புதல்களில் பிஸியாக இருந்தபோதிலும், ரஷ்மிகா தனது வொர்க்அவுட்டை வழக்கமாக எந்த நிலையிலும் தவறவிடுவதில்லை, இதனால் தான் அவர் உடல் கட்டுக்கோப்பாக உள்ளது. ஜிம்மிலிருந்து எடுக்கப்பட்ட அவரது ஒர்க்அவுட் கிளிப்புகள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: