பாலிவுட் நடிகரின் பிறந்த நாள் பரிசாக 17 ஆண்டுகளாக மின்சாரம் இல்லா கிராமத்திற்கு வெளிச்சம் தந்த ரசிகர்கள்..!

தெருக்கள் மட்டுமன்றி வீடுகளுக்குக்கும் ஒவ்வொரு சோலார் லைட்டுகள் பொருத்தி இருண்ட கிராமத்திற்கு வெளிச்சம் கொடுத்துள்ளனர்.

news18
Updated: July 26, 2019, 10:49 PM IST
பாலிவுட் நடிகரின் பிறந்த நாள் பரிசாக 17 ஆண்டுகளாக மின்சாரம் இல்லா கிராமத்திற்கு வெளிச்சம் தந்த ரசிகர்கள்..!
வெளிச்சம் தந்த ரசிகர்கள்..!
news18
Updated: July 26, 2019, 10:49 PM IST
ரசிகர்களால் கிடைத்த இந்த மகிழ்ச்சி என்னால் மறக்கவே முடியாத பிறந்த நாள் பரிசு என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார் அந்த நடிகர். பாலிவுட்டின் ஸ்டார் , குறும்புப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படும் ரன்வீர் சிங்-தான் அந்த பர்த் டே பேபி.

கடந்த ஜூலை 6 தேதி ரன்வீர் சிங் பிறந்த நாள். அப்போது அவரின் ரசிகர் மன்றத்தால் அறிவிக்கப்பட்டு தொடக்கப்பட்ட பணிகள் தற்போதுதான் நிறைவடைந்துள்ளது.
ரன்வீர் சிங்கின் இந்த ஃபேன்ஸ் கிளப் கடந்த 2015 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்தூரைச் சேர்ந்த அமீர் அலி என்பவர்தான் தலைவராக இருக்கிறார். இவரின் தலைமையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அகோலி கிராமத்தில் சோலார் லைட்டுகள் பொருத்தியுள்ளனர். தெருக்கள் மட்டுமன்றி வீடுகளுக்குக்கும் ஒவ்வொரு சோலார் லைட்டுகள் பொருத்தி இருண்ட கிராமத்திற்கு வெளிச்சம் கொடுத்துள்ளனர்.

“ இந்த கிராமத்திற்கு கடந்த 17 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை. பல வருடங்களாக மண்ணெண்ணெய் விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி வரும் இந்த மக்கள் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டுகின்றனர். எனவேதான் எங்கள் கிளப் மூலமாக இப்படியொரு உதவியை செய்ய ஏற்பாடு செய்தோம். ரன்வீர் மகிழ்ச்சியைப் பரப்புங்கள் என்று எப்போதும் கூறுவார். அதைதான் நாங்கள் தற்போது செய்திருக்கிறோம்” என்று பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அமீர் கூறியுள்ளார்.
First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...