பாடிக்கொண்டே ரசிகர்கள் மீது பாய்ந்த ரன்வீர் சிங்... கொந்தளித்த ரசிகர்கள்

இதற்கு முன் இதேபோல் ஒரு பாடல் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மீது குதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

பாடிக்கொண்டே ரசிகர்கள் மீது பாய்ந்த ரன்வீர் சிங்... கொந்தளித்த ரசிகர்கள்
ரன்வீர் சிங்
  • News18
  • Last Updated: February 8, 2019, 4:22 PM IST
  • Share this:
ரன்வீர் சமீபத்தில் நடந்த லாக்மே ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் மேடையில் பாடல் பாடியிருக்கிறார். அப்போது ரசிகர்கள் மீது ஆர்வத்தில் எகிறி குதித்திருக்கிறார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ரன்வீரின் எல்லாக் குறும்புத் தனத்தையும் ரசிக்கும் ரசிகர்களால் அவரின் இந்த செயல் கோபப்பட வைத்திருக்கிறது.
எதிர்பாராத நேரத்தில் அவர் கூட்டத்தில் பாய்ந்து குதிக்க; ரசிகர்களும் அதை எதிர்பார்க்கவில்லை.
இதனால் அவரை பிடிக்கக் கூட முடியாமல் அவரும் கீழே விழ அவரின் பாதுகாவலர்கள்தான் கூட்டத்தில் நடுவே சென்று காப்பாற்றியிருக்கின்றனர்.

அப்போது அங்கு சூழ்ந்திருந்த பெண்களும் கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட ரசிகர்கள் ” இப்படி அவர் செய்திருக்கக் கூடாது” என டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என அவரை திட்டி வருகின்றனர்.

இதற்கு முன் இதேபோல் ஒரு பாடல் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மீது குதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

Also See..

First published: February 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்