ஒவ்வொரு இஸ்லாமிய ஆண்டின்போதும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். கொள்கை, தொழுகை ஆகிய இரு பெரும் கடமைகளை அடுத்து 3வது கடைபிடிக்கப்படும் கடமையாக நோன்பு உள்ளது.
ரமலான் மாதத்தில்தான் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன், இறைவனிடம் இருந்து அவரது தூதர் முகம்மது நபிக்கு, வானவர் ஜிப்ரீல் மூலம் முதன்முறையாக அருளப்பட்டது. இதன் காரணமாக ரமலான் புனித மாதமாக முஸ்லிம்களால் கருதப்படுகிறது.
ரமலான் நோன்பு, தமிழகத்தில் நேற்று தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
யாருக்கு நோன்பு கடமை?
உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் பருவம் அடைந்த அனைத்து முஸ்லிம் ஆண் பெண்களுக்கும் நோன்பு கடமையாக உள்ளது.
கர்ப்பிணிகள் நோன்பு வைக்கலாமா?
கர்ப்பிணிகள், மாதவிடாய் உடையவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இதற்கான அனுமதியை இஸ்லாம் அளித்துள்ளது.
இதேபோன்று வயது முதிர்ந்த, நோய் பாதிப்பு உடையவர்களுக்கும் நோன்பை கடைபிடிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நோன்பை கடைபிடிக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
நோன்பை தவிர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டவர்கள், தான தர்மங்களை வழங்கி, நோன்பின் வைப்பதன் பலனை அடைந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. அந்த வகையில் நோன்பை கடைபிடிக்காதவர், குறைந்த பட்சம் நபர் ஒருவருக்கு 2 வேளை உணவு அளிக்கலாம். அல்லது 2 பேருக்கு ஒருவேளை உணவு அளிக்கலாம். அதிகபட்சமாக அவரவர் வாய்ப்பு, வசதிகளுக்கேற்ப தான தர்மங்களை வழங்கலாம்.
Published by:Musthak
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.