ருசியான இஃப்தார் விருந்து வேண்டுமா..? இந்த இடங்களை மிஸ் பண்ணாதிங்க!

news18
Updated: June 13, 2018, 8:08 PM IST
ருசியான இஃப்தார் விருந்து வேண்டுமா..? இந்த இடங்களை மிஸ் பண்ணாதிங்க!
கோப்புப் படம்
news18
Updated: June 13, 2018, 8:08 PM IST
புனித மாதமான ரமலான் மாதத்தில் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் அதனை மாலையில் முடிக்கும் போது, பழத்தை உண்டு முடிப்பது வழக்கம். அதன்பின்பு இறைவனை வணங்கி விட்டு அனைவருக்கும் இஃப்தார் விருந்தை அளிப்பார்கள். அந்த விருந்தில் இஸ்லாமியர்கள் தவிர அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வது வழக்கமாக உள்ளது. இப்படிப்பட்ட இந்த இஃப்தார் விருந்துக்கு சில சிறப்பான இடங்கள் உள்ளன.

அவற்றில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறோம்...

புராணி டெல்லி:  பழைய டெல்லி அல்லது புராணி டெல்லி என்றழைக்கப்படும் இந்த இடம் இஃப்தார் விருந்துக்கு புகழ் பெற்றது. இரமலான் மாதங்களில் இங்கு கிடைக்கும் உணவு வகைளை போல் வேறு எங்கும் ருசியாக கிடைக்காது. ஜாமியா மஸ்ஜித் சுற்றியுள்ள உணவு வகைகளையும், பஜார் மடியா மஹாலில் உள்ள உணவு வகைகளையும் உணவு பிரியர்கள் கண்டிப்பாக தவிர்க்கமாட்டார்கள். கீமா சமோசாஸ்களிலிருந்து பனீர் ஜலேபி வரையிலான அனைத்து சிறப்பு உணவு வகைகளும் இங்கு கிடைக்கும்.

டெல்லி ஸ்பெஷல் கபாப்


ஹைதராபாத்: சார்மிநாரைச் சுற்றி வண்ணமயமான பாதாகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் அதிகாமாக உள்ள இந்த பகுதியில் ஹலீம், பத்தர் கா கோஷ்ட், பரந்தாஸ் மற்றும் சமோசா ஆகிய உணவுகள் புதுவிதமாக தயாரிக்கப்பட்டு பரிமாரப்படுகிறது. அதிலூம் நிஜாம் நகரத்தில் மிகவும் விசேஷமான சுவையான இஃப்தார் உணவை உண்ணலாம் . டோலி சௌக்கி (Toil Chowki) மற்றொரு பிரபலமான இடமாகும், இங்கு சிறந்த உணவு அரங்குகள் மற்றும் உணவகங்களையும் காணலாம்.

ஹைதராபாத் பிரியாணி


லக்னோ: நவாபின் நகரம் என்றழைக்கப்படும் லக்னோவில், அவதரி மற்றும் மொகலாய் உணவு வகைகள் அதிகமாக கிடைக்கும் இடமாகும். மேலும் லக்னோ வீதிகளில் நிஹரி, குல்ச், கேபாப்ஸ், பையானீஸ், மற்றும் குலாப் ஜமுன், கூன்ட்-கா-ஹல்வா, டூத்-ஃபெனி, ரப்ரி, கீர் போன்ற பலவிதமான இனிப்பு வகைகளும் கிடைக்கும்.
Loading...
லக்னோ பிரியாணி
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...