உடல் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரகுல் ப்ரீத்சிங்...! 180 கிலோ பளுவைத் தூக்கும் வைரல் வீடியோ..

இந்த வீடியோவைக் காணும் ரகுல் ப்ரீத்சிங்கின் ரசிகர்கள், பெண்களுக்கு சிறந்த ஊக்குவிப்பாக இருக்கிறது என்று பாராட்டி வருகின்றனர்.

உடல் பயிற்சியில் தீவிரம் காட்டும் ரகுல் ப்ரீத்சிங்...! 180 கிலோ பளுவைத் தூக்கும் வைரல் வீடியோ..
இந்த வீடியோவைக் காணும் ரகுல் ப்ரீத்சிங்கின் ரசிகர்கள், பெண்களுக்கு சிறந்த ஊக்குவிப்பாக இருக்கிறது என்று பாராட்டி வருகின்றனர்.
  • News18
  • Last Updated: September 28, 2019, 5:43 PM IST
  • Share this:
வளர்ந்து வரும் கதாநாயகிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள முக்கிய நடிகையான ரகுல் ப்ரீத்சிங் உடல் எடையைப் பராமரிப்பதிலும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதிலும் அதிக அக்கறைக் கொண்டவர்.

ரகுலின் இன்ஸ்டாகிராம் பக்கம் அவருடைய க்யூட் புகைப்படங்களைக் காட்டிலும் உடற்பயிற்சிக் கூடத்தில் அவர் செய்யும் பயிற்சி வீடியோக்கள்தான் அதிகமாக இருக்கும்.

உடற்பயிற்சியில் வெறும் பளு தூக்குதல் ஓடுதல் மட்டுமல்லாமல் ஏரியல் யோகா செய்வதிலும் கில்லாடி. அந்த செய்தியும் மீடியாக்களில் வைரலாகப் பரவியது. அதைப் பார்த்த பலரும் ஏரியல் யோகா பயிற்சி செய்ய தொடங்கிவிட்டார்கள் என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


இவைத் தவிர இந்தியா நடத்தும் ஃபிட் இந்தியா இயக்கத்தில் பங்கேற்று அதற்கான சேலஞ் வீடியோக்களையும் பகிர்கிறார்.

இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் ரகுல் பளு தூக்கும் வீடியோவைப் பகிர்ந்து வருகிறார். அதில் ஒவ்வொரு வாரமும் எவ்வளவு எடையைத் தன்னால் தூக்க முடிகிறது என்ற சுய பரிசோதனைக்காக ஒவ்வொரு ஐந்து பவுண்டுகளாக ஏற்றி தூக்குகிறார். அப்படி தூக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்கிறார்.இந்த வீடியோவைக் காணும் ரகுல் ப்ரீத்சிங்கின் ரசிகர்கள், பெண்களுக்கு சிறந்த ஊக்குவிப்பாக இருக்கிறது. இதன்மூலம் சோர்வானவர்களையும் சுறுசுறுப்பாக்குகிறார். மக்களும் அவருடைய இந்த முயற்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தின் மீதான அக்கறையையும் பாராட்டி வருகின்றனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: September 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading