சர்வதேச ஊதா நாள் - வலிப்பு நோய் என்றால் என்ன?

சர்வதேச ஊதா நாள் - வலிப்பு நோய் என்றால் என்ன?

சர்வதேச ஊதா நாள்

உலகம் முழுவதும் மூளை வளர்ச்சி பிரச்சனைகள், அதனால் ஏற்படும் வலிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் அல்லது ஊதா தினம் மார்ச் 26ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் மூளை வளர்ச்சி பிரச்சனைகள், அதனால் ஏற்படும் வலிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வலிப்பு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சையளித்தால், அதில் இருந்து மீள முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஊதா நாள் வரலாறு

கனடா நாட்டின் நோவா ஸ்காடியா பகுதியைச் சேர்ந்த கேஸடி மெகான் (Cassidy Megan) 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக வலிப்பு நோய் குறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டார். தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதில் இருந்து மீண்டுவர முடியும் என்றும், மூளை நரம்பியலில் ஏற்படும் நரம்புக் குறைபாடு என்பதையும் எடுத்துக்கூறினார். 9 வயதில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருடன் 2009ம் ஆண்டு மேரிடைம்ஸ் எபிலெப்ஸி கூட்டமைப்பு மற்றும் அனிதா காஃப்மேன் அமைப்பு கூட்டுச் சேர்ந்து உலகளாவிய பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். அன்றுமுதல் சர்வதேச ஊதா தினம் அல்லது வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வலிப்பு நோய் குறித்த தவறான புரிதல்கள் மற்றும் பயத்தை போக்குவதற்கு உலகளவில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Also read... குறைந்த மன அழுத்தம் மூளைக்கு நல்லது - ஆய்வில் தகவல்!

ஊதா தினம் முக்கியம் ஏன்?

மூளை நரம்பியல் செயல்பாடுகளில் நிகழும் திடீர் மாற்றங்களினால் வலிப்பு ஏற்படுகிறது. இது குறித்து மக்களிடையே பொதுவாக தவறான புரிதல் உள்ளது. அல்சைமர், ஒற்றைத் தலைவலி, பக்கவாதம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூளை நரம்புவ பிரச்சனைகளினால் வலிப்பு நோய் ஏற்படுகிறது. 26 அமெரிக்கர்களில் ஒருவருக்கு இந்த வலிப்பு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவான நோய்களில் ஒன்றாக அங்கு இருந்தாலும், இது குறித்து மக்களுக்கு போதுமான அளவில் விழிப்புணர்வு இருப்பதில்லை. இதனால்தான் உலகளவில் வலிப்பு நோய் குறித்து விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதேநேரத்தில் உலகளவில் 40 விழுக்காடு மக்களுக்கு ஊதா நிறம் பிடித்த வண்ணமாக இருக்கிறது. அவர்கள் சிறந்த மனிதாபிமானிகளாகவும் இருப்பதால் இந்த கலரை, வலிப்பு நோய் விழிப்புணர்வுக்காக தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

வலிப்புநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை

உலகளவில் 50 மில்லியன் பேர் வலிப்பு நோயால் வாழ்கின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அகால மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு சாதாரண மக்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். உலகளவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 2.2 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வலிப்பு எப்போது ஏற்படுகிறது என்பதை சரியாக கூறமுடியாவிட்டாலும், ஒரு சில சூழ்நிலைகளை குறிப்பிட்டு சொல்லலாம்.

1. வலிப்பு நோய்காக கொடுக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ள மறந்துவிடுதல்

2. தூக்கம் இல்லாமை

3. சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ளாமை

4. வெறி, உற்சாகம், வருத்தம் போன்ற உணர்ச்சிப்பூர்வமான சூழல்

5. மாதவிடாய் சுழற்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்கள்

6. காய்ச்சல்

7. வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல்

8. கணிணி, தொலைக்காட்சிகளில் இருத்து வெளியாகும் ஒளி, மிகப்பெரிய அளவிலான ஒளிரும் விளக்குகளில் இருந்து வெளியாகும் ஒளி, சில சமயங்களில் சூரிய ஒளி கூட பாதிக்கும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: