ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சர்க்கரை நோய் என்பது உடல் உறுப்புகளை பாதிப்படையச் செய்யும் ஒரு நோயாகும் - அதாவது இருதயம், சிறுநீரகங்கள், கீழ் மூட்டுகள் மற்றும் கண்கள் ஆகிய உடல் உறுப்புகள் மீது பாதிப்பை ஏற்படுத்தும். டயாபெட்டிஸ் ரெட்டினோபதி என்பது சர்க்கரை நோயுடன் தொடர்புடைய ஒரு பொதுவான உடல் பிரச்சனையாகும், இங்கு கண்ணுக்கு செல்லக்கூடிய (குறிப்பாக விழித்திரை) இரத்த நாளங்கள் தடுக்கப்படும், அல்லது கசிவு அல்லது வெடிப்பு ஏற்படும்.
உலகளவில், 20-70 வயதிற்குட்பட்டவர்களின் கண் பார்வை தெரியாமைக்கு டயாபெட்டிஸ் ரெட்டினோபதி முக்கிய காரணம் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். உண்மையாகச் சொல்லப்போனால், இந்தியாவில், 2025 ஆம் ஆண்டிற்குள், சர்க்கரை நோயாளிகளில் (57 மில்லியன்) ஐந்தில் ஒருவரில் இருந்து மூன்றில் ஒருவர் வரை ரெட்டினோபதியால் பாதிக்கப்படுவார்கள். அவர்களில், சுமார் 5.7 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் கடுமையான ரெட்டினோபதிக்கு ஆளாவார்கள் மற்றும் அவர்களின் கண் பார்வையைப் பாதுகாக்க லேசர் அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும்.
100% தடுக்கக்கூடிய ஒரு உடல் பிரச்சனைக்கு பாதிப்பின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே இருக்கிறது. தடுக்கக்கூடியது என்பதால் இது ஒரு நல்ல விஷயம். ஆனால் சோகமான விஷயம் என்னவென்றால், டயாபெட்டிக் ரெட்டினோபதி ஆரம்ப கட்டங்களில் அறிகுறியற்றது, மேலும் இது வெறும் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி, சர்க்கரை நோய்க்கு முந்தின நிலையில் உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது. மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், டயாபெட்டிக் ரெட்டினோபதி பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே உள்ளது - தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, 29% நபர்கள் மட்டுமே தங்கள் கண்களை தொடர்ந்து பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்2. இருப்பினும், விழிப்புணர்வு என்பது நாம் சரிசெய்யக்கூடியவையே.
Network18 இந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக Novartis உடன் இணைந்து ‘Netra Suraksha' - India Against Diabetes initiative, என்பதை தொடங்கியுள்ளது. இந்த முன்முயற்சியானது மருத்துவ சமூகம், சிந்தனையாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைத்து, டயாபெட்டிக் ரெட்டினோபதியின் பாதிப்பைக் கொண்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் அதனைப் பற்றிய விழிப்புணர்வை நடத்தியது. விழிப்புணர்வின் போது, டயாபெட்டிக் ரெட்டினோபதி நோயை எவ்வாறு கண்டறிவது, தடுப்பு மற்றும் அதற்கான சிகிச்சையைப் பற்றி நடத்தப்பட்ட வட்டமேஜை விவாதங்களை Network18 ஒளிபரப்பும். இந்த விவாதங்கள், விளக்கக் காணொளிகள் மற்றும் கட்டுரைகள் மூலம் இந்த நோயைப் பற்றி தெரிவிப்பதன் மூலம், டயாபெட்டிக் ரெட்டினோபதியால் பாதிக்கப்படுபவர்கள் இந்த கொடிய நோய், ஆனால் முற்றிலும் தடுக்கக்கூடிய நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவும் என்று Network18 நம்புகிறது.
எனவே நாம் அடுத்து பார்க்க வேண்டியது என்ன? சமீபத்திய வட்ட மேஜை விவாதத்தில், இந்தியாவின் ரெட்டினா சொசைட்டியின் இணைச் செயலாளரான டாக்டர் மனிஷா அகர்வால் கூறியதாவது, ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று என்னவென்றால் வாசிப்பதில் தொடர்ச்சியான சிரமம் ஏற்படக்கூடும், கண் கண்ணாடியை மாற்றினாலும் இந்தப் பிரச்சனை தொடரும் என்று குறிப்பிட்டார். கண் பார்வை மங்கலாகவே இருக்கும். இது ஒரு ஆரம்ப அறிகுறியாகும், இதனை சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. அலட்சியப்படுத்தினால், அறிகுறிகள் கண் பார்வைத் துறையில் கருப்பு அல்லது சிவப்பு புள்ளிகள் காணப்படும் அல்லது கண்ணில் இரத்தக்கசிவு காரணமாக கூட கண் பார்வை தெரியாமல் போகலாம்.
மெட்ராஸ் டயாபெட்டிஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் தலைவரான மருத்துவர் வி மோகன், சர்க்கரை நோய் அல்லது சர்க்கரை நோய்க்கு முந்தின நிலையில் உள்ளவர்களுக்கும் ஆண்டுதோறும் கண் பரிசோதனையை (கண்விழி உடன்) பரிந்துரைக்கிறார். ஆரம்ப கட்டங்களில் இந்த பிரச்சனை முற்றிலும் அறிகுறியற்றதாக இருப்பதால், டயாபெட்டிக் ரெட்டினோபதி கண்டறியப்படாவிட்டாலும், ஆண்டுதோறும் பரிசோதனையை தொடர்ந்து செய்யுமாறு அவர் பரிந்துரைக்கிறார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பரிசோதனையின் பொறுப்பை அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பாக எச்சரித்தார் - பெரும்பாலும், நீரிழிவு மையங்களில் கண் நிபுணர்கள் இருப்பதில்லை.
தலைமை சர்க்கரை நோய் நிபுணரும், டயாபெட்டிஸ் கேர் மற்றும் ஹார்மோன் கிளினிக்கின் (அகமதாபாத்) தலைவருமான டாக்டர் பன்ஷி சபூ, இந்தியர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் வயது குறைந்து வருவதால், பரிசோதனையை 30 வயதில் தொடங்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார். அவர் கூறிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால்: டயாபெட்டிக் ரெட்டினோபதி மீளமுடியாதது. எனினும் அவற்றின் பாதிப்பு ஏற்பட்டவுடன், அதை நிர்வகிக்கலாம் மற்றும் பாதிப்பின் முன்னேற்றத்தைத் தடுக்கலாம்.
எனவே, டயாபெட்டிக் ரெட்டினோபதியால் முன்கூட்டியே பாதிக்கப்படுவதால் அதிக விளைவுகள் ஏற்படும் என்பது உறுதியாகிறது. அதன் அறிகுறியற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, அதை முன்கூட்டியே தடுப்பதற்கான ஒரே வழி என்னவென்றால் வழக்கமான பரிசோதனை மட்டுமே.
இதுதான் ஒரே வழி. நீங்கள் சர்க்கரை நோயாளியாக இல்லாவிட்டாலும், ஆன்லைன் Diabetic Retinopathy Self Check Up ஐ மேற்கொள்ளுங்கள். பிறகு, உங்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் உறவினர்களையும் அவ்வாறு செய்யும்படி வலியுறுத்துங்கள். எவரேனும் ஒருவருடைய இரத்தப் பரிசோதனைகள் அவர்களை சர்க்கரை நோய் அல்லது சர்க்கரை நோய்க்கு முந்தின நிலை என்று காண்பித்தால், வெறும் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே தேவைப்படும் மற்றும் வலியில்லாத கண் பரிசோதனையை மேற்கொள்ள அவர்களின் கண் நிபுணரை அணுகும்படி வலியுறுத்துங்கள். இதை நீங்கள் மறக்க முடியாத தேதியுடன் பரிசோதனையை ஒத்திசைக்கவும், மற்றும் ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனையை தவறாமல் கடைப்பிடிக்கவும்.
நமது உணவு முறைகளிலும், சுற்றுச்சூழலிலும், நமது வாழ்க்கை முறையிலும் ஏற்படும் அதிக மாற்றத்தால், சர்க்கரை நோய் அதிகரித்து வருகிறது. உண்மையாகச் சொல்லப்போனால், இந்தியாவில் 43.9 மில்லியன் மக்கள், நோய் கண்டறியப்படாத சர்க்கரை நோயாளிகளாக உள்ளனர்1. உங்கள் கண் பார்வை என்பது ஒரு மதிப்புமிக்க விஷயமாகும், அதற்கு உங்கள் கவனமும் கவனிப்பும் தேவை. அறிகுறிகள் ஏற்படும் வரை காத்திருக்க வேண்டாம் - பார்வைக் கோளாறுகளால் ஏற்படும் இடையூறு உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் ஆதரவாளர்களையும் பாதிக்கக்கூடும்.
Netra Suraksha initiative பற்றிய கூடுதல் தகவல்களுக்கு News18.com-ஐ பின்தொடரவும், மற்றும் டயாபெட்டிக் ரெட்டினோபதிக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உங்களை ஈடுபடுத்த தயாராகுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.