அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி, க்யூட்டான ஜோடியாக ரசிகர்களால் விரும்பப்படுபவர்கள். தங்களது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களின் போட்டோக்களை அவ்வப்போது சமூக ஊடகங்களில் போஸ்ட் செய்து எப்போதும் வைரலை கிளப்பும் ஜோடியாக இவர்கள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது இவர்கள் ஒரு அற்புதமான படத்தை பகிர்ந்துள்ளார்கள். ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ள இந்த படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அனுஷ்கா இப்போது கர்ப்பமாக உள்ளார். இந்த ஜோடி தங்களது முதல் குழந்தையை வரவேற்க ஆயத்தமாகி வருகின்றனர். இப்போது அனுஷ்கா ஷர்மாவுக்கான (Anushka Sharma) டெலிவரி தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இருந்தும் அதையெல்லாம் அவர் பொருட்படுத்தவில்லை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளுக்கு தான் செய்யும் தினசரி விஷயங்களை அடிக்கடி பகிந்துகொண்டு வருகிறார். அதில் நடிகை டிரெட்மில்லில் (treadmill) பயிற்சி செய்வதைக் காணலாம். அனுஷ்கா ஒரு தளர்வான ஒயிட் ட்ரெஸ்ஸை அணிந்திருந்தார், அதனுடன் பிளாக் கலர் ஜிம் பேன்ட் மற்றும் ஸ்னீக்கர்களுடன் டிரெட்மில்லில் (treadmill) பயிற்சி செய்துகொண்டுள்ளார், வீடியோவை கீழே காணுங்கள்.
மேலும் அனுஷ்கா சமீபத்தில் ஒரு பத்திரிகைக்காக செய்த போட்டோஷூட் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஷூட்டிலிருந்து அவர் பகிர்ந்து கொண்ட படங்களில், தனது கர்ப்பத்தை வெளி உலகிற்கு தெரிவிக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்களிடையே பலத்த எதிர்ப்பு கருத்துக்களின் மூலம் வந்துகொண்டிருக்கிறது. சிலரோ இந்த புகைப்படங்கள் பிரமிக்கவைக்கிறது என்று கமெண்ட் செய்துள்ளனர், சிலர் நடிகை பாரம்பரிய இந்திய மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிராக நடப்பதாக கூறுகின்றனர் .
போஸ்ட்களைப் பாருங்கள்:
நடிகை அனுஷ்கா கடந்த ஆண்டு ஒரு சமூக ஊடக பதிவில் தனது குழந்தையின் வரவை அறிவித்திருந்தார். இந்நிலையில், தன்னுடைய குழந்தை வர கொஞ்சம் நாட்களே இருப்பதை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார் அனுஷ்கா சர்மா. இதற்கு விராட் கோலி, தன்னுடைய முழு இது தான் உலகம் என்று தெரிவித்துள்ளார். அறிவிப்புக்குப் பிறகு, அனுஷ்கா தனது மகிழ்ச்சியான புகைப்படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார். ஒரு புகைப்படத்தில், அவர் தனது கணவரின் உதவியுடன் தலைகீழாக யோகா செய்யும் போட்டோவும் வெளியாகியுள்ளது.
இன்னும் 4 நாட்கள்தான்... வேதனை வலிகளுக்கு அர்த்தம் கிடைக்கப்போகிறது - செல்வராகவன் மனைவி குழந்தை பிறப்பு பற்றி நெகிழ்ச்சி..!
தனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு அனிமல் தீமில் உடை வடிவமைத்து உள்ளனர். ஆண் குழந்தைகள் நீல நிறத்திலும், பெண் குழந்தைகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் தான் உடைகளை அணிய வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் கிடையாது. குழந்தைகள் எந்த நிற உடை வேண்டும் என்றாலும் அணியலாம்” என்று கூறியுள்ளார். கர்ப்பத்திற்கு முன்னரே தான் யோகா செய்வதால் இப்போதும் தொடர்ந்து யோகா செய்ய தனது மருத்துவர் அனுமதித்ததாகவும் அவர் தனது இன்ஸ்டா ஃபாமிற்கு (insta fam) தெரிவித்தார். இது தவிர, நடிகை அனுஷ்கா ஷர்மா யோகா ஆசிரியருக்கும், விராட்டுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த போஸ்டுக்கு இப்போதுவரை 4 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன.
இதற்கிடையில், அனுஷ்கா கடைசியாக ஜீரோ (Zero) படத்தில் நடித்தார். இப்படத்தில் நட்சத்திர நடிகர்களான ஷாருக் கான், கத்ரீனா கைஃப் மற்றும் ஷீபா சத்தா (Shah Rukh Khan, Katrina Kaif and Sheeba Chaddha) ஆகியோர் நடித்துள்ளனர்.