பணியிடத்தில் பாசிடிவிட்டி அதிகரித்தால் ஊழியர்களின் வேலைத் திறனும் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்

ஒரு தலைமையின் நிர்வாகம் என்பது தன்னுடைய ஒட்டுமொத்த ஊழியர்களையும் ஒன்று சேர பார்ப்பதுதான்.

Web Desk | news18
Updated: March 19, 2019, 10:40 PM IST
பணியிடத்தில் பாசிடிவிட்டி அதிகரித்தால் ஊழியர்களின் வேலைத் திறனும் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: March 19, 2019, 10:40 PM IST
உங்கள் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமானால் அலுவலகத்தில் ஊழியர்களிடையே பாசிடிவிட்டி அதிகரிக்க வேண்டும் என ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இந்த ஆராய்ச்சியை அமெரிக்க பிங்காம்டன் பல்கலைக்கழகம் நான்ப்ராஃபிட் அண்ட் வாலண்டரி செக்டார் குவார்டெர்லி என்கிற ஜர்னலில் வெளியிட்டுள்ளது.

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரின் வேலைக்கு, திறமைக்கு, நம்பிக்கைக்கு, தியாகத்திற்கு, கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்தால் அவர் அந்த நிறுவனத்திற்காக இன்னும் கூடுதலாக உற்சாகத்துடன் உழைப்பார் என கிம் பிரிம்ஹால் கூறுகிறார். இவர் அமெரிக்க பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருக்கிறார்.


அந்த ஆராய்ச்சியில், நிறுவனத்தின் தலைவரோ அல்லது குழுவின் தலைவரோ ஒரு ஊழியரின் கல்வி, குடும்பப் பின்னணி, எப்படிப்பட்ட வேலை என்றெல்லாம் பாராமல் அவரைப் பாராட்டி உற்சாகம் செய்கிறார் எனில் அங்கு நிறைவான பணிச் சூழல் இருக்கும் என்றும் அந்த ஊழியரின் வேலை, திறமையில் திருப்தி ஏற்பட்டு நிறுவனத்திற்காக இன்னும் கூடுதலாக உழைக்கவும் தயாராக இருப்பார் என்று குறிப்பிடுகிறது.

”ஒரு தலைமையின் நிர்வாகம் என்பது தன்னுடைய ஒட்டுமொத்த ஊழியர்களையும் ஒன்று சேர பார்ப்பதுதான். குறிப்பாக திடீர் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களின் முடிவுகளையும் கேட்டறிய வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் அறிந்து அதற்கு ஏற்ப உழைப்பார்கள். அந்த முடிவில் அவர்களின் பங்கும் உள்ளதெனில் அந்த வேலையை தன்னுடைய வேலையாக நினைத்து மிகுந்த அக்கறையுடனும், கவனத்துடனும் செயல்படுவார்கள் என்று பிரிம்ஹால் கூறுகிறார்.

இதன்மூலம் இந்த ஆராய்ச்சி தரவுகள் மற்றும் முடிவுகளுக்குப் பிறகாவது ஒவ்வொரு தலைவர்களும் தக்களுடைய நிர்வாக செயல்பாடுகளை மாற்றிக் கொள்வார்கள் . ஊழியர்களுடன் நேர்மறை எண்ணங்களை வளர்த்து ஆரோக்கியமான பணிச் சூழலை அமைப்பார்கள் என்று நம்பிக்கையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Loading...

 

First published: March 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...