Home /News /lifestyle /

தைப்பொங்கல் 2022 : பொங்கல் தேதி, நேரம் குறித்த முழு விவரங்கள்!

தைப்பொங்கல் 2022 : பொங்கல் தேதி, நேரம் குறித்த முழு விவரங்கள்!

தைப்பொங்கல் 2022

தைப்பொங்கல் 2022

Pongal 2022 : தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்திலும் விவசாயம் மற்றும் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்கள், அவரவர் பாரம்பரிய முறைப்படி இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
    தைப்பொங்கல் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்த மிகவும் முக்கியமான, பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாகும். உழவுத் தொழிலுக்கும், உழவர்களுக்கும் மரியாதை செலுத்துமாறு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகை என்று சொல்வதை விட தங்களின் உழைப்புக்கும், உழைப்பால் கிடைத்த பலனுக்கும், அதற்கு உதவிய இயற்கைக்கும், உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றியையும் மரியாதையையும் செலுத்தும் ஒரு திருவிழாவாக தான் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் என்பது வாழ்வியல் கொண்டாட்டம் :

    நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளின் இரண்டாவது நாள் தான் தைப்பொங்கல். பாரம்பரிய கொண்டாட்டங்கள் எல்லாமே வாழ்க்கை முறையோடு இணைந்துள்ளது. மார்கழி மற்றும் தை மாதங்களில் அறுவடை ஆகும். இந்த காலகட்டத்தில் அறுவடையாகும் நெல், கரும்பு மற்றும் தானிய வகைகளை தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து அந்த உழைப்பின் பயனை கொண்டாடி மகிழ்வது தான் இந்த பாரம்பரியத் திருவிழாவாகவே. நான்கைந்து மாத உழைப்பின் பலனை குடும்பம் மற்றும் சுற்றுப்புறத்தாரோடு இணைந்து கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    பொங்கல் 2022 – வரலாறு, சிறப்பம்சம் மற்றும் முக்கியத்துவம் :

    மார்கழி மாதத்தின் இறுதி நாளன்று கொண்டாடப்படுவது போகி. பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கிய நாளான தைப்பொங்கல், தை மாதத்தின் முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளன்று, மகர ராசியில் சூரியன் பெயர்ச்சியாகும். பொங்கலை மகர சங்கராந்தி என்று நாடு முழுவதும் அழைப்பார்கள். உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் இந்த பண்டிகை அமைந்துள்ளது.

    பொங்கலின் முக்கியத்துவம் பற்றி, பொங்கல் பண்டிகையை எப்படி எல்லாம் கொண்டாடுவார்கள் என்பது பற்றி சங்க இலக்கியங்களில் பாடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, தமிழர் கலாச்சாரத்தில் பெரும்பாலும் எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் துவக்குவது செழிப்பாக வளரும் என்பது பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் பழக்கம்.

    ALSO READ |  தைப் பொங்கல் திருநாள் - தமிழர்களின் பாரம்பரிய திருவிழா

    இல்லங்களில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகுதல் :

    தை மாதம் வருவதற்கு முன்னரே வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்வது வீட்டிற்கு வண்ணம் பூசுவது, அலங்கரிப்பது என்று வீட்டையே புதிதாக மாற்றத் துவங்குவார்கள். மார்கழி மாதத்திலேயே வீட்டு வாசலில் அழகான கோலங்கள் போட்டு, பொங்கலைக் கொண்டாட சில வாரங்களுக்கு முன்னரே தயாராகி விடுவார்கள். அதே போல, பொங்கலன்று பெரிய வண்ணக் கோலங்கள் போட்டு வாசலை அலங்கரிக்கின்றனர்.



    பொங்கல் பானையை மாவிலை, மஞ்சள் கிழங்கு, பூக்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றால் அலங்காரம் செய்வார்கள். பல இடங்களில், பாரம்பரிய முறைப்படி வீட்டின் வெளிப்புறங்களில் அடுப்பில் பொங்கல் பானையை வைத்து பொங்கல் பொங்கும் பழக்கம் இன்னும் தொடர்ந்து வருகிறது. புதிய அரிசி பானை, புதிய அரிசி மற்றும் பொங்கலுக்காக புதிதாக வாங்கப்பட்ட வெல்லம் ஆகியவற்றை கொண்டு, சர்க்கரை பொங்கல் மகிழ்ச்சியுடன் பொங்கல் கொண்டாடப்படும்.

    ALSO READ |  தை மாதத்தின் சிறப்புகள்

    வீட்டின் வெளிப்புறங்களில், வாசல், மொட்டை மாடி, தோட்டம் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பானை வைப்பவர்கள், பூஜை போடும் இடத்தில் அரிசி மாவில் கோலம் போட்டு, அதன் மேல் வாழையிலை வைத்து, கரும்புகளை வைத்து அலங்கரிக்க வேண்டும்.



    நகரங்களில், அடுக்கு மாடி கட்டிடங்களில் வசிப்பவர்களும் புதிய பானைகளை வாங்கி மஞ்சள், குங்குமம், வாழையிலை, வைத்து அலங்கரித்து அதில் பொங்கல் பொங்கும் வழக்கம் உள்ளது.

    கிராமம் மற்றும் சிறு நகரங்களில், விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கு நன்றியும் மரியாதையும் செலுத்தும் வகையில், வீட்டு வாசலிலேயே அல்லது வீட்டின் தோட்டத்தில் அதாவது வெளிப்புறத்தில் பொங்கலுக்காக அடுப்பு தயார் செய்து புதிய பானையில் அரிசி, பால், வெல்லம் சேர்ந்து பொங்கல் பொங்கி கொண்டாடும் பழக்கம் இன்னும் தொடர்ந்து வருகிறது.

    ALSO READ |  பொங்கலுக்கு என்ன கோலம் போட போறீங்க..? வகை வகையான பானைக் கோலம் வரைய ஐடியாஸ்..!

    2022 ஆம் ஆண்டு தைப்பொங்கல் ஜனவரி 15, வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.

    தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்திலும் , விவசாயம் மற்றும் உழவுத் தொழிலை அடிப்படையாகக் கொண்டவர்கள் ,  அவரவர் பாரம்பரிய முறைப்படி இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Pongal, Pongal festival

    அடுத்த செய்தி