மாதுளை எனும் அழகுக் குறிப்பு!

தோல் முதல் விதை வரை அனைத்துமே அழகை மீட்டெடுக்கும் மூலக்கூறுகளாகும்.

Web Desk | news18
Updated: February 9, 2019, 12:10 PM IST
மாதுளை எனும் அழகுக் குறிப்பு!
மாதுளைப் பழம்
Web Desk | news18
Updated: February 9, 2019, 12:10 PM IST
மாதுளை உடலுக்கு மட்டுமல்ல சருமத்தை பொலிவுடன் பாதுகாக்கவும் பயன்படுகிறது. அதன் தோல் முதல் விதை வரை அனைத்துமே அழகை மீட்டெடுக்கும் மூலக்கூறுகளாகும். எவ்வாறு என்பதைக் காணலாம். 

முகக் கருமை நீங்க

தேவையான பொருட்கள்

மாதுளை விதைகள் - 1 tbsp
எலுமிச்சை சாறு - 1/2 tbsp

செய்முறை : மாதுளை விதைகளை மைய அரைத்துக் கொள்ளவும். அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறை கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிவரை தடவவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். எலுமிச்சைக் கருமையை போக்க வல்லது.

மென்மையான சருமம் பெற
Loading...
தேவையான பொருட்கள்

மாதுளை விதைகள் - 1 tbsp
தேன் - 1 tbsp

செய்முறை : மாதுளை விதைகளை பேஸ்டாக அரைத்து அதில் தேன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதி வரைத் தடவவும். பின், 30 நிமிடங்கள் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும்.இந்த பேக் மென்மை மட்டுமன்றி முகத்தில் நீரோட்டத்தையும் அதிகப்படுத்தி வறட்சியைத் தடுக்கிறது.

இறந்த செல்களை நீக்க

தேவையான பொருட்கள்

மாதுளை விதை எண்ணெய் - 2 tbsp
பச்சை பப்பாளி பவுடர் - 1 tbsp
திராட்சை விதை எண்ணெய் - 1 tbsp
திராட்சை விதைச் சாறு - 1 tbsp

செய்முறை : மேலே குறிப்பிட்டுள்ள நான்கு பொருட்களையும் சரியான அளவில் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பத்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின் அரை மணி நேரம் காய விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த மசாஜ் முகத்தில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கி முகத்தில் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முற்றிலும் நீக்கி தெளிவு கொடுக்கும்.



முகம் பொளிவு பெற

தேவையான பொருட்கள்

மாதுளை விதைகள் - 1tbsp
கெட்டித் தயிர் - 1 tbsp
கிரீன் டீ இலைச் சாறு - 1 tbsp
தேன் - 1 tbsp

செய்முறை : ஒரு பவுளில் மேலே குறிப்பிட்டுள்ள நான்கையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி 5 - 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பிறகு அதை 20 நிமிடங்களுக்குக் காய விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இது தெளிவான சருமத்தை மீட்டெடுத்து புத்துணர்வை அளித்து பொளிவை ஏற்படுத்தும்.

முகச் சுருக்கம் நீங்க

தேவையான பொருட்கள்

மாதுளை விதைகள் - 1 tbsp
கோகோ பவுடர் - 1 tbsp

செய்முறை : மாதுளை விதைகளை மைய அரைத்து அதனோடு கோகோ பவுடரை கலந்து கொள்ளவும். மிகவும் கெட்டியாக இருக்கும் பட்சத்தில் நீர் சேர்த்துக் கொள்ளலாம். பேஸ்ட் போல் கலந்ததும், முகத்தில் மாஸ்காக அப்ளை செய்யவும்.  காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். இது முகத்தில் சுருக்கங்களை நீக்கி இளமை தோற்றத்தை அளிக்கும்.
First published: February 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...