கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராட பாடம் கற்பிக்கும் போலியோ ஒழிப்பு..

காட்சி படம்

உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சியின் மூலம் சர்வதேச அளவில் போலியோ பாதிப்பானது 99.9 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

  • Share this:
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பினர் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு குழப்பமான மற்றும் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. எனவே அமெரிக்கா, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் அங்கிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்கள் மற்றும் அதிகாரிகளை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சியின் மூலம் சர்வதேச அளவில் போலியோ பாதிப்பானது 99.9 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.

ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், போலியோவும் தொற்று நோய் தான் என்பதை தற்போது கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. ஏனென்றால் உலகளவில் தற்போது போலியோ பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் மட்டுமே பெருமளவு உள்ளது. போலியோ நரம்பு மண்டலத்தை ஆக்கிரமிக்கும் ஒரு வைரஸால் ஏற்படும் தீவிர தொற்று நோயாகும். நோய்வாய்ப்பட்ட நபரின் மலம் அல்லது தும்மல் அல்லது இருமலில் இருந்து நீர்த்துளிகளுடன் தொடர்பு கொண்டு போலியோ வைரஸ் பரவுகிறது.

இந்நிலையில் தான் ஆப்கானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக பல்வேறு நாட்டினர் மீண்டும் தாயகம் திரும்பி வருகின்றனர்.இந்தியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகள் போலியோ வைரஸுக்கு எதிரான கடுமையான போரில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது நாடு கோவிட் -19 தொற்று நோயை எதிர்த்து ஓரடி வரும் போது போலியோ மீண்டும் உள்நுழைந்து விட கூடாது என்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

எனவே ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பியவர்கள் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில், போலியோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. இதனிடையே போலியோ ஒழிப்பு திட்டம் தற்போதைய கோவிட் -19ஐ எதிர்த்துப் போராடுவது பற்றி பாடங்களை நமக்கு கற்பிக்கிறது. போலியோவை போல கொரோனாவை முழுவதுமாக உலகை விட்டு ஒழிக்க மக்களிடையே இருக்கும் தடுப்பூசி தயக்கங்களை போக்க வேண்டும்.

உள்ளூர் மற்றும் மத தலைவர்கள் :

நைஜீரியாவில் போலியோவை ஒழித்ததில் முக்கிய பங்கு வகித்த டாக்டர் துஞ்சி ஃபன்ஷோ கூறுகையில் போலியோ சொட்டு மருந்தை போட்டு கொள்ள நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்கா மக்கள் முன்பு தயக்கம் காட்டியது போலவே, கோவிட் தடுப்பூசிக்கும் தயக்கம் காட்டி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். தடுப்பு மருந்து குறித்த கட்டுக்கதைகளை தடுப்பது மற்றும் தகவல் தொடர்பு இரண்டும் மிக முக்கியமான பணி என்றார். நைஜீரியாவில் போலியோ தொற்று இருந்த போது, ​​உள்ளூர் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் சொட்டு மருந்து மீது மக்கள் நம்பிக்கை வைக்க உதவி செய்ததாகவும் குறிப்பிட்டார். நைஜீரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் உள்ளூர் மற்றும் மத தலைவர்களை மக்கள் அதிகம் நம்புவதால் அவர்கள் மூலம் கோவிட் தடுப்பூசி பற்றிய சரியான தகவல்கள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு தடுப்பூசி மீதான பயம் மற்றும் தயக்கத்தை அகற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குடும்பங்களை ஊக்குவிக்கலாம் :

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி பெற குடும்பங்களை ஊக்குவிக்கலாம் என்ற கருத்தையும் டாக்டர் துஞ்சி ஃபன்ஷோ கூறி இருக்கிறார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை ஊக்குவிக்க, முன்னணி சுகாதார பணியாளர்கள் குடும்பங்களுக்கு உணவு மற்றும் பிற வீட்டு பொருட்களை வழங்கினர். இதன் மூலம் அதிக பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்தை செலுத்த முன்வந்தனர். தற்போது நிலவும் கொரோனா சூழலில் தடுப்பூசிகள் பெறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மக்கள் ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற யுத்திகளை கையாளலாம் என்றார்.

Also Read : என்டமிக் நிலையில் இந்தியா.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

விளம்பரங்கள் :

போலியோ ஒழிப்புக்காக நைஜீரியாவில் வானொலி விளம்பரங்கள், கிராமங்களை சுற்றிலும் அறிவிப்புகள் மற்றும் பிரபல விளம்பர பலகைகள் மூலம் தடுப்பூசி சார்பு செய்திகள் உருவாக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு தொடர்ந்

து வைக்கப்பட்டது. இதேபோல் கோவிட் -19 விவகாரத்திலும் கிராமப்புற மக்களை சரியான தகவலுடன் பொருத்தமான ஊடகம் மூலம் சென்றடைவது அவசியமாகிறது. தவிர தடுப்பூசி போட்டு கொள்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டும் வகையில், தடுப்பூசி போடும் செயல்முறையை எளிமையாக்க வேண்டும்.

அதிகபட்ச நன்மைகளை எடுத்துரைத்தல் :

தடுப்பூசியின் உயிர் காக்கும் முக்கியத்துவம் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசிகளை போட்டு கொள்வதால் கிடைக்கும் அதிகபட்ச நன்மைகளை பொதுவான மக்களுக்கு மட்டுமன்றி பெற்றோர்கள், சமூக மற்றும் மதத் தலைவர்கள் போன்றவர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டி கொண்டே இருக்க வேண்டும். அபோது தான் அவர்கள் மக்களுக்கு தடுப்பூசியின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்றார்.

Also Read : கொரோனாவிலிருந்து மீண்டவரா நீங்கள்? அப்ப கட்டாயம் இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்கள்..

இதனிடையே ரோட்டரியின் இந்திய தேசிய போலியோப்ளஸ் குழுவின் தலைவரும், இந்தியாவில் ரோட்டரியின் கோவிட்-19 பணிக்குழுவின் துணைத் தலைவருமான தீபக் கபூர் பேசுகையில், பல ஆண்டுகளாக பயனுள்ள போலியோ நோய்த்தடுப்பு காரணமாக, ஏற்கனவே நாட்டில் குறிப்பாக கிராமப்புறங்களில் தடுப்பு மருந்துக்கு நன்கு கட்டமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு இருக்கிறது. போலியோவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திலிருந்து தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்பை நாங்கள் மேம்படுத்துகிறோம்.

இது கொரோனவை தடுப்பதற்கான வழிகளை குடிமக்களுக்கு கொண்டு சேர்க்க, தகவல் சீரானதாகவும், எளிமையாகவும், பல மொழிகளில் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்பதை காட்டுகிறது என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் கூறிய தீபக் கபூர், " ஆப்பிரிக்காவில் போலியோவை எதிர்கொள்ள பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து போராடின. இதே போல தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய மற்றொரு நோயாக இருக்க கூடிய கொடிய கொரோனவை வெல்ல நாம் தொடர்ந்து ஒன்றாக இணைய வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மேலும் பேசிய கபூர், மக்களிடையே காணப்படும் தடுப்பூசி தயக்கத்தை போக்க அவர்களிடம் இருக்கும் எந்த ஒரு அடிப்படை பயத்தையும் போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். தடுப்பூசிகள் பற்றிய பயத்தை போக்கவும், தவறான தகவலை தவறு என்று மக்களிடையே சுட்டி காட்டவும் அறிவியல் தரவுகளால் ஆதரிக்கப்படும் தடுப்பூசிகளைப் பற்றிய நம்பகமான புள்ளிவிவரங்கள் உதவும் என்றும் குறிப்பிட்டார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: