தாவரங்களின் தகவல் பரிமாற்றத்தை இசையாக மாற்றும் கருவி! எப்படி சாத்தியம்..?

இசிஜி கருவிகள் எப்படி கிராஃப் உருவாக்குகிறதோ அப்படிதான் இந்தக் கருவியும் செயல்படுகிறது

news18
Updated: August 24, 2019, 6:25 PM IST
தாவரங்களின் தகவல் பரிமாற்றத்தை இசையாக மாற்றும் கருவி! எப்படி சாத்தியம்..?
தாவரங்கள்
news18
Updated: August 24, 2019, 6:25 PM IST
செடிக்கள் ஒலிக்கும் இசையைக் கேட்டிருக்கிறீர்களா.. அவற்றை நீங்கள் தொடும்போதெல்லாம் ஒவ்வொரு இசையை ஒளிக்கின்றன என்பது தெரியுமா... இந்த அனுபவத்தை காண வேண்டுமெனில் நீங்கள் மும்பையில் உள்ள விரிக்‌ஷா நர்சரிக்குத்தான் செல்ல வேண்டும்.

ஆம், இங்கு புதிதாக ஒரு மின்சாதனக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கருவி மின் கடத்திகளை செடிகளில் பாய்ச்சி அவை இசையாக அவற்றை எதிர்வினையாக்குகின்றன. எப்படி சாத்தியம் என்கிறீர்களா..

இது குறித்து விரிக்‌ஷா நர்சரியின் நிறுவனர் ஷான் லால்வாணி டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெளிவாக விளக்கியுள்ளார். அதில் தாவரங்கள் ஒன்றுக்கொன்று தங்களின் தகவல் பரிமாற்றங்களை இரசாயணங்கள் மூலமாகவோ அல்லது மின் அதிர்வுகள் மூலமாகவோ தெரிவிக்கின்றன. இதனால் அவைகளுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளை மற்ற தாவரங்கள் மூலம் தெரிந்து தற்காத்துகொள்கின்றன. இந்தப் பரிமாற்றங்களை மனிதர்களால் உணர முடியாது. அதை அறியவே இந்த கருவி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.


அதாவது ”இந்த கருவியானது தாவரங்களில் படர்ந்திருக்கும் மின்சார அதிர்வுகளை அளவிட்டு அவற்றை இசையாக மாற்றி மெல்லிய இசையை ஒலிப்பதே இந்த கருவியின் வேலை. உதாரணமாக இசிஜி கருவிகள் எப்படி கிராஃப் உருவாக்குகிறதோ அப்படிதான் இந்தக் கருவியும் செயல்படுகிறது” என்று கூறுகிறார் ஷான்.

இந்தக் கருவியை MIDI sprout என்று அழைக்கின்றனர். இந்தக் கருவியை கலை, தாவரங்களை ஆராயும் டேடா கார்டன் ( data garden) வெளியிட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் இந்த கருவையை லால்வாணி வாங்கியுள்ளார். இந்தக் கருவியால் தாவரங்களிலிருந்து கிடைக்கும் இசையை நர்சரியில் பணியாற்றும் ஊழியர்கள் மிகவும் மகிழ்வதாக தெரிவிக்கிறார். ஒவ்வொரு நாளும் அவர்கள் செடிகளுக்கு, கலை எடுக்கும் போதும், தண்ணீர் பாய்ச்சும்போதும் அவை ஒலிக்கும் இசை மெய்மறக்கச் செய்வதாக கூறுகிறார் லால்வாணி.


Loading...
இந்த அனுபவத்தை தாங்கள் மட்டும் ரசிக்காமல் அதன் ஒவ்வொரு இசையையும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிடுகின்றன. அதோடு பூரிப்படைய வைக்கும் வாக்கியங்களோடு வீடியோவை பதிவிடுவது காணும் பயனாளர்களுக்கு மெல்லிய உணர்வை அளிக்கிறது. அதை ஒவ்வொரு பயணார்களுமே அவர்களின் பதிவின் கமெண்ட்டுகளில் தெரிவிக்கின்றனர். தற்போது அவர்கள் 12,000 இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளனர். அதுமட்டுமன்றி நேரடியாகவும் வந்து இளைப்பாறிவிட்டுச் செல்வதாகவும் , அதோடு செடியில் இருக்கும் இத்தனை அதிசயத்தைக் கண்டு வியப்பதோடு வளர்க்கும் ஆர்வம் அதிகரித்து, செடிகளை வாங்கிச் செல்வதாக லால்வாணி குறிப்பிடுகிறார். வார இறுதி நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்வதாகத் தெரிவிக்கிறார் லால்வாணி.
First published: August 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...