வீட்டில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைப் பராமரிப்பது எப்படி?

கொசுக்கள் தங்கி உற்பத்தி செய்வதற்கான சூற்றுச்சூழலை தவிறுங்கள்..!

news18
Updated: August 20, 2019, 5:23 PM IST
வீட்டில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைப் பராமரிப்பது எப்படி?
கொசு
news18
Updated: August 20, 2019, 5:23 PM IST
கொசுக்கள் வெளியிலிருந்து வரும் பூச்சி என நினைத்துவிடாதீர்கள். உங்கள் வீட்டிலேயே சில சுகாதாரமற்ற விஷயங்களாலும் கொசுக்கள் உற்பத்தியாகும். இல்லையெனில் வெளியிலிருந்து வந்து அவை வீட்டுக்குள்ளேயே தங்கி உற்பத்தி செய்ய அவை ஏதுவாகவும் இருக்கும். அந்த இடங்களை எப்போதும் சுத்தமாகப் பராமரிப்பது அவசியம். 

திரைச் சீலைகள்: வீட்டின் முன் அழகுக்காக தொங்கவிடப்படும் திரைச் சீலைகளை வாரம் ஒரு முறையேனும் துவைத்து பயன்படுத்துங்கள். அதில் கொசுக்கள் தொற்றிக் கொண்டு ஒளிந்திருக்கும். திரைச்சீலைகள் துர்நாற்றத்துடன் இருப்பது கொசுக்களுக்கு கூடுதல் வசதியாக இருக்கும்.

குப்பைத் தொட்டி : குப்பைத் தொட்டியில் கழிவுகளைத் தேக்கி வைக்காமல் அவ்வபோது கொட்டி தூய்மையாக வைத்துக்கொள்வது நல்லது. அவற்றை திறந்த நிலையில் வைக்காமல் மூடி வைப்பது கொசுக்கள் மொய்ப்பதை தவிர்க்கலாம்.




கழிவறைகள் : கிருமிகளின் வாழ்விடம் கழிவறைகள்தான். கழிவறையை தினமும் கழுவி தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். கழிவறை டவல், குப்பைத் தொட்டிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். வாசனைத் திரவியங்கள் கொசுக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே அவற்றைப் பயன்படுத்தி கொசு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

வீட்டின் மூலைகள் : மூலைகளிலும் கொசுக்கள் ஒட்டிகொண்டிருக்கும். மூலைகளில் அழுக்குத் துணி, தேவையற்றப் பொருட்களை தேக்கி வைப்பது என இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

Loading...




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...