இன்றைய மாணவர்கள் நாளையத் தலைவர்கள் என்னும் வாக்கியத்தை உணர்ந்த ஃபிலிபைன்ஸ் அரசு, இந்த சிறந்த பழக்கத்தை மாணவர்களிடம் விதைத்துள்ளது. இயற்கையை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று வாய்மொழிதல் மட்டும் போதாது. அதை செயல்படுத்துதல்தான் சிறந்தது என நினைத்த பிலிபைன்ஸ் அதை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடமிருந்து துவங்கியுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் பட்டம் பெறும் போது கட்டாயம் 10 மரங்களை நட்டு வளர்த்திருக்க வேண்டும் என சட்டம் இயற்றியுள்ளது. சுற்றுச்சூழல் சட்டத்திற்கான பட்டதாரி மரபுரிமை ( Graduation Legacy For the Environment Act ) என்ற பெயரில் இந்தச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அளித்துள்ள இந்த சட்ட விளக்கத்தில், ‘கல்வி முறை என்பது ஒரு சமூக பொறுப்புணர்வு. அதேசமயம் குடிமக்களின் விவசாயம் மற்றும் பயிர்த் தொழிலை உறுதிப்படுத்துவதற்காகவும், இளம் வயதினரிடையே இயற்கை வளங்களின் நெறிமுறை மற்றும் நிலையான பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்காகவும் இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
ஃபிலிபைன்ஸில் ஒரு வருடத்திற்கு 1.2 கோடி மாணவர்கள் பள்ளிப் படிப்பையும், ஐம்பது லட்சம் மாணவர்கள் கல்லூரி படிப்பையும் முடிக்கின்றனர். இறுதியாக வருடத்திற்கு 5,00,000 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். எனவே இந்த சட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் 17.5 கோடி மரங்கள் நடப்பட்டு வளர்ந்து செழிக்கும் என ஈவினிங் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
இதை மாணவர்கள் சரியாக கடைப்பிடிக்கின்றனரா என கல்வித்துறை கண்காணித்து ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு பருவ மாற்றத்திற்கு ஏற்ற மரங்கள், மண் வளம் குறித்தும் விழிப்புணர்வுகள், பரிந்துரைகளை கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் இந்தியாவிலும் சட்டம் இயற்றப்பட்டால் எப்படி இருக்கும்?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Philippines