Home /News /lifestyle /

செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் உணவு ஒவ்வாமையின் அறிகுறிகளை கண்டறிவது எப்படி..?

செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் உணவு ஒவ்வாமையின் அறிகுறிகளை கண்டறிவது எப்படி..?

செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் உணவு ஒவ்வாமை

செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் உணவு ஒவ்வாமை

செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கப்படும் அனைத்து உணகளிலும் புரதம் சிறிது பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. அரிப்பு மற்றும் பல ஒவ்வாமை அறிகுறிகளுக்கு புரதங்கள் காரணமாகின்றன.

பெரும்பாலான இந்திய வீடுகளில் மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் பிராணிகளில் நாய்க்கு தான் முதலிடம். குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு அவற்றுக்கு சாப்பிட கொடுக்கும் சில உணவுகளால் அலர்ஜி ஏற்படுவது பொதுவானது.

குறிப்பாக நாய்களுக்கு ஏற்படும் அலர்ஜி நிகழ்வுகளில் கிட்டத்தட்ட 10 சதவீதம் உணவுகளால் ஏற்படுவதாக கால்நடை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். பொதுவாக பால், கோதுமை, முட்டை, கோழி மற்றும் ஆட்டிறைச்சி,சோயா, மீன் ஆகியவை ஒவ்வாமை பொருட்களாக கருதப்படுகின்றன. உங்கள் வீட்டு நாய் கடும் அரிப்பு, கண்களில் நீர் வடியும் பிரச்சனை, ஸ்கின் ரேஷஸ், காதில் தொற்று அல்லது முடி உதிர்தல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவ நிபுணரின் உதவி பெற வேண்டியது அவசியம்.

செல்ல பிராணிகளுக்கு ஏற்படும் உணவு அலர்ஜி வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளோடு நின்று விடாது. சில நேரங்களில் தோல் பிரச்சனைகள் மற்றும் நடத்தை மாற்றங்களை ளை ஏற்படுத்தலாம். அலர்ஜி பிரச்சனைகள் ஒன்றை சாப்பிட்டவுடனோ அல்லது சாப்பிட்ட சில மணிநேரங்களுக்கு பிறகோ ஏற்படலாம் என்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.

ஒரு செல்லப்பிராணிக்கு எந்த உணவுப் பொருள் மூலமாகவும் அலர்ஜி ஏற்படலாம் என்றாலும், புரத உணவுகள் (சிக்கன், முட்டை, பால் பொருட்கள்) தானியங்கள் (குளுட்டன்) உள்ளிட்டவை அவற்றுக்கு ஏற்படும் அலர்ஜி எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும் மிகவும் பொதுவான பொருட்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள் மருத்துவர்கள்.



செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கப்படும் அனைத்து உணகளிலும் புரதம் சிறிது பிரச்சனைக்குரியதாக இருக்கிறது. அரிப்பு மற்றும் பல ஒவ்வாமை அறிகுறிகளுக்கு புரதங்கள் காரணமாகின்றன. காய்கறிகளில் கூட புரதங்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் அலர்ஜிக்கான அறிகுறிகள் :

அரிப்பு, ஸ்கின் ரேஷஸ், தும்மல், செதில் மற்றும் எண்ணெய் பசை சருமம், கண்களில் இருந்து நீர் வருவது, முடி உதிர்வது, காது தொற்று, சருமம் அல்லது காதுகளில் இரண்டாம் நிலை ஈஸ்ட் அல்லது பாக்டீரியா தொற்று, வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு, மலம் கழிப்பதில் சிரமம், வயிற்று வலி.

உங்கள் நாயை ஆரோக்கியமாக வைத்திருக்க சரியான Dog Food-ஐ தேர்வு செய்வது எப்படி?

அரிதான அறிகுறிகள்:

சுவாச பிரச்சனைகள், மூக்கிலிருந்து திரவ வெளியேற்றம்,எடை இழப்பு, இரண்டாம் நிலை சிறுநீர் பாதை தொற்று போன்றவை ஆகும்.

நடத்தை மாற்றங்கள்: அமைதியாக இல்லாமல் இருப்பது, விளையாடாமல் சுணங்கி போவது, அடிக்கடி அரிப்பு, பாதங்கள் மற்றும் வால் ஆகியவற்றை கடித்தல், பசியின்மை, காதுகளை அடிக்கடி அசைத்தல் அல்லது காதுகளை கால்களால் சொரிதல்.



சிகிச்சை..

ஃபுட் எலிமினேஷன் டயட்:

உங்கள் செல்ல பிராணிகளுக்கு குறைந்தபட்சம் 8 வாரங்களுக்கு முற்றிலும் புதிய உணவுத் திட்டத்தை வழங்குங்கள். இந்த சோதனைக் காலத்தில், செல்லப் பிராணிக்கு அசுத்தமற்ற எளிய மூலப்பொருள் அடங்கிய உணவு வழங்கப்பட வேண்டும்.உணவு ஒவ்வாமையைக் கண்டறிய இது மிகவும் நம்பகமான முறையாகும்.

துல்லிய முடிவுக்கு..

அலர்ஜி குறித்த துல்லிய முடிவுகளை பெற செல்ல பிராணிகளுக்கு ஸ்னாக்ஸ், சுவையூட்டும் மருந்துகள் அல்லது சப்ளிமென்ட்ஸ்கள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். 8 வாரங்கள் முடிந்த பின் ஒரு குறிப்பிட்ட மூலப்பொருளின் காரணமாக உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்த, செல்லப்பிராணிக்கு மீண்டும் பழைய டயட்டை மெல்ல மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் பழைய உணவு உணவை மீண்டும் அறிமுகப்படுத்துவது தான் எந்த வகை உணவு அலர்ஜியையும் உறுதிப்படுத்த ஒரே வழி. குறிப்பிட்ட ஒன்றால் தான் அலர்ஜி என்பது அடையாளம் காணப்பட்டவுடன், மேலும் எதிர்விளைவுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அலர்ஜி ஏற்படுத்தாத உணவிகள் அடிப்படையில் செல்லப்பிராணிக்கு அதன் டயட் தீர்மானிக்கப்பட வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food allergy, Pet care

அடுத்த செய்தி