வாழைப்பழத்தில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது ஒற்றைத் தலைவலி, மலச்சிக்கல், வாயு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் நமக்கு ஏற்படும் என எச்சரிக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் என அனைத்திலும் எளிதில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று தான் வாழைப்பழம். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் உள்ளது. தினமும் இதனைச் சாப்பிடும் போது மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மேலும் செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் இதற்கான மருந்துகளை உட்கொள்வதற்கு முன்னதாக வாழைப்பழத்தைத் தான் உட்கொள்வார்கள். எனவே தான் ஆரோக்கியமான உணவு முறை பட்டியலில் இடம் பெற்றுள்ளது வாழைப்பழங்கள். மேலும் அனைத்து தரப்பட்ட மக்களும் எளிதில் வாங்கி சாப்பிடும் அளவிற்கான விலையையும் கொண்டுள்ளது.
இப்படி உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையக்கூடிய வாழைப்பழங்கள் இதுவரை மக்களுக்கு எவ்விதமானப் பக்கவிளைவுகளை கொண்டிருக்கிறது என நிரூபிக்கப்படவில்லை. இருந்தபோதும் அளவுக்கு அதிகமாக வாழைப்பழத்தை உட்கொள்ளும் போது சில எதிர்மறை விளைவுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும். வாழைப்பழங்களில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருந்தாலும் ஒரு வரம்பிற்குள் தான் சாப்பிட வேண்டும்.
வாழைப்பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்:
செரிமானப்பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்தைத் தான் தேர்வு செய்வார்கள். ஆனால் அதற்கென்று அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
குறிப்பிட்ட அளவை விட அதிகமாக உட்கொள்ளும் போது ஒற்றைத் தலைவலி ஏற்படும்.
Also Read : உங்கள் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வர என்ன காரணம்..?
வாழைப்பழம் அதிகமாகச் சாப்பிடுவது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைத் தூண்டுகிறது. எனவே அளவோடுச் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் வாழைப்பழத்தை அதிகமாகச் சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்பை ஊக்குவிக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துகள் வாயு பிரச்சனை மற்றும் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
அளவுக்கு மீறி வாழைப்பழம் சாப்பிடுவது பல் சொத்தை போன்ற பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்தும். இரண்டுக்கு மேற்பட்ட வாழைப்பழங்களை அதிகளவில் சாப்பிடுவது நரம்புகளுக்குத் தீங்கு விளைவிக்கும்.
சிறுநீரக நோய் உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்:
வாழைப்பழம் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது ஆரோக்கியமான வாழ்விற்குத் தீங்கு விளைவிக்கும். எனவே தினமும் இரண்டு வாழைப்பழங்களை மட்டுமே சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் உணவை மாற்ற விரும்பினால், ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் சாப்பிடப் பழகுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banana, Diabetics, Kidney Disease