கொரோனா ஊரடங்கால் தற்போது இயற்கை வாழ்க்கை முறைகளை நோக்கி படையெடுக்கும் மக்கள்..

மாதிரி படம்

ஆண்களை விட பெண்கள் இயற்கையின் மீதான தங்களின் காதலை பல வழிகளில் வெளிப்படுத்தினர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

 • Share this:
  இன்று பலருக்கும் இயற்கை என்றால் அலாதி பிரியம். எனினும் நகர வாழ்க்கையில் வசிப்பவர்களுக்கு அதோடு ஒன்றிணைந்து வாழ்வது என்பது கனவாகவே உள்ளது. இந்த குறையை போக்க இயற்கையை நேசிக்கும் மக்கள் இப்போது இயற்கையுடன் (Nature) வாழ முயற்சித்து வருகின்றனர், எப்படி என்று கேட்கிறீர்களா? நம்மை சுற்றியுள்ள கொரோனா (Corona) தான் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆம் இப்போது வெளியான ஆராய்ச்சி அதை உறுதிப்படுத்தியுள்ளது.

  கோவிட் -19 வைரஸ் இயற்கையுடனான மக்களின் உறவை இப்போது புத்துணர்ச்சி பெற வைத்துள்ளது. வெர்மான்ட் பல்கலைக்கழக (University of Vermont) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு ஆய்வில், ஆண்கள் அதிலும் குறிப்பாக பெண்கள், இப்போதுள்ள தொற்றுநோயின் காரணமாக சரணாலயங்களுக்கு (Sanctuary) கூட்டம் கூட்டமாகவும், தனியாகவும் மனச்சோர்வை குறைக்க படையெடுத்து வருகின்றனர். கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில் மக்கள் எவ்வாறு இயற்கையை மதிப்பிடுகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

  நாய், பூனையைப் போல கங்காருவும் மனிதர்களுடன் பழகும் பாசக்கார புள்ளைங்க..! ஆய்வில் தகவல்!

  ப்ளாஸ் ஒன் (PLOS One) இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள், தொற்றுநோய்களின் போது இயற்கையானது மக்களுக்கு ஒரு முக்கியமான அடைக்கலமாக மாறியுள்ளதை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மே 2020ல் அறிவிக்கப்பட்ட அமெரிக்க மாநிலத்தின் "பாதுகாப்பாக இருங்கள், வீட்டிலேயே இருங்கள்" ("Stay safe, stay home") என்ற அரசின் உத்தரவின் போது வெர்மான்ட்டில் 3,200 க்கும் மேற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட ஆன்லைன் கணக்கெடுப்புகளின் தரவை அவர்கள் ஆய்வு செய்தனர்.  இந்த நேரத்தில் வெளிப்புற செயல்பாடுகளில் (outdoor activity), குறிப்பாக பெண்கள் மத்தியில் கணிசமான அதிகரிப்பு இருப்பதாக ஆய்வில் உள்ளவர்கள் தெரிவித்தனர். பலரும், நகர்ப்புற சலசலப்புகளிலிருந்து விலகி, இயற்கை சூழலில் நடந்து செல்வது, சமூக இடைவெளி (70%) காலகட்டத்தில் பங்கேற்பாளர்களிடையே இது பிரபலமானது என்பதை நிரூபித்தது. வெளியில் தனியாக ஓய்வெடுப்பதற்கும் (58%), தோட்டக்கலை (57%) மற்றும் வெளிப்புறத்தில் புகைப்படம் எடுத்தல் (54%) போன்ற கலை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட மக்கள் வாக்களித்தனர்.

  தொற்றுநோயின் போது மக்கள் இயற்கையை மதிப்பிடும் விதத்திலும் மாற்றம் ஏற்பட்டது. பங்கேற்பாளர்கள் குறிப்பிடத்தக்க வகையில், இயற்கையில், அவர்கள் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு (59%), உடற்பயிற்சி (29%) அல்லது இயற்கையின் அழகை (29%) ரசித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். ஆண்களை விட பெண்கள் இயற்கையின் மீதான தங்களின் காதலை பல வழிகளில் வெளிப்படுத்தினர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  தோட்டக்கலை மற்றும் நடைபயிற்சி (gardening and walking) போன்ற பல நடவடிக்கைகளுக்கு இது பொருந்தும். ஆய்வின் மூத்த எழுத்தாளர் ரேச்செல் கோல்ட், "தொற்றுநோய்களின் போது, மன நலம், அழகு, உடற்பயிற்சி, நிலப்பரப்புடன் பரிச்சயம் மற்றும் வேடிக்கை உள்ளிட்ட மதிப்புகளின் முக்கியத்துவத்தை தொற்றுநோய்களின் போது பெண்கள் ஆண்களை விட அதிகமாக மேற்கொண்டுள்ளனர் என்று எங்கள் ஆரம்ப பகுப்பாய்வு தெரிவிக்கிறது. இந்த முடிவை இன்னும் முழுமையாக ஆராய்வதற்கான தரமான தரவை பகுப்பாய்வு செய்யுள்ளோம்" என்று அவர் கூறினார்.

  வீட்டில் இருந்து வெளியே வந்து இயற்கையுடன் உங்கள் வாழ்வை மாற்ற பழகுங்கள். நாம் சுவாசிக்கும் காற்றும் மாசு பட்டிருப்பது அபாயகரமானது. அதுவும் இந்த கொரோனா சூழலில் மாஸ்க் இல்லாமல் வெளியே வரக்கூடாது. நீங்கள் இயற்கையுடன் ஒன்றுபட்டு வாழ தகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம் அதே சமயம் இயற்கைக்கு எவ்வித அச்சுறுத்தலையும் அளிக்கக்கூடாது என்பதையும் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள்.
  Published by:Sivaranjani E
  First published: