ஒரு நாளில் 52 நிமிடங்கள் மற்றவர்களைப் பற்றி புறணி பேசும் மக்கள் - ஆய்வில் தகவல்

குறைவான கல்வி அறிவு கொண்ட மக்களைக் காட்டிலும் நன்கு படித்த மற்றும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களே அதிகமாகப் புறணி பேசுகின்றனர்.

news18
Updated: May 6, 2019, 11:02 AM IST
ஒரு நாளில் 52 நிமிடங்கள் மற்றவர்களைப் பற்றி புறணி பேசும் மக்கள் - ஆய்வில் தகவல்
புறணி
news18
Updated: May 6, 2019, 11:02 AM IST
ஒரு நாளைக்கு 16 மணி நேர வழக்கமான பணிகளில் 52 நிமிடங்கள் மக்கள் புறணி பேசுவதாக ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய இந்த ஆய்வில் குறைவான ஊதியம் பெரும் மக்கள், நன்கு வேலை செய்யக்கூடிய தங்களுடனான சக ஊழியர்கள் குறித்து அதிகமாகப் புறணி பேசுவதில்லை. அதேசமயம், இளம் வயதினர் தங்களுடன் வேலை செய்யும் வயதான சக ஊழியர் குறித்து அதிகமாகப் புறணி பேசுவதாகக் கூறியுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் மொத்தம் 467 பேர் பங்கு பெற்றுள்ளனர். அதில் 269 பேர் பெண்களும், 198 பேர் ஆண்களும் கலந்து கொண்டுள்ளனர்.


”இந்த தலைப்பை மக்களிடம் வைக்கும்போது அனைவரும் ஆர்வத்துடன் பங்கு பெற்றனர். அதுவே எங்களுக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. புறணி பேசுவதில் இத்தனை ஆர்வமாக உள்ளனரா என்பதே எங்களுக்கு ஆச்சரியம்தான். இதன் மூலமாக அனைவருமே புறணி பேசக் கூடியவர்கள்தான். புறணி பேசாத இடங்களும் இல்லை” என இதன் ஆராய்ச்சியாளர் மேகன் ராபின்ஸ் கூறியுள்ளார். இவர் மனநல துறையில் இணைப் பேராசிரியராக இருக்கிறார்.இந்த ஆராய்ச்சியில் உள்ளார்ந்த சிந்தனைகள் கொண்ட, வெடுக்கென பேசாத, உதவி செய்யாத மக்களைக் காட்டிலும் பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொள்பவர்கள்தான் அதிகமாகப் புறணி பேசுவதாகக் கண்டறிந்துள்ளனர்.

Loading...

அதேபோல் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள்தான் அதிக நேரம் புறணி பேசுகின்றனர். ஆனால் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது ஒரே நடுநிலையில் இருப்பதாக ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வில் 16 மணி நேரத்தில் 52 நிமிடங்கள் புறணி பேசுகின்றனர். அதில் நேர்மறை மற்றும் எதிர்மறை புறணிகள் சரி சமமாக இருக்கின்றன. புறணி என்பது பிரபலங்களைக் காட்டிலும் தங்களுக்கு அதிகம் பரிச்சயமானவர்களைப் பற்றியே பேசுகின்றனர்.

அதேசமயம் குறைவான கல்வி அறிவு கொண்ட மக்களைக் காட்டிலும் நன்கு படித்த மற்றும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களே அதிகமாகப் புறணி பேசுவதாகக் கூறுகின்றனர்.

” யார் புறணி பேசுவார்கள் என்பதைக் கண்டறிவதே அரிது” என ராபின் குறிப்பிடுகிறார்.
First published: May 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...