குழந்தைப்பேறு என்பது தாய்க்கும் தந்தைக்கும் மிக உன்னதமான உணர்வை தரும் அழகிய பயணமாகும். முதன்முதலில் தன் கையில் சிறு குழந்தையை பெறும், அந்த நேரத்தின் மதிப்பை எதை வைத்தும் கணக்கிட முடியாது. அந்த தருணத்தை என்றென்றும் நினைவு பூர்வமானதாக மாற்ற வேண்டும் என்பதற்காக பிறந்த குழந்தையுடன் சேர்த்து புகைப்படங்கள் எடுப்போம்.
இது தற்போதைய இளம் தலைமுறை பெற்றோர்களிடம் இன்னும் ஒருபடி மேல் சென்று, புதுவிதமான சிலவற்றை செய்ய எண்ணுவார்கள். குறிப்பாக குழந்தையின் தொப்புள் கொடி, முதன்முதலில் வெட்டிய நகம், முடி, பால் பல் போன்றவற்றை பத்திரப்படுத்தி வைக்கும் பெற்றோர்கள் பலர் உண்டு. இவற்றை கொண்டு நகைகளை செய்து அணிந்து கொள்ள முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் இந்த புதுவித முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நமீதா நவீன் என்கிற பெண்மணி.
தாய்மை பயணத்தின் நினைவுகளை இன்னும் அழகானதாகவும், ஆழமானதாகவும் மாற்றவே இப்படி ஒன்றை செய்து வருவதாக இவர் கூறுகிறார். இவர் எம்.எஸ்சி - பயோடெக்னாலஜி படித்துள்ளார். தனது படிப்பை துணையாக கொண்டு இதை பற்றி பல ஆய்வுகளை நமீதா செய்துள்ளார். இதன்மூலம் தான் தாய்ப்பால் முதல் குழந்தையின் சிறு நகம் வரை நகைகளாக இவரால் மாற்ற முடிகிறது.
இவரின் இந்த அற்புதமான திறனை வைத்து ஸ்டார்ட் அப் போன்ற முறையில் ஒரு தொழிலையும் தொடங்கி உள்ளார். இதற்கு மம்மாஸ் மில்கிடேல் ஜுவல்ஸ் (Mumma’s Mlkytale jewels.) என்று பெயர் வைத்துள்ளார். இப்படியொரு வினோத முயற்சியை பற்றி அவர் விரிவாக விளக்கியுள்ளார். அதில் "பொதுவாக குழந்தையின் தொப்புள் கொடி, முடி, முதன்முதலில் வெட்டிய நகம், பால் பல் ஆகியவற்றை சிறு பெட்டி அல்லது பேப்பரில் பத்திரப்படுத்தி வைப்பது வழக்கம்.
ஆனால் அவை எளிதாக தொலைந்து விட அதிக வாய்ப்பு உள்ளது. இதுவே அவற்றை நகைகளாக செய்து அணிந்துகொண்டால் அப்படி நடக்க வாய்ப்பில்லை. மேலும், தன் குழந்தையின் அழகிய நினைவுகளை ஒவ்வொரு நாளும் பெற்றோர்களால் இதன் மூலம் தாங்கி செல்லவும் இது உதவும். என்று நமீதா கூறியுள்ளார்.
Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனின் லாங் அவுட் ஃபிட் ஸ்டைலிங் டிப்ஸ்..
"நானும் என் கணவரும் 8 வருடங்களாக குழந்தைக்காக முயற்சித்த பிறகு தான் எங்களுக்கு மகன் பிறந்தான். அவனின் தொப்புள் கொடி மற்றும் தாய்ப்பாலை கொண்டு ஒரு அழகிய நகையை அவனுக்காக செய்து வைத்துள்ளேன். அவனின் 18 ஆவது பிறந்த நாளின் போது இதை பரிசளித்து, நான் அவனை சுமந்த 9 மாதங்கள் எப்படி எனக்கு முக்கியமானவை என்பதை அவனுக்கு உணர்த்தவே இந்த புதுவித பரிசை உருவாக்கினேன்" என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆரம்பத்தில் தாய்ப்பாலை நகையாக செய்வதில் பல சிரமம் ஏற்பட்டதாக நமீதா கூறுகிறார். இதை நகை வடிவமாக கொண்டு வர சுமார் 6 முதல் 8 மாதங்கள் அவருக்கு தேவைப்பட்டதாம். இவரின் வாடிக்கையாளர்கள் பலர் இளம்தலைமுறை பெற்றோர்கள் தான். இவரின் நகைகளை வாங்க பலர் போட்டி போட்டு கொண்டு வருகின்றனர். இந்தியா முழுவதிலும் இருந்து இவருக்கு ஏராளாமான ஆர்டர்கள் வருகிறதாம்.
இவ்வளவு தனித்துவம் கொண்ட இந்த நகைகைகளின் விலை ரூ.1300 முதல் ரூ.3500 வரை உள்ளது. இவற்றில் வெள்ளி மற்றும் தங்க மூலாம் பூசப்பட்டு வருகிறதாம். சில குறிப்பிட்ட கஷ்டமைஸ்டு நகைகள் கூடுதல் விலையுடன் விற்கப்படுகிறது. இந்த அற்புத முயற்சியை அவர் ஒருவரே செய்து வருகிறார். அவரின் கணவர் அவருக்கு பக்கபலமாக இருப்பதாக நமீதா கூறுகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Breast milk, Breastfeeding