• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பார்ட்டிக்குச் செல்லும் ஆண்கள் செக்ஸில் தீவிரமாக இருப்பார்கள்: ஆய்வில் தகவல்

பார்ட்டிக்குச் செல்லும் ஆண்கள் செக்ஸில் தீவிரமாக இருப்பார்கள்: ஆய்வில் தகவல்

பார்ட்டிக்குச் செல்லும் ஆண்கள் செக்ஸில் முரட்டுத்தனமாக இருப்பார்கள்

பார்ட்டிக்குச் செல்லும் ஆண்கள் செக்ஸில் முரட்டுத்தனமாக இருப்பார்கள்

புதிதாக மதுப்பழக்கம் கொண்ட ஆண்கள்தான் அதிக முரட்டுத்தனமாகச் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அடிக்கடி பார்ட்டி மற்றும் பார்களுக்குச் செல்லும் இளைஞர்கள் செக்ஸ் விஷயத்தில் முரட்டுத்தனமாக இருப்பார்கள் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ”அவர்கள் மது அருந்தவில்லை என்றாலும் அந்த சூழல் அவர்களை அப்படி செயல்பட வைக்கிறது” என வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மைக்கேல் கிளெவெலண்ட் கூறுகிறார்.

    மெயில் மற்றும் ஆன்லைன் மூலம் 1,000 கல்லூரி இளைஞர்களை இந்த ஆய்வுக்காக ஈடுபடுத்தியுள்ளனர்.
    அவர்களிடம் எத்தனை முறை மது அருந்துவீர்கள், எத்தனை முறை பார்களுக்குச் செல்வீர்கள் என இந்த இரண்டு கேள்விகள் அவர்களிடம் முன் வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அங்கு வரும் பெண்களை தந்திரமான முறையில் பேசி அல்லது வற்புறுத்தி செக்ஸிற்கு அழைப்பீர்களா என்றும் கேட்கப்பட்டுள்ளது.

    அதில் பல ஆண்கள் அந்த பெண்ணிற்கு மதுவை அதிகமாக குடிக்க வைத்து தந்திரமான முறையில் செக்ஸில் ஈடுபட வைப்பதாகவும் அதில் உடல் ரீதியான காயங்களும் அவர்களுக்கு நிகழும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த ஆய்வானது ஆல்கஹால் அண்ட் ட்ரக்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும் புதிதாக மதுப்பழக்கம் கொண்ட ஆண்கள் கூடுதலான வகையில் முரட்டுத்தனமாகச் செயல்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அதிகமாக பார்ட்டி மற்றும் பார்களுக்குச் செல்லும் ஆண்கள் சுயமாக செக்ஸ் இன்பம் பெற்றுக் கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

    (இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஆய்விதழில் வெளியிடப்பட்டவை . மது பழக்கத்தையோ, தகாத உறவையோ, பாலியல் வன்கொடுமையையோ ஊக்குவிக்கும் நோக்கமல்ல. )




    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: