ஈ-சிகரெட் பயன்படுத்தும் சிறுவர்களை பெற்றோர்கள் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை.. நிபுணர்களின் அறிவுறுத்தல்கள் என்னென்ன?

மாதிரி படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  'எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே' என்ற வாசகத்தை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் இன்றைய கால கட்டங்களில் இந்த வாசகத்தில் சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. பெற்றோர்களுக்கு தெரியாமல் சிறுவர்கள் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு பலவற்றை மறைத்து வருகின்றனர்.

  தொழில்நுட்பம் அறியாத பல பெற்றோர்கள் தங்கள் சிறுவர்கள் தீய தடத்தில் பயணிப்பதை அறியாமல் இருக்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் சிறுவர்கள் புகைபிடிப்பது தெரிந்து விடுகிறது அல்லது சந்தேகிக்கிறார்கள்.

  ஆனால் சிறுவர்கள் மின்னணு-சிகரெட்டுகளை பயன்படுத்தினால், பெற்றோர்களுக்கு தெரியாமல் போக வாய்ப்புள்ளது, இது பொதுவாக இ-சிகரெட்டுகள் என்று அழைக்கப்படுகிறது. இதுகுறித்து குழந்தை மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், சிகரெட்டை புகைப்பது அல்லது புகையிலை பொருட்களை பயன்படுத்துவதோடு ஒப்பிடும்போது, சிறுவர்கள் இ-சிகரெட்டுகள் அல்லது ஸ்மோக்லேஸ் டொபாக்கோவை பயன்படுத்துவது பற்றி பல பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களுக்கு தெரிவதில்லை என குறிப்பிட்டுள்ளது.

  பெற்றோர்கள் தங்களது வீடுகளில் புகையிலை பொருட்களை அனுமதிக்காத வண்ணம் கடுமையான கட்டளைகளை தங்கள் வீட்டில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் கடுமையான விதிகளை உருவாக்குவது தங்கள் சிறுவர்கள் புகை பிடிக்காமல் இருப்பதற்கான ஓரளவு சாத்தியங்களை கொண்டுள்ளது. மேலும் சிறுவர்கள் முன் புகைபிடிப்பது மற்றும் அதை பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புகைபிடிக்காத பெற்றோர்களை கொண்டுள்ள வீடுகளில் உள்ள சிறுவர்கள் புகைபிடிக்க வாய்ப்பில்லை.  Also read... ஓய்வு கிடைத்தால் இந்தியர்கள் செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா..? ஆய்வில் வெளியான தகவல்..

  அது நிச்சயம் புகைப்பதை தடுக்க உதவும் ஒரு முக்கிய கருவியாகும் என்பதை நாங்கள் அறிவோம், என்று கலிபோர்னியா பல்கலைக்கழக சான் பிரான்சிஸ்கோவின் பல் மருத்துவப் பள்ளியின் இணை பேராசிரியர் பென்ஜமின் சாஃபி கூறினார்.
  புகையிலை பயன்பாட்டை தடைசெய்யும் கடுமையான விதிமுறைகளை கொண்ட வீடுகளில் வசிக்கும் டீனேஜர்கள் புகையிலை பயன்படுத்தத் தொடங்குவதற்கான வாய்ப்பு 20-26 சதவீதம் குறைவாக உள்ளது.

  இது அனுமதிக்கப்பட்ட வீடுகளில் வாழும் இளைஞர்களுடன் ஒப்பிடும்போது, அமெரிக்காவில் 12 முதல் 17 வயது வரையிலான 23,000- க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கண்காணிக்கும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட் மற்றும் இ-சிகரெட்டுகளை விட அதிகமாக, சிகரெட் அல்லாத எரியக்கூடிய பொருட்கள் (சுருட்டுகள், பைப்ஸ், ஹூக்காக்கள் மற்றும் பீடிஸ் உட்பட), மற்றும் புகைபிடிக்காத புகையிலை (ஸ்னஃப், மெல்லும் புகையிலை, ஸ்னஸ் மற்றும் கரைக்கக்கூடிய புகையிலை உட்பட) ஆகியவவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

  அதில் சிறுவரின் வயது, பாலினம், இடம் என அடையாளம் காணப்பட்டு, புகைப்பவருடன் வாழ்ந்தல், அல்லது பெற்றோர்கள் படிப்பறிவின்மையுடன் இருத்தல் போன்ற காரணிகளை அடையாளம் காண்பது அவசியம் என்றும், இதை தந்தையர்களை விட தாய்மார்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: