• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பெண் குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய 'Your Body Is Yours' புத்தகம்..

பெண் குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய 'Your Body Is Yours' புத்தகம்..

Your Body Is Yours

Your Body Is Yours

பாலியல் சீண்டல்கள் குறித்து குழந்தைகளுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என  எழுத்தாளர் யாமினி விஜயன்,Your Body Is Yours' என்ற புத்தகம் மூலம் விளக்கியுள்ளார்.

  • Share this:
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தந்தை, உறவினர், அக்கம் பக்கத்தினர் என பல முனைகளில் இருந்தும் பெண் குழந்தைகள் மீது பாலியல் வலை வீசப்படுகிறது. இதுபோன்றவர்களை சட்டத்தின் பிடியில் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வரும் அதேவேளையில், குற்றம் செய்பவர்களின் வலையில் சிக்காத வண்ணம் பாலியல் சீண்டல்கள் குறித்த விழிப்புணர்வையும் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக Good Touch, Bad Touch குறித்த விழிப்புணர்வு இருந்தால், பாலியல் சீண்டல்களில் இருந்து குழந்தைகள் எளிதாக தங்களை தற்காத்து கொள்ள முடியும் என குழந்தைகள் நல ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். பெற்றோர்களும், ஆபாசம் என்ற சொல்லுக்குள் பாலியல் கல்வியை அடக்காமல் அதுகுறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, ஆபத்தான சூழல்களில் இருந்து அவர்கள் தற்காத்து கொள்ளவதற்கு உதவியாக இருக்கும் எனவும் கூறுகின்றனர். அந்தவகையில், குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch குறித்து சிறு வயதில் இருந்து எப்படி சொல்லிக்கொடுக்க வேண்டும் என `Your Body Is Yours’ என்ற புத்தகம் மூலம் விளக்கியுள்ளார். குழந்தைகள் அனுமதி இல்லாமல் அவர்களை யாரும் தொட அனுமதிக்கக் கூடாது எனவும், அவர்கள் தைரியமாக NO சொல்ல தெரிந்திருக்க வேண்டும் எனவும் இந்த புத்தகம் கூறுகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த  ப்ரதம் ( Pratham Books) புத்தக வெளியீட்டு நிறுவனம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது. 8 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட பெண் குழந்தைகள்  Good Touch, Bad Touch குறித்து அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என கூறுகிறது. அதில், பெண் குழந்தைகளின் சம்மதம், பாதுகாப்பான தொடுதல், அத்துமீறல் ஆகியவை பற்றி குழந்தைகளுக்கு புரியும் எளிய மொழியில் புகைப்படங்களுடன் எழுத்தாளர் யாமினி விஜயன் விளக்கியுள்ளார்.

"உங்கள் உடம்பு உங்களுக்கு சொந்தமானது, அதைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள், அதன் மீது அக்கறை கொள்ளுங்கள், மரியாதையுடன் நடக்காதவர்களிடம் தைரியமாக 'நோ' சொல்லுங்கள்" என புத்தகத்தைப் பற்றி பிரதாம் புத்தக நிறுவனத்தின் இணையதள முன்னுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில், உடம்பின் பாகங்களைப் பற்றி குறிப்பிடும்போது குழந்தைகள் வெட்கப்படக் கூடாது என்றும், திறந்த மனதுடன் எப்படி பேசவேண்டும் என்பதைப் பற்றியும் எழுத்தாளர் யாமினி விஜயன் கூறியுள்ளார்.

 Your Body Is Yours புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் யாமினி விஜயன் பேசும்போது, இந்தப் புத்தகம் எளிமையாகவும் இருக்க வேண்டும். அதேவேளையில் மிகவும் கருத்தாழம் மிக்கதாக, குழந்தைகள் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்க வேண்டும் என நினைத்ததாக கூறியுள்ளார். தங்களுடைய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்போது, நேரடியாக எப்படி நோ சொல்ல வேண்டும் என்பது இந்த புத்தகத்தின் மூலம் குழந்தைகளுக்கு எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ram Sankar
First published: