Mask for Kids : என் குழந்தை மாஸ்க் அணியவில்லை என்றாலும் பாதுகாப்பாக இருக்குமா..? பெற்றோர்களுக்கான சில தகவல்கள்..!

மாஸ்க்

குழந்தையின் காற்றுப்பாதைகள் சிறியவை. இதனால் முகக்கவசம் மூலம் சுவாசிப்பது அவர்களுக்கு இன்னும் கடினமாகிறது.

  • Share this:
குழந்தைகளை முகக்கவசம் அணியச் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம். ஒன்று அவர்களுக்கு அணிவித்த உடனேயே அதனை அகற்றி விடுவார்கள். இல்லையென்றால் அணியவே மாட்டார்கள். ஆனால் கொரோனாவின் மூன்றாம் அலை பாதிப்பு இப்போது அனைத்து பெற்றோர்களிடமும் கேள்வியை எழுப்புகிறது. குழந்தைகள் முகக்கவசம் அணியாவிட்டால் அவர்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்கள்? என்ற கேள்வி தான்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின்படி, 2 வயதிற்குட்பட்ட சிறு குழந்தைகள், மூச்சு விடுவதில் சிரமம் கொண்ட சிறுவர்கள், பெரியவர்களின் உதவியின்றி முகக்கவசத்தை அகற்ற முடியாமல் இருக்கும் குழந்தைகள் மீது முகம் மறைப்பு வைக்கக்கூடாது என அறிவித்திருந்தது. ஏனெனில் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திப்பதன் மூலம் அவர்கள் மயக்கமடைய நேரிடும்.

குழந்தைகள் ஏன் முகக்கவசம் அணியக்கூடாது?

குழந்தையின் காற்றுப்பாதைகள் சிறியவை. இதனால் முகக்கவசம் மூலம் சுவாசிப்பது அவர்களுக்கு இன்னும் கடினமாகிறது. இதனால், ஒரு குழந்தைக்கு முகக்கவசத்தை பயன்படுத்துவது மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கும். ஒரு இறுக்கமான முகக்கவசத்தை அணிந்தால் அவர்களுக்கு காற்றை அணுகுவதில் சிரமம் இருக்கும். அதுவே தளர்வான பொருத்தம் அதிக பாதுகாப்பை வழங்காது. குழந்தைகள் முகக்கவசத்தை தானாக கழற்ற முடியாது என்பதால், அது அவர்களுக்கு மூச்சுத் திணறலை கூட ஏற்படுத்தும்.

அதேபோல 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் முகக்கவசத்தை அகற்றவோ அல்லது அதை அணியும்போது முகத்தை இன்னும் அதிகமாகத் தொடவோ வாய்ப்புள்ளது. இது அவர்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறிவிடும். மேலும், இளம் குழந்தைகள் இன்னும் N95 முகமூடிகள் அணிய அங்கீகரிக்கப்படவில்லை.



குழந்தைகள் பொது இடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கிறார்கள்?

உங்கள் குழந்தைகள் முகக்கவசம் அணிய முடியாது என்பதால், கூட்டமாக இருக்கு இடத்திற்கு உங்கள் குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டிய காட்டாயம் வந்தால், அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் எடுக்கக்கூடிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்வருமாறு காணலாம்.

பேபி கேரியரை பயன்படுத்துங்கள்:

உங்கள் குழந்தையை பேபி கேரியரில் அமர வைக்க முடியும் என்றால், குழந்தை உங்களை நோக்கி எதிர்கொண்டு இருக்குமாறு, அதனை உங்கள் உடலுடன் நெருக்கமாக வைக்க முயற்சி செய்யுங்கள்.

பாதுகாப்பாக கவர் செய்தவாறு குழந்தையை சீட் காரில் கொண்டு செல்லுங்கள்:

பாதுகாப்பாக மூடப்பட்ட சீட் காரில் உங்கள் குழந்தையைச் வைத்து செல்வது கனமாக இருந்தாலும், கும்பல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லும்போது அதுவே பாதுகாப்பானதாக இருக்கிறது.

பாதுகாப்பு கவர் கொண்ட ஸ்ட்ரோலெரில் குழந்தையை கொண்டு செல்லலாம்:



பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது பிளாஸ்டிக் மழை கவர்கள் மற்றும் காட்டன் சன் கவர்கள் கொண்ட ஸ்ட்ரோலெர்களில் கொண்டு செல்லுங்கள். வெளியே போகும் போது அந்த கவர்களை மறக்காமல் பயன்படுத்துவது அவசியம்.

நீங்கள் கொண்டுசெல்லும் ஸ்ட்ரோலெரை வெயிலில் வைக்கவும்:

உங்கள் ஸ்ட்ரோலெரில் கவர் இல்லையென்றால் அல்லது கவரை கொண்டுவர மறந்துவிட்டால், ஸ்ட்ரோலெரை வெயில் அதிகம் உள்ள பகுதியில் வைப்பது மற்ற எதையும் விட சிறந்தது.

பெருந்தொற்று நேரத்தில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எளிய டிப்ஸ்!

தேவைப்படும் பட்சத்தில், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த வகையான முகக்கவசங்களை அணிய வேண்டும்?

2 வயது வரையிலான குழந்தைகள் இந்த வழிகாட்டுதல்களை குறிப்பாக பூர்த்தி செய்யும் முகக்கவசங்களை மட்டுமே அணிய வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பரிந்துரைத்துள்ளது.

- அவர்களின் முகக்கவசங்கள் பிட்டாக இருக்க வேண்டும் அதே சமயத்தில் அதனை அணியும் போது முக பக்கவாட்டில் அசௌகரியம் இல்லாமல் இருக்க வேண்டும்.



- முகக்கவச காது சுழல்கள் மென்மையானதாக இருக்க வேண்டும்.

- அவர்கள் அணியும் கிளாத் மாஸ்குகள் பல அடுக்குகளை கொண்டதாக இருக்க வேண்டும்.

- எந்த தடையும் இல்லாமல் சுவாசிக்க அனுமதிக்கும் மாஸ்குகளை அணிய வேண்டும்.

- எந்த சேதமும் இல்லாமல் அல்லது அதன் வடிவத்திற்கு எந்த மாற்றமும் இல்லாமல் துவைத்து உலர்த்த வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் குறுநடை போடும் குழந்தைக்கு முகக்கவசம் அணிவது கடினம். எனவே மாஸ்குகள் வாங்கும் போது உங்கள் குழந்தைகளையே தேர்வுசெய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களை அணிய வைக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published: