குழந்தைகள் அதீத கோபம், ஆத்திரம் அல்லது அவமரியாதையாக நடந்து கொள்ளும் தருணங்களை பல பெற்றோர்களும் அவ்வப்போது எதிர்கொள்ள நேரிடும். பொதுவாக குழந்தைகள் மரியாதையின்றி நடப்பதை முதல் முறையாக எதிர்கொள்ளும் பெற்றோர்களுக்கும் அதிர்ச்சியைத்தான் ஏற்படும். குழந்தை ஏன் அவ்வாறு நடந்து கொள்கிறது என்பது பல பெற்றோர்களாலும் சரியாகக் கண்டறிய முடியவில்லை. குழந்தைகளின் நடத்தையும் மனநிலையையும் பாதிக்கக்கூடிய காரணங்கள் என்ன?
ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு சூழல்களில் வளர்கின்றன. எனவே அவர்கள் எதிர்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட சூழல் அல்லது நிகழ்வுகளை வெவ்வேறு விதமாக புரிந்து கொள்வார்கள் மற்றும் அது வெவ்வேறு பாதிக்கக்கூடும். பெரியவர்களுக்கு சரியாகத் தெரியும் ஒரு விஷயம் குழந்தைகளின் பார்வையில் தவறானதாக தெரியலாம். அதேபோல குழந்தைகள் விரும்புவதை பெற்றோர்கள் மறுக்கலாம். இதேபோல கருத்துவறுபாடுகள் அல்லது குழப்பமான சூழல் குழந்தைகளின் மனதில் வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை மரியாதை இன்றி நடந்து கொள்ளத் தூண்டும். குழந்தைகளின் நடத்தையில் மாறுதல்கள் ஏற்படும் காரணங்கள் பின்வருமாறு.
பழக்கவழக்கங்கள், பாலியல் ரீதியான பேதங்கள் :
வீட்டுக்குள் இருக்கும் சூழல்கள் குழந்தை மேல் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் மரியாதையின்றி நடப்பதற்கு தூண்டும். உதாரணமாக தலைமுறை இடைவெளியால் உண்டாகும் ஆண், பெண் என்ற பாகுபாடுகள், ஆண் குழந்தைக்கு அதிகப்படியான சலுகைகளும், பெண் குழந்தையை அந்த அளவுக்கு கவனிக்காமல் இருப்பதும் பெண் குழந்தைகள் மனதில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதே போல ஒரு சில கலாச்சார ரீதியான பழக்கவழக்கங்கள், குழந்தைகள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி பாதிப்பை ஏற்படுத்தும்.
அறிகுறிகள் தெரியாத உடல்நிலை பாதிப்புகள் :
சில நேரங்களில் குழந்தைக்கு ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் வெளிப்படையாகத் தெரியாது. உதாரணமாக குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அவர்கள் நடத்தையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படும். எனவே உங்கள் குழந்தை உடல் நல பாதிப்பு ஏதாவது இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
குடும்பத்தினர் மற்றும் வெளியாட்களை பார்த்து கற்றுக் கொள்வது :
குழந்தைகளுக்கு நீங்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள் என்பதை படித்து தெரிந்து கொள்வதை விட, கேட்டுத் தெரிந்து கொள்வதை விட, பார்த்து தெரிந்து கொள்வதன் வழியாக அதிகமாகக் கற்றுக்கொள்கிறார்கள். உங்கள் வீட்டில் யாரேனும் மற்றவர்களுக்கு மரியாதை இல்லாமல் நடப்பதை அல்லது கடுமையான சொற்களைப் பேசுவதை குழந்தைகள் பார்க்க நேரிடும். இவை, குழந்தைகள் மனதில் எளிமையாக பதிந்து விடும், அதை பார்த்து அதே போல உங்கள் குழந்தையும் நடக்கும்.
பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறீர்களா..? இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்
இந்த மோசமான நடத்தை குடும்பத்தில் வழியே தான் குழந்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது கிடையாது. குழந்தைகளை சுற்றி இருக்கும் நட்பு வட்டத்திலும் இதைப் போன்ற மோசமான நடத்தை கொண்ட நபர்களை அடிக்கடி சந்திக்கும் போது அல்லது பழகும்போது குழந்தைகளும் அதையே பின்பற்ற தொடங்குவார்கள்.
வெளியிடங்களில் கேலிக்கு உள்ளாவது :
பள்ளியில் அல்லது மற்ற பிள்ளைகளுடன் விளையாடும் போது உங்கள் குழந்தை கேலி மற்றும் தீவிரமான கிண்டலுக்கு ஆளாகி இருக்கலாம். இதை உங்கள் குழந்தை உங்கள் வீட்டில் இருக்கும் யாரிடமும் தெரியப்படுத்தாமல் இருந்தால் அந்த தாக்கம் பல ஆண்டுகளுக்கு தொடரும். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது கூட தன்னம்பிக்கையை குறைத்து மோசமான நடத்தையை வெளிப்படுத்தும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
எந்த நாட்டு குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்..? என்ன காரணம்..? UNICEF அறிக்கை!
இந்த சிக்கல்களை எப்படி தீர்ப்பது?
* குழந்தையின் மோசமாக நடக்கிறது என்பதைப் பற்றிய காரணத்தை முதலில் கண்டறிவது மிகவும் அவசியம்.
* நீங்கள் என்ன விதைக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கு கிடைக்கும். அதே போல உங்கள் குழந்தையின் முன் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்களோ அதுதான் உங்கள் குழந்தையும் பின்பற்றும். எனவே உங்கள் நடத்தை ஆரோக்கியமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் குழந்தையை மரியாதையின்றி நடத்தினால், குழந்தையும் அதை பிரதிபலிக்கும் குழந்தைக்கு மரியாதையை சொல்லிக் கொடுப்பது என்பது அவர்களை மரியாதையுடன் நடத்துவதில் இருந்து தொடங்கும்.
* எல்லாருக்குமே அன்பு தேவை. வளரும் குழந்தைகளுக்கு அன்பும் அரவணைப்பும் மிக மிக அவசியம். உங்கள் குழந்தையிடம் நீங்கள் அன்பாக இருப்பதும், கனிவாக நடந்து கொள்வதும் தைரியத்தை வழங்குவதும் அவர்களுக்கு ஆரோக்கியமான மனநிலையை வளர்க்கும். வெளியிடங்களில் உண்டாகும் பிரச்சனைகளை வெளிப்படையாக மனம் விட்டு பேசும் சூழ்நிலை உருவாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள் இவ்வாறு ஒப்பிடுவது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும். மேலும், குழந்தையும் நடத்தைகளில் நல்லவிதமான மாறுதல் ஏற்படும்போது அவற்றை பாராட்டத் தயங்காதீர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Parenting Tips, Teenage parenting