Home /News /lifestyle /

குழந்தைகளுக்கு உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை கொடுக்கலாமா..? எதெல்லாம் தரவே கூடாது..?

குழந்தைகளுக்கு உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை கொடுக்கலாமா..? எதெல்லாம் தரவே கூடாது..?

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

நட்ஸ் மற்றும் உலர் பழங்கள்

நட்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு தினசரி சாப்பிடக் கொடுத்தால் அவர்களுக்கு விட்டமின் இ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகிய தேவைகள் பூர்த்தி அடையும்.

குழந்தைகள் பள்ளி செல்லத் தொடங்கி விட்டால் அவர்களது கற்றல் திறனை எப்படி மேம்படுத்தலாம் என்று தாய்மார்கள் கவலை கொள்ளத் தொடங்கி விடுவார்கள். கூடவே, மற்றொரு கவலையும் சேர்ந்து கொள்ளும். பள்ளியில் பிள்ளைகள் முறையாக சாப்பிடுவார்களா, அப்படி சாப்பிடா விட்டால் அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்குமா என்ற சிந்தனை மேலோங்கி இருக்கும்.

இதற்கான தீர்வாக நட்ஸ், உலர் பழங்கள், உலர் கொட்டைகள் போன்றவை இருக்கும். இவை உங்கள் குழந்தைகளுக்கு தேவையான புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச் சத்து போன்றவை கிடைக்க உதவிகரமாக இருக்கும். இது மட்டுமல்லாம், மூளை வளர்ச்சிக்குத் தேவையான மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் இந்த வகை உணவுகளில் இருந்து கிடைக்கும்.

குழந்தைகளுக்கு என்னென்ன வகையான உலர் பழங்கள், நட்ஸ் போன்றவற்றை கொடுக்கலாம் என்பது குறித்தும், அது எந்தெந்த வகையில் பயன் அளிக்கிறது என்பது குறித்தும் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

நட்ஸ் மற்றும் உலர் பழ வகைகள்

குழந்தைகளுக்கு பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை கொடுத்தால் நல்ல ஸ்நாக்ஸ் போல விரும்பி சாப்பிடுவார்கள். இது தவிர உலர வைக்கப்பட்ட திராட்சை, அத்தி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றையும் சாப்பிடக் கொடுக்கலாம்.



பலன்கள்

நட்ஸ் வகைகளை குழந்தைகளுக்கு தினசரி சாப்பிடக் கொடுத்தால் அவர்களுக்கு விட்டமின் இ, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஆகிய தேவைகள் பூர்த்தி அடையும். இது மட்டுமல்லாமல் ஜிங்க், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் காம்ப்ளக்ஸ் விட்டமின் போன்ற சத்துகளும் நட்ஸ் வகைகளில் நிறைந்துள்ளது.

நீங்கள் குழந்தைகளின் மனம் புண்படும்படி பேசும் பெற்றோர் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!

குழந்தைகளுக்கு இளம் வயதில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கவும், குழந்தைகளின் கவனித்தல் திறனை மேம்படுத்தவும் உதவிகரமாக இருக்கும். உடலில் கெட்ட கொழுப்புகளை குறைக்க வழிவகை செய்யும். பின்னாளில் அவர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை போன்றவை கட்டுப்பாடான அளவில் இருக்கும்.



ஆய்வு முடிவுகள்

சில குழந்தைகளுக்கு நட்ஸ் வகைகள் மிகுந்த அலர்ஜியை ஏற்படுத்தக் கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, இதை கவனத்தில் கொண்டு குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். நட்ஸ் வகைகளில் மிக அடத்தியான ஆற்றல் இருக்கிறது. அதிக கலோரி கொண்ட உணவுகளுடன் இதை சேர்த்து சாப்பிடக் கொடுத்தால் உடல் எடை அதிகரிக்கும்.

தினசரி உணவில் எப்படி சேர்ப்பது

பொதுவாக நட்ஸ் மற்றும் உலர் பழங்களை அப்படியே ரா-வாக சாப்பிடக் கொடுக்கலாம். காலை மற்றும் இரவில் பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்தும் சாப்பிடக் கொடுக்கலாம். நட்ஸ் வகைகளை மட்டும் லேசாக வறுத்து அரைத்து வைத்துக் கொண்டு, அந்தப் பவுடரை பால், செரல்ஸ், சூப், சாலட், புலாவ் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Dry Fruits, Kids Food, Kids Health, Nuts

அடுத்த செய்தி