உங்களுக்கு இப்போது குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லையா..? துணையிடம் பக்குவமாக எடுத்துச்சொல்ல ஆலோசனைகள்..!

காட்சிப் படம்

உலகளவில் எடுக்கப்பட்ட ஆய்வில் பெரும்பான்மையான மக்களுக்கு பாதுகாப்பான உடலுறவு பற்றிய புரிதல் இல்லை என தெரியவந்துள்ளது.

  • Share this:
செக்ஸ் என்பது மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது என்பது இயற்கையே. ஆனால் மெல்ல முத்தமிடுதல், உணர்ச்சியைத் தூண்டும் பாலுறுப்பைத் தொடுதலுக்கிடையில், பாதுகாப்பான உடலுறவு என்ற விஷயத்தை தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். தேவையற்ற கர்ப்பம், எஸ்.டி.டி எனப்படும் பால்வினை நோய், பால்வினை தொற்று ஆகியவை குறித்து விழிப்புணர்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், மறந்துவிடுகிறார்களா? அல்லது உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கவனக்குறைவாக இருந்துவிடுகிறார்களா? என்பது தெரியவில்லை.

உங்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படாதவரை செக்ஸ் என்பது ஒரு ஆனந்த விளையாட்டாக இருக்கும். பிரச்சனைகள் ஏற்படும்போது மட்டுமே பாதுகாப்பான உடலுறவு பற்றிய விழிப்புணர்வின் முக்கியத்துவம் புரியும். உலகளவில் எடுக்கப்பட்ட ஆய்வில் பெரும்பான்மையான மக்களுக்கு பாதுகாப்பான உடலுறவு பற்றிய புரிதல் இல்லை என தெரியவந்துள்ளது.



வெளிப்படையான கலந்துரையாடல்

கர்ப்பத்தை தள்ளிவைப்பது குறித்து வெளிப்படையாக பேசுவதை பெண்கள் பொதுவாக அசிங்கமாக எண்ணுவார்கள். ஆனால், உடலுறவு வைத்துக்கொள்வது என முடிவெடுத்தவுடன், கர்ப்ப தடை குறித்து போதுமான உரையாடல் இருவருக்கும் இடையே இருப்பது அவசியம். பாதுகாப்பான உடலுறவு வைத்துக்கொள்ளும் அதேநேரத்தில், தற்போதைய நிலையில் உங்களுக்கு என்ன தேவை? என்பதை முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும். குழந்தை வேண்டுமா? வேண்டாமா?, வீட்டின் சூழல், உங்கள் இருவருக்கும் இடையே இருக்கும் திட்டம் ஆகியவையின் அடிப்படையில் முடிவெடுக்கலாம்.

பெற்றோர்களே கவனமா இருங்க..கோடையில் குழந்தைகளை தாக்க வாய்ப்புள்ள 7 நோய்கள்..

கர்ப்ப தடைக்கு பல்வேறு வழிகள் உள்ளன. பாதுகாப்பான உடலுறவு வைத்துக்கொள்ள ஆணுறைகள் மற்றும் மாத்திரைகள், ஐ.யு.டி ஆகியவை இருக்கின்றன. உங்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப மருத்துவரிடமும் ஆலோசனைப் பெற்று முடிவெடுத்துக்கொள்வது நல்லது. ஆணுறை மற்றும் மாத்திரைகள் பொதுவாக கருத்தடைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தை வேண்டாம் என முடிவெடுக்கும் தம்பதிகள், கர்ப்ப தடைக்காக பயன்படுத்தும் முறை குறித்தும் தெளிவாக இருக்க வேண்டும். இதுகுறித்து பார்ட்னரிடம் எப்படி பேசுவது? என தயக்கமாக இருந்தால், அதற்கான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.



கருத்தடை அவசியம்

சிறிது காலத்துக்கு குழந்தை பெற்றுக்கொள்வதை ஒத்திவைப்பது குறித்து பேசத்தொடங்கும்போது, அதன் அவசியம் குறித்து முழுமையாக உங்கள் பார்ட்னரிடம் எடுத்துரைக்க வேண்டும். வீட்டின் தற்போதைய நிதி நிலைமை, உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் என உங்கள் காரணம் எதுவாக இருந்தாலும், பார்ட்னரிடம் கூறிவிடுங்கள். நீங்கள் கூறும் கருத்தில் அவர் உடன்பட்டால், அவசியத்தை புரிந்து கொண்டால் பாதுகாப்பான உடலுறவுக்கான முயற்சியை எடுங்கள்.

கருத்தடையை புரியவைத்தல்

பார்ட்னருடன் தெளிவாக பேசி கருத்தடைக்கான ஆணுறை மற்றும் மாத்திரைகள் பயன்படுத்தலாம் என முடிவெடுத்துவிட்டால், அதனுடைய பக்கவிளைவுகள் குறித்தும் எடுத்துக்கூற வேண்டும். கருத்தடைக்கு சம்மதம் தெரிவிப்பவர்கள், அதன் பக்கவிளைவுகள் குறித்து பின்னர் தெரியவரும்போது, இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் உண்டாகும். முன்பே இதுபற்றி தெரிந்திருந்தால் சம்மதித்து இருக்க மாட்டேன் என உங்கள் பார்ட்னர் கூறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தெளிவாக விவாதித்த பின்னர், இது தொடர்பாக மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தால் அவரையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்.



பார்ட்னர் என்ன நினைக்கிறார்?

குழந்தை பெற்றுக்கொள்வதை சிறிது காலம் ஒத்திவைக்கலாம் அல்லது தற்போதைக்கு வேண்டாம் என நீங்கள் முடிவெடுத்திருந்தாலும், உங்கள் பார்ட்னரின் எண்ணம் என்ன? என்பது குறித்து கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை கருத்தடை குறித்து அவருக்கு அச்சம் இருக்கலாம், பின்விளைவுகள் பற்றிய பயம் இருக்கலாம். அல்லது கருத்தடை குறித்து போதுமான தகவல்களை அவர் ஏற்கனவே தெரிந்துவைத்திருக்க வாய்ப்புகளும் இருக்கின்றன. எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக கலந்துரையாடும்போது மட்டுமே தெளிவான முடிவை எட்ட முடியும். பார்ட்னரின் சம்மதம் இல்லாமல் எடுக்கக்கூடிய முடிவுகள் வாழ்க்கையில் பிரச்சனைக்கு மட்டுமே வழிவகுக்கும்.

 
Published by:Sivaranjani E
First published: