பெற்றோரின் கடமைகளில் முக்கியமானது, குழந்தைகளை பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக வைத்திருந்து, அவர்களுக்கு எந்த விதமான அசௌகரியங்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது ஆகும். இது இயல்பானதே. ஆனால், சில நேரங்களில், அதிகப்படியான பாதுகாப்பு குழந்தைகளுக்கு பாதகமாகவே விளைகிறது.
‘என் குழந்தையைப் பாதுகாப்பது என் கடமை’ என்று நினைக்கும் போது, சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் ஒவ்வொரு நடவடிக்கையும் கூர்ந்து கவனித்து, அவர்களின் ஒவ்வொரு செயலிலும், முடிவிலும் தலையிட்டு வருகிறார்கள். இதனை, மைக்ரோமேனேஜ் செய்வது என்று கூறப்படுகிறது. இது குழந்தைகளை பாதிப்பதோடு, அவர்கள் ஒவ்வொரு முடிவுக்கும் பெற்றோரைச் சார்ந்தே இருக்கும் நிலையம் ஏற்படுகிறது.
இந்த அதீத பாதுகாப்பு, கச்சிதமான பெற்றோராக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் தோன்றுவதாகும். குழந்தைகள் சிறிய தவறு செய்தாலும் அடுத்த நொடியிலேயே அதனைத் திருத்த வேண்டும் என்ற முனைப்பு வரும். மற்றொரு காரணம், குழந்தைகளை தண்டிப்பதால், சரியான முறையில் நடக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், சரியாக பார்த்துக்கொள்ள முடியவில்லையோ, சரியாக வளர்க்க முடியவில்லையோ என்ற குற்ற உணர்ச்சியால் தோன்றுவதாகும்.
நீங்கள் உங்கள் குழந்தைகளை அதீதமாக பாதுகாக்கிறீர்கள் என்பதற்கான 5 அறிகுறிகள் மற்றும் அதை ஏன் செய்யக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
யார் சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற விவாதம்:
பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ஏற்படும் வாதங்கள் மிகவும் இயல்பானவை. ஆனால் இது உங்கள் வீட்டில் தினமும் நடக்கிறது என்றால், உங்கள் குழந்தை வளர்ப்பில் ஏதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். உங்கள் குழந்தை ஆடை அணியும் விதம், பாணி, அல்லது ஸ்டைல் ஆகியவற்றின் காரணமாக உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் இடையே விவாதம் ஏற்படலாம். இப்படி நீங்கள் செய்வது, உங்கள் குழந்தைகளை வளர்ச்சியிலிருந்து தடுக்கிறீர்கள்.
அதிகப்படியான கவலை:
உங்கள் குழந்தைகள் நண்பர்களுடன் வெளியே செல்லும்போது அல்லது இரவில் வீட்டுக்கு தாமதமாக வந்து இரவு உணவை சாப்பிடும்போது, நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பது, நீங்கள் அதிக அக்கறை கொண்டவர் என்பதைக் குறிக்கிறது. இது உங்களை பதற்றமடையச் செய்யும், மேலும் உங்கள் குழந்தைக்கு எரிச்சலூட்டும். எந்தவொரு முடிவுக்கும் வருவதற்கு முன், உங்கள் குழந்தையைக் கேட்டு, அவர்களைத் தாங்களே கையாளக்கூடிய புத்திசாலி மற்றும் திறமையான மனிதர்களைப் போல நடந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க | “உங்க ஹார்ட்ட ஹெல்தியா பாத்துக்கோங்க…” இதயத்துக்கான சிறந்த உணவு முறைகள் இதோ!
உங்கள் பிள்ளையை மற்றவர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முயற்சிப்பது:
பள்ளியில் கேலிக்குள்ளாக்கப்படும் போது அல்லது தேவையில்லாமல் தண்டிக்கப்படும்போது, ஒரு பெற்றோராக நீங்கள் தலையிடுவது சரியானது. சிறிய, முக்கியமற்ற விஷயங்களைப் பற்றி எல்லாம் உங்கள் குழந்தையின் ஆசிரியர்கள் அல்லது நண்பர்களுடன் நீங்கள் தொடர்ந்து வாதிட்டால், அதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இது உங்கள் குழந்தைக்கு மிகவும் சங்கடமாக இருக்கும், மேலும் அவர்களுடனான உங்கள் உறவை சிக்கலாக்கும்.
நீங்கள் அவர்களுக்கு எந்த வேலையையும் ஒதுக்கவில்லை:
குழந்தைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும். நீங்கள் அவர்களை வீட்டு வேலைகள் மற்றும் பிற செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். நீங்கள் அவர்களுக்கு எந்த வேலைகளையும் ஒதுக்கவில்லை, வேலைகள் செய்ய பழக்கவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கையில் எதையுமே கற்றுக்கொள்ள முடியாது. இது எதிர்காலத்தில் அவர்களுக்கு பெரிய பிரச்சனையாக மாறும். உங்கள் பிள்ளைகள் தவறுகள் செய்ய அனுமதியுங்கள். அதிலிருந்து அவர்கள் கற்றுக்கொண்டு வளர்வார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child Care, Parenting