கொரோனா 2வது அலை ஏன் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது..? பாதுகாப்பு வழிமுறைகள் என்ன?

குழந்தைகளை அதிகம் தாக்கும் கொரோனா

முதல் அலையைக் காட்டிலும் 2வது அலையில் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவது கண்கூடாக பார்க்க முடிவதாக அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அனுபம் சிபல் கூறியுள்ளார்.

  • Share this:
கொரோனா 2வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் முதல் அலையைக் காட்டிலும் 2வது அலையில் அதிக குழந்தைகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 10 வயதுக்கும் குறைவாக இருக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு கொரானா பாதித்த அறிகுறிகள் தென்படுவதில்லை .

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 95 விழுக்காடு குழந்தைகளுக்கு மிகவும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளில் 2வது அலை கொரோனா பரவலில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டதற்கான பிரத்யேக டேட்டா எதுவும் இல்லை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐ.சி.எம்.ஆரும் இளம் வயதினர் 2வது அலையில் அதிகம் பாதிக்கபடுகிறார்கள் என்பதற்கான தரவுகள் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், முதல் அலையைக் காட்டிலும் 2வது அலையில் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவது கண்கூடாக பார்க்க முடிவதாக அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அனுபம் சிபல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், குழந்தைகளிடம் கொரோனா அறிகுறி வித்தியாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கமான அறிகுறியாக கூறப்படும் இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை எனக் கூறியுள்ள அனுபம் சிபல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் காணப்படுதாக தெரிவித்துள்ளார்.நானாவதி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் துஷார் மனியார் (Dr. Tushar Maniar) பேசும்போது, 10 வயதுக்கும் கீழான குழந்தைகளுக்கு மிக லேசான கொரோனா பாதிப்பு அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாக தெரிவித்துளார். 10 வயதுக்கும் மேலான குழந்தைகளுக்கு 2 முதல் 3 நாட்கள் காய்ச்சல் இருப்பதாகவும், அவற்றில் பெரும்பாலானோருக்கு பாராசிட்டமல் மாத்திரை மூலம் குணப்படுத்தப்படுவதாகவும் விளக்கியுள்ளார். குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கான ஒரு சில அறிகுறிகளை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

1. 102 டிகிரி எஃப் காய்ச்சல்
2. வேகமாக சுவாசித்தல்
3. ஒரு நாளைக்கு ஆறு முறைக்கு குறைவாக சிறுநீர் கழித்தல்
4. போதுமான அளவு சாப்பிடாத குழந்தை
5. தடிப்புகள்
6. இருமல் முறைகளில் மாற்றங்கள்
7. எரிச்சல்
8. புதிதாக தலைவலித்தல்வீட்டில் யாருக்காவது கொரோனா பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கு முன்கூட்டியே பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அறிகுறிகள் இல்லையென கவனக்குறைவாக அல்லது அறிகுறிகள் தென்படும் வரை காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், இந்த முறை அதிகளவு குழந்தைகள் கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கியிருப்பதாக கூறப்படுவது குறித்து பேசிய மருத்துவர்கள், சமூகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது முக்கிய காரணம் எனத் தெரிவித்தனர்.

குழந்தைகளை எளிதில் தாக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் - கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்ன?

மேலும், முன்பை விட அதிகப்படியான கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால் குழந்தைகளின் பாதிப்பு தெரிய வருவதாகவும், பள்ளிக், கல்லூரிகள் திறக்கப்பட்டது மற்றொரு காரணம் எனவும் கூறியுள்ளனர். குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு என்பது 36 மணி நேரங்களுக்குப் பிறகே தெரியவருவதாக கூறியுள்ள மருத்துவர் விஷின் சம்ந்தானி, லேசான காய்ச்சல் மற்றும் சளி இருந்தால் தமாத்திக்காமல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Published by:Sivaranjani E
First published: