• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகள் ஏன் மற்றவர்களை துன்புறுத்துகிறார்கள்..? உளவியல் காரணங்கள்!

குழந்தைகள் ஏன் மற்றவர்களை துன்புறுத்துகிறார்கள்..? உளவியல் காரணங்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

இது அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விளையாட்டாக தோன்றினாலும், இதன் பின்னால் உளவியல்ரீதியான பல பாதிப்புகள் அடங்கியிருக்கிறது.

  • Share this:
பெரும்பாலும் வளர்ந்து வரும் குழந்தைகள் ஈ, எறும்புகள் முதல் சக நண்பர்கள் வரை ஓயாமல் துன்புறுத்துவதை பொழுபோக்காக செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் விளையாட்டாக தோன்றினாலும், இதன் பின்னால் உளவியல்ரீதியான பல பாதிப்புகள் அடங்கியிருக்கிறது. அவைகள் என்னவென்பதை விரிவாகக் காண்போம்.

மற்றவர்களை துன்புறுத்துவதற்கான காரணங்கள் :

முதலில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு அன்பு, ஒழுக்கம், உயர்ந்த நன்னெறி ஆகிய பண்புகளை ஊட்டி வளர்க்க வேண்டும். பெரும்பாலும் மனச்சோர்வடைந்த குழந்தைகளே, தங்களின் மனச் சோர்வைப் போக்கிக் கொள்வதற்காக விலங்குகள், சக நண்பர்கள் என அனைத்தையும் துன்புறுத்துகிறார்கள். ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மனச்சோர்வடையாமல் பார்த்துக் கொள்வது கட்டாயமாகும். இல்லையெனில் குழந்தைகள் மிகவும் கோபமடைந்து வாய் வார்த்தைகளாகவோ அல்லது உடல்மொழியாகவோ துன்புறுத்த தொடங்கிவிடுவார்கள்.

குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள் :

நீங்கள் உண்மையில் உங்கள் குழந்தைகளை சிறந்தவர்களாக வளர்க்க விரும்பினால், தினசரி அவர்களுடன் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுங்கள். அவர்களின் சிந்தனைகள், செயல்கள் மற்றும் அதற்குப் பின்னாலுள்ள நோக்கங்கள் ஆகியவற்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இதுவே அவர்களைத் திருத்துவதற்கான முதல் படி. ஆய்வுகளின் படி பொய், பொறாமை, மனஅழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தைகள் மற்றவர்களைத் துன்புறுத்துபவர்களாக மாறுகிறார்கள். ஆனால் நீங்கள் அவர்களை புரிந்து கொண்டால், அவர்களை திருத்துவது சுலபம்.



அதிகாரம் :

யாருக்குத்தான் அதிகாரத்தின் மீது ஆசையில்லை. பெரியவர்கள்தான் பணம், பதவி, அந்தஸ்து என்ற பெயர்களில் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள் எனில், அவர்களைப் பார்த்து பார்த்து வளரும் குழந்தைகளும் அவர்களைப் போலவே ஆக விரும்புகிறார்கள்.இது அவர்களின் சகாக்களை விட, தான் உயர்ந்தவன் என்ற எண்ணத்தை தருகிறது. ஆகையாலேயே அவர்கள் மற்றவர்களை அடக்கியாளவும், அல்லது துன்புறுத்தவும் செய்கிறார்கள்.

புகழ் :

மற்றவர்களை தனது சொல், செயல், சிந்தனை ஆகியவற்றால் வெற்றிக் கொண்டால், பள்ளியிலோ அல்லது சக குழந்தைகளின் மத்தியிலோ தான் பிரபலமாகலாம் என குழந்தைகள் நினைக்கிறார்கள். இதனால் விரைவில் புகழ் பெறலாம் என்ற நோக்கத்துடன், வாய் வார்த்தைகள் வழியாகவோ அல்லது அடி, உதை, கிள்ளு ஆகிய செயல்களின் மூலமோ பலம் வாய்ந்த குழந்தைகள், பலமற்றவர்களை துன்புறுத்துகிறார்கள்.

பிற குழந்தைகளின் தூண்டுதல் :

சில சமயம் பிற குழந்தைகளின் தூண்டுதல் காரணமாக, குழந்தைகள் தங்களின் சகாக்களுடன் திட்டுதல், அடித்தல், கிள்ளுதல், சண்டையிடுதல் ஆகிய செயல்களில் ஈடுபட்டு அவர்களை துன்புறுத்துகிறார்கள். இல்லையெனில் அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிடும் எனப் பயப்படுகிறார்கள். இதன் பின்னணியில் முரட்டுத்தனம் மிக்க பலம் வாய்ந்த, பிற குழந்தைகளின் தூண்டுதல் மட்டுமே முழுமையாக நிறைந்துள்ளது.



குடும்பப் பிரச்சனைகள் :

மோசமான குடும்பப் பின்னணியைக் கொண்ட குழந்தைகளும், சிறுவயதிலேயே மற்றவர்களை துன்புறுத்த தொடங்கிவிடுகிறார்கள். இதற்கு சிறுவயது முதல் தாய்-தந்தையர்களால் புறக்கணிக்கப்படுவது, எப்போதும் வீட்டில் சண்டை, சச்சரவு ஆகியவற்றை மட்டுமே காண்பது, பெற்றோர்களின் தீய பழக்கவழக்கம் ஆகியவையும் காரணமாக அமைகிறது. இதனால் மற்றவர்களிடம், தங்களின் சுயமரியாதையைக் காப்பாற்றி கொள்வதற்காகவே குழந்தைகள் அவர்களைத் துன்புறுத்தத் தொடங்குகிறார்கள்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் டிப்ஸ் இதோ..

இன்ப உணர்வு :

சில குழந்தைகள் விளையாடுவதற்கு எதுவும் இல்லாதபோது, ஒரு விளையாட்டு போல விலங்கினங்கள் அல்லது மனிதர்களை துன்புறுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இதனால் அவர்கள் மற்றவர்களின் துன்பத்தில் இன்பமடையும் மனநிலையைப் பெறுகிறார்கள். இப்படி அவர்கள் மற்றவற்றை துன்புறுத்துவதற்கு இன்ப உணர்வு, ஒரு பொழுதுபோக்கு ஆகியவைகளைத் தவிர மற்ற எந்த காரணங்களும் இல்லை.

குழந்தைகளின் துன்புறுத்தல் செயலை எப்படித் திருத்தலாம்?

முதலில் குழந்தைகள் மற்றவர்களை துன்புறுத்துவதற்கான காரணங்களைப் புரிந்து கொள்ளுதல், அவர்களை எளிதில் திருத்த உதவும். சில குழந்தைகள் விரைவாக திருந்திவிடுவார்கள். ஆனால் மற்றவர்களுக்கு நீங்கள் உறுதியான பிற வழிமுறைகளை கையாள நேரிடும். இது ஒவ்வொரு குழந்தையும், உளவியல் ரீதியாக எவ்வளவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்தது.



குழந்தைகளுடன் பேசுங்கள்:

நீங்கள் உங்கள் குழந்தைகளின் மற்றவர்களை துன்புறுத்தும் பழக்கத்தைக் கண்டறிந்தால், அதைப்பற்றி அளவுக்கு அதிகமாக துப்புத்துலக்குவதை விட்டுவிட்டு, அவர்களுடன் பேசுங்கள் .அவர்கள் ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என அவர்களையே கேட்டு அறியுங்கள். இது அவர்களை மேலும், மேலும் தவறு செய்யாமல் தடுக்கும். அதைப்போலவே செய்த தவறை ஒப்புக்கொள்வவதால், குறை ஏதும் நிகழப்போவதில்லை என அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.ஏனெனில் முதலில் தவறை ஒப்புக் கொண்டால்தான், அதன்பிறகு அதைத் திருத்த முடியும்.

குழந்தைகளை சரிசெய்ய மற்ற வழிகள்:

மற்றவர்களை துன்புறுத்துவதால், ஏற்படக்கூடிய விளைவுகளை குழந்தைகளுக்கு புரியவைக்க முயலுங்கள்.மேலும் அவர்களைத் தொடர்ந்து கண்காணியுங்கள். தனது சிறிய இன்ப உணர்வுக்காக அடுத்தவற்றை கொடுமைப்படுத்துவது நியாயம் இல்லை எனவும் அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

பள்ளி நேரத்திற்கு பிறகு குழந்தைகளை உற்சாகமாக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய எளிய வழிகள்!

மற்றவர்களை மதிக்கக் கற்றுக் கொடுங்கள்:

நாய், பூனை, ஈ, எறும்பு போன்ற விலங்கினம் முதல் சக மனிதர்கள் வரை பிறவற்றின் உணர்வுகளை மதிக்க குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். அந்தந்த உயிர்களுக்கான மரியாதையை அவர்கள் செலுத்துவதை ஊக்கப்படுத்துங்கள்.அதேசமயம் சக குழந்தைகளுடன் வேறுபட்ட கருத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதை ஊக்கப்படுத்துங்கள்.

குழந்தைகளுக்கு உதவுகள்:

மேற்சொன்ன அனைத்து வழிமுறைகளை கையாண்ட பின்னும், குழந்தைகள் மற்றவர்களை துன்புறுத்துவதை விடவில்லையெனில் உடனடியாக உரிய மருத்துவரை அணுகுங்கள். அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ள, இந்த துன்புறுத்தல் எண்ணத்தை உளவியல் மருத்துவத்தின் மூலம் விரட்ட முயலுங்கள்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: