Home /News /lifestyle /

குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும் போது அவர்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்..?

குழந்தைக்கு காய்ச்சல் இருக்கும் போது அவர்களை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்..?

குழந்தைக்கு காய்ச்சல்

குழந்தைக்கு காய்ச்சல்

மழைக்காலம் தொடங்கியதில் இருந்தே குழந்தைகள் அதிக காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுடன் வருவதை கண்காணித்து வருகிறோம். குறிப்பாக 5-7 நாட்களுக்கு மேல் நீடிக்க கூடிய, அதிக காய்ச்சலுடன் குழந்தைகள் சிகிச்சைக்கு வருகிறார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இப்பொதெல்லாம் குழந்தைகள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோயால் அடிக்கடி பாதிக்கப்படுவதும், இதனால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் படிப்பு பாதிக்கப்படுவதும், பெற்றோருக்கு பெருங்கவலையாக மாறி வருகிறது. மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே சுவாச தொற்று, இரைப்பை குடல் நோய்த்தொற்றுகள், டைபாய்டு, மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் குழந்தைகளை படாய்படுத்துகின்றன. போதாக்குறைக்கு தக்காளி காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், குரங்கு அம்மை போன்ற குழந்தைகளை எளிதில் தாக்கக்கூடிய நோய்களும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

குழந்தைகளுக்கு அடிக்கடி இதுபோன்ற தொற்றுநோய்கள் ஏற்படுவது தொடர்பாக எஸ்ஆர்சிசி குழந்தைகள் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மகேஷ் பால்சேகர் கூறுகையில் “மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் அதிகமாக இருந்தாலும், இந்த ஆண்டு ஒரே நேரத்தில் பல வைரஸ்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே குழந்தைகள் எளிதில் தொற்றுநோய்களுக்கு ஆளாக, கொரோனா காலக்கட்டத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கியது நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்திருக்கலாம் அல்லது புதுப்புது தொற்று நோய்கள் அதிகரித்து வருவதாக இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேதாந்தா மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல மருத்துவர் வினீத் குவாத்ரா கூறுகையில், “மழைக்காலம் தொடங்கியதில் இருந்தே குழந்தைகள் அதிக காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுடன் வருவதை கண்காணித்து வருகிறோம். குறிப்பாக 5-7 நாட்களுக்கு மேல் நீடிக்க கூடிய, அதிக காய்ச்சலுடன் குழந்தைகள் சிகிச்சைக்கு வருகிறார். இது நாளடைவில் டைபாய்டு அல்லது டெங்கு காய்ச்சலாக கூட மாறலாம். ஏனென்றால் சாதாரண காய்ச்சலுக்காக வந்த நிறைய குழந்தைகளுக்கு பரிசோதனையில் கோவிட் பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. இன்ஃப்ளூயன்ஸா ஏ, பன்றிக் காய்ச்சல், இரைப்பை குடல் அழற்சி மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி, டெங்கு, டைப்பாய்டு போன்ற தொற்று நோய்கள் குழந்தைகளை எளிதில் தாக்கக்கூடியவை” என தெரிவித்துள்ளார்.



காய்ச்சலுக்கான ஆரம்ப கட்ட சிகிச்சைகள் என்னென்ன?

தற்போது நோய் தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டாலும் பெற்றோர்கள் அதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் தொடக்கத்தில் சாதாரண காய்ச்சல், சளி, இருமல், வாந்தி போன்ற அறிகுறிகள் கூட தீவிரமான நிலைக்கு செல்லலாம்.

* காய்ச்சல் மருந்து கொடுத்தும், 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

* காய்ச்சலுக்கான அடிப்படை மருந்துகளான பாராசிட்டமால் போன்ற மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துக்களை கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.

* குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் கட்டியை பயன்படுத்தி குழந்தையை குளிக்கவோ, குடிக்கவோ வைக்க கூடாது. காய்ச்சல் குறையும் வரை வெதுவெதுப்பான நீரைக் கொண்டு துணியால் உடலை துடைத்து சுத்தப்படுத்தலாம்.

கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா..? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்..?

* காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட 4 முதல் 6 மணி நேரத்திற்கு பாராசிட்டமால் கொடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும் குழந்தைக்கு 24 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

* காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு லேசான ஆடைகளை அணிவித்து, காற்றோட்டமான அறையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக குழந்தையை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்.

லேசான காய்ச்சல் என்றால் 2 முதல் 3 நாட்களில் குணமாகிவிடும், ஒருவேளை தீவிரமான அறிகுறிகள் தென்பட்டால் 48 மணிநேரத்திற்குள் மருத்துவரை சந்திக்க வேண்டும். எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருந்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.



தடுப்பூசியின் முக்கியத்துவம்:

இந்தியக் குழந்தை மருத்துவக் கழகம் 6 மாத வயதுக்குப் பிறகு அனைத்து குழந்தைகளுக்கும் ‘ஃப்ளூ’ அல்லது இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசியை பரிந்துரைக்கிறது மற்றும் 5 வயது வரை ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி செலுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. வளர்ந்த குழந்தைகளுக்கு நாள்பட்ட நோய்கள் அல்லது குறைவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் மட்டுமே காய்ச்சல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட என்ன காரணம்..? எப்படி எடையை குறைக்கலாம்..?

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது எப்படி?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் ஆரோக்கியமான உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல உணவு, தினசரி உடல் செயல்பாடு, போதுமான தூக்கம், மன அழுத்தத்தை சரியான முறையில் நிர்வகித்தல் ஆகியவை குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கான அனைத்து முக்கியமான தடுப்பூசிகளும் சரியான நேரத்தில் கொடுக்கப்படுவதை உறுதிசெய்வது, குழந்தைகள் நோய் தொற்றுக்கு ஆளாகாமல் தடுக்க உதவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Baby Care, Fever

அடுத்த செய்தி